- Saturday
- February 22nd, 2025

நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு,உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வெள்ளை முட்டையின் விலை 28-35 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 870-1,000 ரூபாவாகவும்,ஒரு...

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் நடைபெற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”15ஆவது வருடமாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சி தொடர்ந்து மூன்று தினங்கள் யாழ்ப்பாணம்...

உணவுப்பொதி, பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 40 ரூபாவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் முட்டை ரொட்டி ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேக்கரி உற்பத்தி உணவுப்பொருட்களில் எந்தவிதாமாற்றமும்ம மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது....

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதன் புதிய விலை...

வரலாற்றில் முதன்முறையாக இந்தியன் ஒயில் நிறுவனமான IOC ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன்படி, கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த எரிபொருள் தொகை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெற்றோல் வகை XP 100 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை (15) 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சைபழம் விநியோகிக்கப்படுகின்றது. சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம் கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆக...

பல்பொருள் அங்காடிகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடுவதை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு கடந்த 28ம்திகதி அறிவித்துள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதிக்கான...

வட மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 80,000 கிலோகிராம் சீனி அனுப்பப்பட்டிருந்த அதில் தரமற்றதாகக் கருதப்படும் 30,000 கிலோகிராம் சீனி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார்....

உள்ளுர் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நவம்பர் மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட முந்தைய வர்த்தமானி அறிவித்தல், இதன் மூலம் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. பொதி செய்யப்படாத 1 கிலோ...

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலைகளில் இம்முறையும் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தெரிவித்துள்ளது. அதன்படி உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் 4ம் திகதி புதிய விலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை நேற்றைய தினம் ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் நேற்று...

வெளிமாவட்ட வியாபாரிகள் , உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் , இது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ் உற்பத்தியாளர்களை நாடி வரும் வெளிமாவட்ட வியாபரிகள் , அவர்களிடம் இருந்து உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து விட்டு , பணத்திற்கு பதிலாக காசோலைகளை...

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 323.03 ஆகவும் விற்பனை விலை 336.16 ஆகவும் பதிவாகியுள்ளது. மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 329 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி 24ஆம் திகதி டொலருக்கு...

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று (செவ்வாய்கிழமை) முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

பால்மா விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் ரூபாவின் ஸ்திரத்தன்மைக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேவையான பால்மா கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதியின் பின்னர் செலவுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும்...

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து வகையான சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையினை 3,000 ரூபா வரையில்...

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (29.06.2023) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது. செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் கடந்த சில கிழமைகளாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையானது 149,000 ரூபா என்ற நிலையிலேயே காணப்பட்டது. இவ்வாறான சூழலில் இன்று...

All posts loaded
No more posts