- Sunday
- February 23rd, 2025

வடக்கு – கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டத்தின் 44 நாளாவது நாள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு – கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி 44 ஆவது நாளான இன்று கிளிநொச்சி கோரக்கன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்றது. வடக்கு...

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என கடந்த ஆய்வுகளில் இனங்கான ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார் . உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து...

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. செல்லுபடியற்ற QR ஐ பயன்படுத்தி, எரிபொருள் பெறுவதற்கு முயன்ற நிலையில் முகாமையாளர் எரிபொருள் வழங்க மறுத்துள்ளார். இந்த நிலையில், சந்தேக நபர் ஒருவர் எரிபொருள் நிலையத்திற்குள் அத்துமீறி உள் நுழைந்து முகாமையாளரை தாக்க...

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று (31) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது. காணியில் நிலத்தில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நாவலர் வீதியில் உள்ள (UNHCR) அலுவலகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு யாழ். பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது. இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் கிளிநொச்சி காணாமல்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களை கடக்கின்ற நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று (30) தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர்...

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்ட போது கடும் போட்டிகளுக்கு...

முல்லைத்தீவு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமிற்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் திரண்டு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 617 ஏக்கர் நிலம் உள்ளடங்குகின்ற குறித்த கடற்படை முகாமில் பெரும்பாலான பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களாகும்.இதில் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக நில அளவை செய்து...

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம்,கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கும், பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோமீற்றர் இடைவெளி காணப்படுகிறது இவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ள ஏ -9 வீதியூடாக பல...

சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் கையளிக்க சென்ற விவசாயிகள், இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு, அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், அறுவடைக்கு தேவையான டீசலை விரைவாக பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்....

ஊடகவியலாளர் என அடையாளம் காட்டி, உள்நாட்டு விசாரணையை வலியுறுத்த கோரியோர் விரட்டியடிக்கப்பட்டனர். கிளிநொச்சியில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் போராட்டம் ஆரம்பமாகவிருந்த இடத்தில் இவ்வாறு தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளம் காட்டி, போராட்டத்தை திசை திருப்ப முற்பட்டவர்களே இவ்வாறு காணாமல்...

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவர் தனது பிள்ளையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் விநியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலரால் அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசும்...

போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய் முல்லைத்தீவு உடையார் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தோட்டம் செய்வதற்காக உரிமையாளரால் காணியை கனரக இயந்திரம் மூலம் பண்படுத்தப்பட்டபோதே நிலத்தில் புதைக்கப்பட்ட பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையை அடுத்து...

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் நேற்று (07) நிறைவு பெறும் நேரத்தில் குளவி கூடு கலைந்து தாக்கியதில் காயமடைந்த 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது....

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியில் இருந்து கலையரசி எனும் தமிழ் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக்குத் தெரிவாகியுள்ளமை பல்வேறு தரப்புகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி...

வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்றய தினம் அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா...

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர். கிளிநொச்சிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ள நிலையில்...

கொழும்பு காலிமுகத்திடல் “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பத்தரே இவ்வாறு...

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்ற நிலையில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்டது. அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் . இந்த நிலையில்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சுகந்தன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று மேற்படி சிகிச்சைகளை பெற்று வந்த பொது மக்கள் இனிவரும் காலங்களில் குறித்த சிகிச்சைகளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்...

All posts loaded
No more posts