- Friday
- February 28th, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வெண்டும் எனவும், கால தாமதமின்றி தீர்வு வேண்டும் இல்லையேல் சர்வதேச குற்றவியல் நிதீமன்றிற்கு முன் காணாமல் ஆக்கப்பட்டோர்...

கிளிநொச்சியில் 37 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் உறுதிசெய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் 9 பேர் சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. திருநகர், புதுமுறிப்பு, தர்மபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வநகர், வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர்,...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கடந்த 10.02.2017 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் கடந்த 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பேர் இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 25 கர்ப்பிணிகளும், 9 சிறுவர்களும் அடங்கலாக...

கிளிநொச்சி - ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி தான் பிரசுவித்த குழந்தையை தனது வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடை யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும்...

கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி, கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்படட நிலையில், நேற்று கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக வாயில் முன்பாகவும்...

கிளிநொச்சி, சாந்தபுரம், 8ஆம் வீதி பகுதியில் ராணுவ வீரர் என சந்தேகிக்கப்படும் நபரொருவரால் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 56 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாந்தபுரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குறித்த பெண்ணை,...

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆகசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை முல்லைத்தீவு...

மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகர் சாந்தனின் இறுதி நிகழ்வில் பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு பொது மயானத்தில் அக்கினியுடன் சங்கமமானது. ஈழத்து எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி சாந்தன் குணரட்னம் சாந்தலிங்கம் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் பொது...

கிளிநொச்சி - புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கிடுகினால் வேயப்பட்ட தற்காலிகக் கொட்டகை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. பிரதேச மக்கள் மற்றும் பொலிசார் இணைந்து பிரதேச சபையின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இருப்பினும், மின்னிணைப்புக்களற்ற வகுப்பறைத் தொகுதி எப்படி எரிந்தது? என்று இன்னமும் அறியப்படவில்லை. எவ்வாறாயினும், கிளிநொச்சியில்...

கிளிநொச்சி மாவட்டத்தில் இம் மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என, மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் மாவட்ட மருத்துவ துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 காலப் பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள்...

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இருபத்துமூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. கடந்த 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தனர். எனினும் இதுவரை அந்த கோரிக்கைக்கு உரிய தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை....

தமிழக திரைப்பட இயக்குனரும் ஈழ உணர்வாளரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ் அவர்கள் நேற்றையதினம் இரவு கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர், அதனை விடுவிக்கவேண்டும் என கோரி போராட்டம் நடாத்திவரும் இடத்துக்கு சென்று மக்களை சந்தித்து தனது ஆதரவினை வெளியிட்டார். கேப்பாபுலவு போராட்டம் இடம்பெற்று வரும் இடத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புகழேந்தி...

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில்...

பரவிப்பாஞ்சானில் மக்களின் காணியில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர், பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் கூறினர். கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை (23) பிற்பகல் குறித்த பகுதிக்கு இராணுவ உயரதிகாரிக்ள, கரைச்சி பிரதேச...

வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஏ- 9 வீதியின் இரு மருங்கிலும் 31ஆயிரம் ஏக்கர் காணி இனங்காணப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) 23 கீழ் 2 இல் சிறப்புக்கட்டளைக்கு அமைய எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்....

கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, அருகில் காவலரணில் இருந்த இராணுவத்தினர், தங்களின் அலைபேசிகள மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு முல்லைத்தீவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மக்கள்...

இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு இருபதாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு...

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு...

புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பன முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளன. சனிக்கிழமை (18) இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக, தீ பாரியளவில் பரவிச் செல்வது தடுக்கப்பட்டது....

All posts loaded
No more posts