- Monday
- November 25th, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்களே நடத்தப்படவுள்ளன. 2011ஆம் ஆண்டு வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட போது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் இடைநிறுத்தி...
கிளிநொச்சியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளன. அதன்மூலமாக சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. தேசிய அபிவிருத்தி வங்கியின் உதவியில் சுமார் 3.3 பில்லியன் ரூபா செலவில் இந்த இரண்டு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி வள்ளி முனை,புலோப்பளை ஆகிய இடங்களிலேயே காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
உங்களுக்கு இங்கேயே காணி தர நடவடிக்கை எடுகிறோம். எவராவது காணி தருவதாக கூறி அழைத்து செல்ல முற்பட்டால் உடன் எமக்கு அறிவியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தின் மக்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்த போது அம் மக்களை வேறு இடங்களுக்கு மாற்றி குறித்த காணியை வேறு திட்டங்களுக்காக...
தற்போது இலங்கையின் பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள - வடமாகாணத்தைச் சேர்ந்த - அரசியல் கைதிகளினதும் உறவினர்கள் நேற்று வியாழக்கிழமை (29) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி, 'தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர் ஒன்றியம் - வடமாகாணம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இந்த அமைப்பின் தலைவராக கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி செல்லையா பவளவள்ளி (தொலைபேசி இலக்கம் 0774823465),...
முறையற்ற வகையில் அனுமதி பெறப்பட்டு பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு நடவடிக்கை வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 'பூநகரி கௌதாரிமுனை பகுதியில் மணல் அகழ்வதற்கான அனுமதி பிரதேச செயலம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை...
வட மாகாண விவசாய அமைச்சால் நடத்தப்பட்ட உழவர் திருநாள் போட்டியில், வட மாகாணத்தில் சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை இராமன் சுதர்சினி என்ற பெண் பெற்றுக்கொண்டார். யுத்தத்தில் கணவனை இழந்த இவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் அம்பாள்புரத்தில் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றார். இவரது கோழிப்பண்ணையை நாளடைவில்...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் சமய முறைப்படி திருமணத்தில் இணைந்துகொண்டவர்களுக்கான சட்ட ரீதியான திருமணப்பதிவு வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இராசேந்திரம் குருபரன் தலைமையில் இத்திருமணப்பதிவு நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழுவின் ஒழுங்குப்படுத்தலில் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. திருமணப் பதிவுகளுக்கு அழைக்கப்பட்ட 19 சோடிகளில் கலந்து கொண்ட 12 சோடிகளுக்கு...
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் சங்க ஊழியர்களுக்கும் இடையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் புதன்கிழமை (21) பிற்பகல் கைகலப்பு ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வட்டக்கச்சி வழித்தட சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை பேருந்தை, வட்டக்கச்சியில் இடைமறித்த தனியார் பஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள்,...
இரணைமடுக்குளத் திட்டத்தின் நோக்கம், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாத்திரம் அல்ல. யாழ்ப்பாணத்துக்கான உணவுப்பாதுகாப்பும் இரணைமடுக் குளத்திலேயே தங்கியுள்ளது. இதனால்தான், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் எடுத்து வரும் மத்திய அரசின் திட்டத்துக்குப் பதிலாக நாம் மாற்றுத் திட்டத்தை முன்வைக்க நேர்ந்தது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இரணைமடுக்குளத்தின் 95ஆவது...
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தர வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா பொது விளையாட்டு மைதானத்தில் கூடிய உறவுகள் அங்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தினர். தொடர்ந்து பாப்பரசரைத் தரிசித்து தமது நிலைமையை எடுத்து விளக்குவதற்காக உறவுகள் மடு நோக்கிப் பயணமாகினர். காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று எந்தப் பதிலும் இல்லாது, அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா...
கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியில் திங்கட்கிழமை (12) மதியம் இடம்பெற்ற விபத்தின் போது, வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கரடிப்போக்குச் சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, வீதிக்கு வரும்போது, கன்ரர் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது....
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியோரங்களில் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 'வடக்கில் எமக்கு புதிய சூரியன்' எனும் தலைப்பிடப்பட்டிருந்த இந்த துண்டுப் பிரசுரங்களில் விடுதலைப் புலிகள் இயங்கத்தின் உத்தியோகபூர்வ சின்னம் மாத்திரமே பொறிக்கப்பட்டிருப்பததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு...
தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி., தெரிவித்தார். தான் கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை...
கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீதும் சிறுவர்களின் மாமன் மீதும் படைச்சிப்பாய் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குறித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுவர்களின் தயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாலை 3.30 மணியளவில்...
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்று இரவு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆறு வயது சிறுகுழந்தை உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலை நடத்திய சிப்பாய் மனநிலை பாதிக்கப்பட்டவரென கூறி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. அந்தப் பகுதியினில் தையலகம் நடத்தி வந்திருந்த பொதுமகன் ஒருவரை சிப்பாயொருவர் சீருடையுடன் வந்து தாக்கியுள்ளார். அதில் சிவராசா(வயது...
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அடிகாயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாகக் காணப்பட்டவர் வவுனியா, கத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.ரெனி (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேசன் வேலைசெய்து வரும் இவர் கனகராயன்குளம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். வீட்டு உரிமையாளர் நேற்று நண்பகல்...
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறு சுற்றாடல் பிரச்சனைகள் காணப்படுவதாகவும் எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறுபட்ட சுகாதாரப் பிரச்சனைகள் காணப்படுகின்றன. முறையாக திட்டமிடப்படாத திண்மக்கழிவு அகற்றல் நடைமுறைகள் மாவட்டத்தில் இருப்பதுடன், சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களின்றி பல்வேறு தொழிற்சாலைகள், தொழில்...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் உள்ளிட்ட நால்வர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். உப தவிசாளர் ரிஷிதாசன், உறுப்பினர்களான பேரின்பகரன், சிவராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த...
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்திப் பயனாளிகளை, சமுர்த்தி முத்திரை, வீடமைப்பு திட்டம் வழங்குவதாகத் தெரிவித்து பிரதேச செயலகத்துக்கு அழைத்த சிலர் அவர்களிடம் மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளனர். தேர்தல் பிரசாரம் நடப்பதாக அறிந்துகொண்ட பிரதேச செயலக நிர்வாகத்தினர் சம்பவம் குறித்து அரச அதிபருக்குத் தெரியப்படுத்தி, அவரின் அனுமதியுடன் கூட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம்...
கிளிநொச்சி மாவட்ட வெளிக்கள பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு ஜம்தாயிரம் ரூபாவிற்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரின் கவனத்திற்கு குறித்த உத்தியோகத்தர்களினால் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அரச வெளிக்கள பெண் உத்தியோகத்தர்களுக்கும் விரைவாக மோட்டார் சைக்கிள்களை வழங்கும் வகையில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர்...
Loading posts...
All posts loaded
No more posts