- Tuesday
- November 26th, 2024
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று பிற்பகல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் வடக்கு மாகாணத்தைச்...
குடும்பத்தில் நிலவும் வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது. முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்தவரின் சடலமே வீட்டின் வறுமையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக்கிடந்தது. காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்....
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டம் வியாழனன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றபோது காணாமல் போனோரின் உறவினர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் போனோரில் பெருமளவானோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தமையை கூட்டமைப்பு ஆட்சேபிக்கவில்லை என்று கூறியும், அதனைக் கண்டித்தும், காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம்...
ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள்,...
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணாமல்போன சிறுவன் பத்தரமுல்லை நீதிமன்றத்தால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கிளிநொச்சி ஐந்து வீட்டுத்திட்டத்திற்கு அருகில் வசித்து வந்த 16 வயதான ஜேசுநாயகம் நிமலேந்திரன் என்ற சிறுவனே நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட முறுகல் காரணமாக பாடசாலைக்கு வர வேண்டாம் என்று மறுக்கப்பட்டதனால் வீடு செல்ல...
பூநகரியில் 860 ஏக்கர் காணி போலி ஆவணங்கள் மூலம் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதுடன் அக்காணிகளில் புதைக்கப்பட்ட சடலங்கள் புதையல் பூஜை என்ற போர்வையில் அகற்றப்பட்டுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது: பூநகரி- கெளதாரிமுனை - பரமன்கிராயில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 860 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு விற்பனை...
போர் முடிந்து 7 வருடங்களாகியும் பெருமளவான முன்னாள் போராளிகள் இன்னும் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர் என்று செய்திச்சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியில் வாழும் சிவலிங்கம் ரவீந்திரதாஸ் என்ற முன்னாள் போராளியை கோடிட்டுள்ள செய்திச்சேவை, அரசாங்கத்தின் புனர்வாழ்வு மையத்தில் 3 வருடங்களை கழித்த அவர், தற்போது தொழில் வாய்ப்பின்றி உள்ளார் என்று தெரிவித்துள்ளது. புனர்வாழ்வின் போது...
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இளவயதினர் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலையானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 21 வயதுக்குட்பட்டவர்களே, அதிகளவில் போதைப்பொருள் பாவனை, மதுப்பழக்கம் புகைத்தல் ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளனர். கடந்த கால யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்;தீவு மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி,...
காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட வன்னியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளார். அம்பாள்புரம், வவுனிக்குளத்தைச் சோந்த சாள்ஸ் ஜெயந்தினி (வயது 25) என்பவர் காய்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 13ஆம் திகதி இரவு மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக 14 ஆம் திகதி...
கனகராயன்குளம் பகுதியில் விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது வனஇலாக அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் கோடரிகளையும் பறித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனகராயன்குளம், மன்னகுளம் காட்டுப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் போரின் போது தமது கணவன்மாரை பறிகொடுத்த நான்கு விதவைப் பெண்கள் தமது...
விஸ்வமடு பகுதியில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் முல்லைத்தீவு பதில் நீதவான் பரஞ்சோதியின் அனுமதியோடு இராணுவ வீரரின் சடலம் என சந்தேகித்து அகழ்வு நடைபெற்று வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படியே அகழ்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது. நிட்டம்புவ அல்கம பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவ சிவில் படைப்பிரிவில் விஸ்வமடுவில் கடமையாற்றி...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் எட்டு இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவினை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இலங்கை மீனவர் ஒருவரின் படகை, கூட்டமாக அந்தப் பகுதிக்குள் வந்த இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளில் ஒன்று மோதியுள்ளது. இதனால் இலங்கை...
முல்லைத்தீவுப் பொலிஸாரின் அசண்டையீனத்தால் மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் சடலம் கடந்த நான்கு நாள்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...
கடற்படையினரிடமிருந்து தமது காணிகளை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காணிகளை சொந்தமாக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் விழிப்படைந்த பொதுமக்கள் இன்று(04) வடமாகாண சபை உறுப்பினர்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் நிலங்களை கடற்படையினரின் தேவைக்காக கையகப்படுத்த அரசு எடுத்துள்ள முன்னெடுப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம் வட்டுவாகல் பகுதியில் அவ்வகையில் 617 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பில் உயர் அரச அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டமொன்றும் அங்கு சனிக்கிழமை...
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய கடற்கோளின்போது, இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 40,000 பேர் வரையில் பலியாகினார்கள். முல்லை மாவட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் உயிர் துறந்தார்கள். அவர்களுக்கான நினைவஞ்சலி, கடற்கோள் நினைவுதினமான நேற்று சனிக்கிழமை (26.12.2015) முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கோள் நினைவாலயத்தில் நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் ஆகிய மூன்று மதமுறைகளிலும் இடம்பெற்ற...
கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், இளம் குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் உத்தியோகத்தரான கோரக்கன்கட்டு முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராஜா சுதர்சன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை மாலை (25) முரசுமோட்டையிலிருந்து பரந்தன் சந்திக்கு...
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டள்ளதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியை நேற்று மாலை 37 வயதுடைய சிறுமியின் சகோதரியின் கணவர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை...
வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில் நடைபெற உள்ளது. கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (26.12.2015) பி.பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...
Loading posts...
All posts loaded
No more posts