- Tuesday
- November 26th, 2024
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பரவிபாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றை அடுத்து, அவர்கள் குறித்த முகாமிற்குள் பிரவேசித்ததாக...
கிளிநொச்சி மாவட்டத்தில் 3701.5 ஏக்கர் நிலம் முப்படைகளினதும் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம், கடற்படை, விமானப் படை, மற்றும் பொலிஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டிலேயே இந்த நிலங்கள் காணப்படுகின்றன. இதில் அரசகாணி, தனியார் காணி, திணைக்களங்களுக்குச் சொந்தமான காணி, மற்றும் ஒதுக்கீட்டு காணி என்பன இதில் அடங்குகின்றன. அரசகாணிகள் 360 ஏக்கரும், தனியார் காணிகள் 229.5...
முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். வளமைபோன்று நேற்றயதினம் வீட்டுக்கு வந்த நபர் தன்னுடைய ஆண்மகனுடன் முற்றத்தில் படுத்துறங்கியிருக்கிறார். மனைவியும் பெண்பிள்ளையும் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனைவியை அழைத்து...
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பரவிபாஞ்சான் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வதற்கு வழியைத் திறந்துவிட்ட இராணுவ சிப்பாய்க்கு இராணுவ கேணல் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சிக்கு கடந்த 16 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம், மீள்குடியேற்றத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படாத பரவிபாஞ்சான் கிராம மக்கள் சிலர், தங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு...
கிளிநொச்சி, ஆனந்தபுரத்தை சேர்ந்த தாமோதரம்பிள்ளை ஜெயகாந்த் என்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், விடுதலை புலிகள் இயக்கத்தில் ஊடறுப்பு பிரிவில் இருந்து புனர்வாழ்வு பெறவில்லை என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் வவுனியா பயங்கரவாத தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
கிளிநொச்சி இரணைமடு, திருவிலாறு பிரதேசத்தில் 5 கிரனைட் குண்டுகள், பாதுகாப்பு படைகளால் நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 284 சிறுவா்கள் தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவா்களாக காணப்படுவதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டின் கணிப்பின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.3 ஆயிரத்து 44 சிறுவா்கள் தந்தையையும், 764 சிறுவா்கள் தாயையும், 476 சிறுவா்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனா். கரைச்சி...
முல்லைத்தீவு அம்பகாமம் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவிவை முன்னிட்டு ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்திலிருந்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற பறவைக் காவடி எடுத்துவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உழவு இயந்திரம் குடைசாய்ந்ததினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட இடதுகரை முத்து ஜயன் கட்டையைச் சேர்ந்தவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து...
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மூலம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 641பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (20.04.2016) நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு விவசாய அமைச்சால் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின்...
கிளிநொச்சி நகரை அண்டிய சில பிரதேசங்களிலுள்ள வியாபார நிலையங்களின் விபரங்களைத் திரட்டிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் வியாபார நிலையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு வியாபார நிலையமாகச் சென்ற இரண்டு இராணுவத்தினர் கடையின் பெயர், கடையின் உரிமையாளர் பெயர், கடையில் எத்தனைபேர் வேலைசெய்கிறார்கள், கடையில் என்ன வியாபாரம் நடக்கின்றது, எந்தக் கிராமசேவையாளர் பிரிவு,...
இலங்கையில் போர் நடைபெற்ற நேரம் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, விசுவமடு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனார்கள் என அவர்களது பெற்றோரால் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை...
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய மற்றுமொரு தமிழ் இளைஞர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவரே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு...
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வழக்கு ஒன்றிற்காக அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் 2.20க்கு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச்சென்ற கைதியைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்கள் தொடர்பான விவரங்கள் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருக்கின்றன எனவும்,...
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற புதிய நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நீதிவானாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த ஏ.ஜே.பிரபாகரன், இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, புதிய நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நீதிவானாக கடமையாற்றிய இவர், புலமைப்பரிசில் பெற்று, மேலதிக படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குச்...
ஏ - 9 வீதியில் கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர் கிளிநொச்சி பிரதேசத்தைச்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் நேற்று முல்லைத்தீவு மாவட்ட மக்களை மாங்குளத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று மாங்குளம் வருகைதந்த சம்பந்தன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த அனைத்துப் பிரதேச செயலர் பிரிவு மக்களையும் சந்தித்துக் கலந்துரை யாடியுள்ளார். இதன்போது, தென்பகுதி...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குடப்பட்ட தேவிபுரம் 'அ' பகுதி விக்கி குடியிருப்பில் நான்கு பேர் கொண்ட குழுவினர், இன்று வியாழக்கிழமை (14) அதிகாலை கத்திமுனையில் வீடொன்றைக் கொள்ளையிட்டுள்ளனர். வீட்டின் மின்னிணைப்பை துண்டித்துவிட்டு வீட்டிலிருந்தவர்களை கத்திமுனையில் அச்சுறுத்திய அந்தக்குழு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. சுமார் 15 பவுண் நகைகளையும் 65,000 ரூபாய் பணத்தினையும் இவர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக புதுக்குடியிருப்புப்...
கிளிநொச்சி சுதந்திர ஊடகவியலாளர் மீது நேற்று இரவு இராணுவத்தினர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதோடு, அவரது புகைப்பட கருவியையும் சேதமாக்கினர். நேற்று இரவு 09.45 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் குடமுருட்டி பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது, சிவில் உடையில் நின்ற இராணுவ கேணல் என தன்னை அடையாளப்படுத்திய...
கொக்குத்தொடுவாய் பகுதியில் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து இராணுவ தரப்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று கொழும்பிலிருந்து சென்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் தெரிவித்தார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் முல்லைத்தீவில் கிராம அலுவலர்கள் இணைத்து ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டிருந்தனர்....
Loading posts...
All posts loaded
No more posts