- Monday
- February 24th, 2025

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர். பின்னர் குருதியினை கடதாசி மூலம் துடைத்துவிட்டு கிருமி தொற்று நீக்கி...

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் (08) மகளிர் தினத்தை துக்க தினமாக கடைபிடித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம்...

நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு என்பது ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை உலகிற்கு காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்றும் தெரிவித்தார். விவசாயத்தை தமது ஜீவனோபாயமாக கொண்டு வாழ்ந்துவரும் மக்கள், இயற்கை...

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். 12 இந்திய மீனவர்களும் B/202/2022 ,B/203/2022...

இராணுவத்தினால் கண்ணன் தேவாலய வளாகத்தில் சனிக்கிழமை (05) கிளிநொச்சியை சேர்ந்த 42 வறிய குடும்பங்களுக்கு பிரதேசத்திலுள்ள நன்கொடையாளர்களின் உதவியுடன் உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி சஞ்சய வணசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 571, 572...

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நேற்று (வியாழக்கிழமை )பிற்பகல் 2 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி லெனின் குமார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொது மக்களை அவதானமாகவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார பிரிவினர் பொது மக்களை கேட்டுள்ளனர். கடந்த 24ம் திகதி மாவட்டத்தில் 66 தொற்றாளர்களும், 25ம் திகதி 40 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளனர். தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டவர்களில் மேற்படி எண்ணிக்கையான தொற்றாளர்கள்...

ஜனாதிபதியின் பசுமை விவசாய செய்கை திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தினை பயன்படுத்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று 26.01.2022 சிறப்புற நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடல் கரையினை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள 591 ஆவது படைப்பரிவின் தலைமையக முகாமின் பின்...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணியளவில் பரவிய பாரிய தீ பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில்...

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டார் என்று அவரது கணவர் பொலிஸில் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார். பெண்ணின் தலையில் காயம் காணப்பட்டதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா அறிக்கையிட்டுள்ள நிலையில் பொலிஸாரின் விசாரணையில் பெண்ணின் கணவர் குற்றத்தை...

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி குணரட்னம் கார்த்தீபன் எனும் 24...

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார். சந்தேக நபர் இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் அதற்கான பணத்திற்காகவே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஓட்டுத் துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து ஒரு சோடி...

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு இன்று கவயீர்ப்புப் பேரணியை முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு சிவில் சமூக அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தின் இடைநடுவே வீதியில் பயணித்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி வழங்கிய உறுதிமொழிகளையடுத்து பேரணி முடிவுக்கு வந்தது. புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த யோகராசா நிதர்ஷனா...

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கான கண் பரிசோதனை கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 370 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நாளன்று 320 மாணவர்கள்...

முல்லைத்தீவு, மூங்கிலாறில் பற்றைக்காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ வல்லுநர் அறிக்கையிட்டுள்ளார். அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். யோகராசா நிதர்ஷனா (வயது-12) என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். திருகோணமலையில் மாணவர் விடுதியில்...

கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துடன் இளம்பெண் ஒருவர் உட்பட்ட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதேவேளை, குறித்த டிப்பர் வாகனத்தினை சிலர்...

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த உண்மைகள் திருபுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் இராணுவத் தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. இராணுவ வீரர்களுடன் பேசியவாறு பின்னோக்கிச் சென்றவேளை, ஊடகவியலாளர் தனது மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி...

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 6 நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்பாசன குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட இரணைமடு குளம் 31 அடி 3 அங்குலமாக உயர்ந்துள்ளது. 25 அடி...

All posts loaded
No more posts