- Sunday
- February 23rd, 2025

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன் காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். (more…)

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை இடைமறித்து தட்டயமலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமது கிராமத்திற்கு குடிநீர் மற்றும் வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுதருமாறு கோரியே தட்டயமலை மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்த கிராமமக்கள், முதலமைச்சர் பயணித்த வாகனத்தை இடைமறித்து தமது...

கிளிநொச்சியில் பௌத்த விகாரை ஒன்றும் பௌத்த தொல்பொருட்களும் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். (more…)

வடமாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் சி.வி.விக்னேஸ்வரன், முதன்முறையாக, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்தார். ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார். ஒட்டுசுட்டான் பகுதியில் பாவட்டிமலை பகுதியில் மூன்று இடங்களில் பாரிய அளவில் கருங்கல் தோண்டுதலும், மணல் அகழ்தலும் இடம்பெற்று வருவதனால்,...

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர் பெறுவதாகச் சர்வதேசத்துக்குக் காட்ட முயற்சிக்கின்றது. (more…)

இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், இன்று புதன்கிழமை (28) காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகியது. (more…)

வட மாகாணசபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளையின் வீடு, இன்று புதன்கிழமை (28) இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சுமார் 5 மணி நேரங்களாக சோதனையிடப்பட்டுள்ளது. (more…)

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதன்கிழமை நடத்தவுள்ள போராட்டத்துக்கு வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு முழு ஆதரவை வழங்குமென குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். திட்டமிட்டு இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையிலும் அனைவரும் ஒன்றிணைந்து...

தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை இன ரீதியான கண்ணோட்டத்தில் நோக்கும் அரசு, தனது இராணுவ மற்றும் பொலிஸ் பலத்தை பிரயோகித்து நசுக்க முயல்கின்றது. (more…)

இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். (more…)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு சமுகமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவ்வழக்கு சோடிக்கப்பட்டதென இனங்காணப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலை நீதிமன்ற வளாகத்தின் முன் ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அது நீதிமன்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய...

நேற்றுமுன்தினம் ஊடகங்களில் வெளியாகிய ஒளிப்படங்களில் இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான தமிழீழ தேசிய தொலைக் காட்சியின் பணியாளர் இசைப்பிரியாவுக்கு (more…)

விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்களை கைது செய்து வருவதால் உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். (more…)

கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா நேற்று வியாழக்கிழமை (01-05-2014) எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

கிளிநொச்சி அறிவியல் நகரில் பாற்பொருட்கள் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (29.04.2014) வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைத் திறந்து வைத்துள்ளார். (more…)

முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் வித்தியாபுரம் விவசாயக் குடியிருப்புக்கு நீர் விநியோகிப்பதற்கான புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. (more…)

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இராணுவ முகாமிற்கு வருமாறு இராணுவத்தினர் கட்டாய அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)

வவுனியா ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகரன் தவமலர் என்ற 42 வயதுடைய தாயாரும், அவருடைய மகளாகிய யதுர்சினி என்ற 16 வயது பாடசாலை மாணவியும் புதன்கிழமை இரவு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

All posts loaded
No more posts