- Tuesday
- November 26th, 2024
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் (இலக்கம் 2) அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையில் மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பு மாணவர்களை கடுமையாகத் தாக்கி விசாரணைக்கு உட்படுத்தியதில் தாக்கப்பட்ட மாணவர்கள் நான்கு பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மேற்குறித்த பாடசாலையின் அதிபரின் ஐம்பதாயிரம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை காணவில்லை என தெரிவித்து சந்தேகம் என்ற...
முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் விதமாக வடமாகாண விவசாய அமைச்சால் ரூபா 5 மில்லியன் பெறுமதியான நவீன நெல்அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான குறைதீர் நடமாடும் சேவை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01.12.2015) நடைபெற்றது. இதன்போது, நெல்அறுவடை இயந்திரத்தை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஒட்டுசுட்டான் ஒருங்கிணைந்த...
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் பிற்பகல் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரையும் தொடர்ந்தது. நேற்றுக் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடாநாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள்...
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத் துணைப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முன்பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தைகள் இராணுவச் சின்னம் பொறித்த சீருடையுடனேயே செல்கின்றனர். இது சரியானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் செயற்பாடானது தமிழ்க்...
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று என்ற...
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் நீண்ட காலமாக உரிய அனுமதிப் பத்திரங்களின்றி அரச காணிகளில் குடியிருந்து வந்த 7 குடும்பங்களை அந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். அரசுக்குச் சொந்தமான காணிகளில் இந்தக் குடும்பங்கள் அடாத்தாகக் குடியேறியிருப்பதாகத் தெரிவித்து, அரச காணிகள் மீளப் பறித்தல் சட்டத்தின் கீழ்,...
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் பயனாளிகள் அதிகாரிகளின் முறைக்கேடுகளுக்கும், உதாசீனங்களுக்கும் ஆளாகிவருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.எனவே, இவ் விடயம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம் குறித்து டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,...
கனடாவில் வசிக்கும் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியை சேர்ந்த கைலாயபிள்ளை குடும்பத்தினரால் தமது குடும்ப அங்கத்தவர்கள் நினைவாக வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உதவி அமைப்பாளர் மயில்வாகனம் விமலாதரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேற்படி நிகழ்வில் பாடசாலையின் உபஅதிபர்,...
தற்போது சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் மீள்குடியேற்ற மாவட்டம் என்பதன் காரணமாக வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட குழிகளில் மழைவெள்ளம் தற்போது தேங்கிநிற்கின்றது. 'இக்குழிகளில் சிறுவர்கள் தவறிவிழுகின்ற அபாயநிலை உள்ளதால் பெற்றோர்கள் வெள்ளம் நிறைந்த பகுதிகளுக்கு தமது பிள்ளைகளை செல்லவிடாது...
முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறியும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியும் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடன் தடைசெய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் அவதானத்திற்குக் கொண்டுவந்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த கால யுத்தம் காரணமாக...
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் 700 க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட பள்ளியாறு, வண்ணிக்குளம், மண்டகலாறு, பண்ணங்கண்டி,நெடகலியாறு பகுதிகளிலும், முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட முதியகட்டு பகுதியிலும், வன்னி பாதுகாப்பு தலைமையகத்துக்குற்பட்ட கொக்கிலாய்,...
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்து நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,...
இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நண்பர்களுடன் நேற்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது நீரில் மூழ்கியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, அழகரத்னம் வீதியில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்....
அடாது தொடர்ந்து பெய்;து கொண்டிருக்கும் மழையின் மத்தியிலும் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மரநடுகை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. வவுனியா ஒமந்தையில் நேற்று சனிக்கிழமை(14.11.2015) 15ஏக்கர் பரப்பளவில் தேக்கமரக்காடு ஒன்றை உருவாக்கும் நோக்குடன் தேக்க மரக்கன்றுகளின் நடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாய பூர்வமாக தேக்கமரக்கன்றுகளை நட்டு நடுகையை...
கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையால் வெள்ள நீர் மற்றும் குளத்துக்கு மேலால் மேவிப் பாயும் நீர் என்பன மக்கள் குடியிருப்பினூடு பாய்ந்து வருகிறது. வெள்ள நீருடன் சேர்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்குமுதலை ஒன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்தே இச் சிறுமியை தாக்கியுள்ளது. கனகலிங்கம் விதுசா என்கிற இச்சிறுமி கிளிநொச்சி...
தீபாவளி தினமான 10-11-2015 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் புத்தாடை அணிந்து மிக மகிழ்வாக தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாடினர். மகிழ்வான தீபாவளியன்று அருள்மிகு முல்லைத்தீவு வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்த பின்னர் சகோதர இல்லமான முல்லைத்தீவு பாரதி சிறுவர் இல்லத்தை சென்றடைந்தனர். அங்கு தமது மதிய உணவின் பின்னர் அங்கு...
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும்மழை காரணமாக முக்கிய குளங்கள் வான் பாயும் நிலையில் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்;ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்தது. 10 அடி 6 அங்குலம் கொள்ளளவுள்ள கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 10 அடியாகவும் 9 அடி 6 அங்குலம் கொள்ளளவுள்ள வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம்...
தனது மகளின் மரணத்தை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மகளிர் அரசியற்துறை மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். ஐபிசி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காக தனது மகள் போராட்டத்தில் இணைந்ததாகவும், இறுதிவரை...
கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் மின்னல் தாக்கி உடல் கருகி பரிதாபமாக மரணமடைந்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் மன்னாகண்டல் சந்தியை அண்மித்த வேளை நடைபெற்றது. இதில் புதுக்குடியிருப்பு 7ஆம் வட் டாரத்தைச் சேர்ந்த நடராசா ரவி (வயது 50) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார். இது...
Loading posts...
All posts loaded
No more posts