- Sunday
- February 23rd, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவர் மீது மதுபோதையில் வந்த மூன்று பொலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் இது தொடர்பாக முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் இதற்கு நீதியை பெற்றுத் தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த...

விஸ்வமடு தேராவில் இராணுவ முகாமிற்கு அருகில் பிரதேசவாசிகள் குழுவினால் இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், குறித்த நபர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், இராணுவ அதிகாரிகள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பொலிஸ் அதிகாரிகள் வருவதற்கு தாமதம்...

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இருவர் மீது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) காலை வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் சுரேஷ் என்ற 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த இளைஞனை பிரதேசவாசிகள்...

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் கேப்பாப்புலவு இராணுவ முகாமின் பிரதான வாயிலின் முன்பாக இடம்பெற்றுள்ளது. இதன் போது எமது நிலம் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, எங்கள் சொந்தக் காணிகளுக்குள் இராணுவ முகாம் வேண்டாம் உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகளைத்...

புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் ஊழியர்களின் முயற்சியின் பயணாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 1200 பணியாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தீ ஏற்பட்ட வேளையில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஊழியர்களின் கடின முயற்சியால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்போது மின்சாரம் தாக்கியதில் பணியாளர்...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்றைய கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மதஸ்தலங்களுக்கும் விஜயம் செய்தனர். மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில்,இயக்குனர் எஸ்.அன்ரன் அடிகளாரின் ஒருங்கினைப்பில் மன்னாரில் இருந்து சர்வ மத தலைவர்கள் உள்ளடங்களாக குழு ஒன்று நேற்று (திங்கட்கிழமை) காலை மன்னாரில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்றனர். மன்னார்...

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழான ஒதுக்கீடு பிரதேசங்களில், சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டினால், அங்கு அமைதியின்மை நிலவியது. நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதனை, அழிப்பதற்காக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் சென்ற வேளை, அவர்களுக்கும் சட்டவிரோதச் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. ஆரம்பத்தில் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளும்போது குறித்த அதிகாரிகளால் எந்த விதமான...

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே...

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் நேற்று (08) முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோடு...

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று (ஞாயிற்க்கிழமை) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாவீரர் நிகழ்வை முன்னிட்டு இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பெற்றோர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுடிருந்தனர்.

புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த (11.10.2022) கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்று (19.10.22) மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில்...

முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மல்லாவி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனிச்சாமிகுளம் பிரதேசத்தில் மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது கைது...

ஏழுநாள் காய்ச்சல் காரணமாக பிறந்து எட்டுமாதங்களேயான ஆண்குழந்தை உயிரிழந்துள்ளது கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த எட்டுமாத குழந்தைக்கு கடந்த ஏழுநாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டது. இதனை அடுத்து கடந்த 14 ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ள நிலையில் அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்...

கொழும்பில் இருந்து சென்ற விசேட நில அளவையாளர் குழுவொன்று இரகசியமாக குருந்தூர் மலையில் நில அளவை செய்வதாக தகவல் வெளியாகிய நிலையில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஸ் உள்ளிட்டோர் குருந்தூர்மலை அளவீட்டை தடுத்து நிறுத்தும் நோக்கோடு அப்பகுதிக்கு சென்றுள்ளனர். கொழும்பிலிருந்து சென்ற விசேட நில...

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு ஆதரவான கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முல்லைத்தீவில் பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் அங்கு ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்த பொலிஸார்...

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நேற்று முன்தினம்(03) கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தொடர் போராட்டத்தினை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில்...

முல்லைத்தீவு - தண்ணீர்முறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உட்படுவதாக தெரிவித்து தண்ணிமுறிப்பு கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்ததோடு கவனயீர்ப்பிலும் ஈடுபட்டது. இதன்போது வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம், பிரிக்காதே பிடிக்காதே தமிழர் தாயகத்தை பிரிக்காதே, குருந்தூர் மலை...

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல்...

All posts loaded
No more posts