Ad Widget

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள் அதிகரிப்பு?

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையொன்று இல்லாத காரணத்தினால், அவற்றின் விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படுகின்ற மாஜரின் மற்றும் மரக்கறி எண்ணெய்க்கான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பான் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக...

பருப்பு, ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நீக்கம்!!

மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் சாந்தா திசானநாயக்க கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய மைசூர்...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க ஒப்புதல்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கோதுமை மாவுக்கு பிறிமா நிறுவனத்தால் வழங்கப்பட்ட 3 ரூபாய் விலைக்கழிவு இடைநிறுத்தகப்பட்ட நிலையில் இந்த அனுமதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 450 கிராம்...

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை – வர்த்தமானி அறிவித்தல் இரத்து

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பில், மொத்த வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை 100 ரூபாய் ஆக இருந்தது, பக்கெட்டுகளுக்கு 105 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபையினால் குறித்த வர்த்தமானியை இரத்து செய்யும் வகையிலான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடன் தவணைப் பணம் வசூலிப்பதில் நிதி நிறுவனங்கள் – வாழ்வாதாரம் இல்லாதோர் பாதிப்பு!

நுண்நிதக் கடன்கள் மற்றும் நிதி நிறுவன கடன்களை வசூலிப்பதற்கு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடிகளை தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால பகுதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மக்கள் பெற்ற கடனுகளுக்கான தவணை கட்டணங்களை மூன்று மாத காலத்திற்கு மீள பெற வேண்டாம் என அரசினால் மத்திய வங்கி ஊடாக...

தங்கநகை அடகு முற்பணத்துக்கு அதிகூடிய மாதாந்த வட்டி ஒரு சதவீதம் – மத்திய வங்கி

நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள பொருளாதார நிலமைகளைக் கருத்திற்கொண்டு தங்க நகை அடகு முற்பணத்துக்கான அதிகூடிய மாத வட்டியாக ஒரு சதவீதத்தை இலங்கை மத்திய வங்கி நிர்ணயித்துள்ளது. இந்த புதிய வட்டிக் குறைப்புநேற்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவேண்டும் என்று அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளிடமும் இலங்கை மத்திய வங்கி...

வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான வேண்டுகோள்!

வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையானது இலங்கையில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது....

மஞ்சள் தூளுக்கு விலை நிர்ணயம்

மஞ்சள் தூள் ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் தூளுக்கான இந்த விலை நிர்ணயம் இன்று ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் பரவலையடுத்து சந்தையில் மஞ்சள் மற்றும்...

சுழற்சி முறையில் நடமாடும் வங்கிச் சேவை இன்று ஆரம்பம்!! எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி மக்கள் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும்!!

யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் நடமாடு வங்கிச் சேவையை ஹற்றன் நஷனல் வங்கி இன்று (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த நடமாடும் பணம் மீளப்பெறும் சேவையை நடத்துவதாக வங்கியின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த யாழ். வர்த்தகர்கள் நால்வர் மீது நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் முறைப்பாட்டின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. “யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின்...

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இது தொடர்பான வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, 1 கிலோ கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லரை விலை 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டரிசி...

யாழ்ப்பாணத்தில் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை- யாழ். வர்த்தக சங்கத் தலைவர்

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு வர்த்தகப் போக்குவரத்து தடைப்படாதவரை அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என யாழ். மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் ஜனக்குமார் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிவேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “இப்போதும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு குறையும் இல்லாமல் பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன....

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை – எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி பணம் மீளப்பெற முடியும்

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் நாளை நடமாடு வங்கிச் சேவையை நடத்த உள்ளதாக தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளை அறிவித்துள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த நடமாடும் பணம் மீளப்பெறும் சேவையை வழங்கப்படவுள்ளது என்று தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர்...

தனிநபர் மற்றும் வியாபார நிறுவனங்கள் பெறும் கடன் சலுகைகள் பற்றி மத்திய வங்கி விளக்கம்

50 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஆறுமாத மீள்நிதியிடல் வசதியை உருவாக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. கொவிட் – 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் நிதி நிறுவனங்களுக்கு வழங்குகின்றது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொவிட் – 19இன்...

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம் – மீறினால் கைது!

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு வௌியே விற்பனை செய்யப்படும் போது, சில்லறை விலையாக ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபாய் மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபாய், லீக்ஸ் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த...

சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு Working Capital தேவைக்காக 4 வீத வட்டியுடனான கடன்!!

மத்திய வங்கியால் 24.03.2020 வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இது. சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு Working Capital தேவைக்காக 4 வீத வட்டியுடனான கடன்களை 6 மாதம் வட்டியின்றியதாகவும் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது அதற்கான விண்ணப்பங்களை 30.4.2020 வரை வழங்க வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. கிடைக்கும் விண்ணப்பங்களை 45 நாட்களுக்குள் இறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்று நிருபத்தினை பார்வையிடுவதற்கு

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கே கொண்டு வந்து பொருள்கள் வழங்கும் வணிக நிலையங்களின் விவரம் வெளியீடு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உலர் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் விவரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மற்றும் மருந்துகள் தொடர்பில் தொலைபேசி ஊடாக ஓடர் வழங்கினால் வீடுகளுக்கு கொண்டு அவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ்...

மக்கள் வங்கியின் யாழ்.பிரதான வீதிக் கிளை நாளை திறக்கும்!!

மக்கள் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கிளை நாளைக் காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை வாடிக்கையாளர் சேவைக்காக திறந்திருக்கும் என்று யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் அறிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் அத்தியாவசி சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் அவை ஊரடங்கு நடைமுறையில் உள்ள...

பண்டிகை காலத்தில் புடவைகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும்

எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு தேவையான புடவைகளை கொள்வனவு செய்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்வது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பெரும் உதவியாக அமையும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். புடவை முதலானவற்றை கொள்வனவு செய்யும் பொழுது சில வேளைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புடவைகளை தொடுதல், அந்த...

வங்கிகளின் திடீர் செயற்பாடுகள்! குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்!!

இலங்கையில் அனைத்து வங்கிகளில் குறைந்தபட்ச பணம் இல்லாத வாடிக்கையாளர்களின் கணக்குகளில் சேவைக் கட்டணம் அறவிடப்படவுள்ளது. அரசாங்க வங்கி உட்பட தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பை வைப்பதற்கு தவறியமையினால் சேவை கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவிக்ப்படுகிறது. அவ்வாறு சேவை கட்டணம் அறவிடுவதற்கான அதிகாரம் வங்கிகளிடம் உள்ளதாக என இலங்கை மத்திய...
Loading posts...

All posts loaded

No more posts