Ad Widget

பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பு

பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கிணறொன்றைத் துப்புரவு செய்யும் பொழுது பல்வேறு வகையான வெடி பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் காணி உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று குறித்த கிணற்றில் இருந்து...

பாலியல் துஷ்பிரயோகம் ; இருவருக்கு கடூழிய சிறை தண்டனை – கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு

கிளிநொச்சியில் பதிநான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய நபருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மற்றுமொரு 18 வயதுடைய இளைஞனுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 14 வயதுடைய சிறுமி...
Ad Widget

மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியின் இறுதி முடிவு!!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய நேற்று (10) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இன்று சம்பவ இடத்திற்கு...

தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை (28)...

29000 ஏக்கர் நிலத்தை மீண்டும் முல்லைத்தீவு மக்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாகாண காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வனத்துறை, மகாவெலிய மற்றும் தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு மக்களுக்குச் சொந்தமான சுமார் 100,000 ஏக்கர் காணிகளை எல்லைகளை பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளதாக மாகாண...

குருந்தூர்மலையில் பரபரப்பு!!

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏற்படுத்தி பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை அங்கு பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, பொலிசார் சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக எதிர்வரும் 20 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைசார் தரப்பினருடனான விசேட கலந்துரையாடல் நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இதில்,...

முல்லைத்தீவு கொக்குதுடுவாய் மனித புதைகுழி தோண்டுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது. சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும் வரை இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுகள் முறையான நியமங்கள் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு...

வீடுகளை உடைத்தெறிந்து முன்னாள் பெண் போராளியை தாக்கிய அதிகாரிகள்!!

முல்லைத்தீவில் வனவள திணைக்கள அதிகாரிகள், முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட பகுதியில் கொட்டில்களை அமைத்து மக்கள் குடியேறியுள்ளனர். இந்நிலையில்...

மனிதப் புதைகுழி தொடர்பாக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என...

முல்லைத்தீவில் பெருமளவிலான வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு !!

நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பெரிய பராக்களும் ஒரு சின்ன பராவும் 82 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் 49 உம 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்றும், 6 ஆர்...

முல்லைத்தீவில் மர்மநபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை!!

முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் நுழைந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது, கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர்களினால் தங்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை...

உள்ளாடைகளுடன் அலையும் முறிகண்டிப் பொலிஸார்!!

உள்ளாடைகளுடன் முறிகண்டிக் காவலரண் பொலிஸார் அலைவதாகவும், அவர்கள் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த காவல் அரண் மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகக் கடந்த 2021 ஆம் டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்கள்...

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் விஜயம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட குறித்த இடத்திற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் 04.07.2023 நேற்றையதினம் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். கடந்த 29.06.2023 அன்று கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலவலர்பிரிவில் மனித எச்சங்கள் சில இனங்காணப்பட்டன. இந் நிலையில் கடந்த 30.06.2023அன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா நேரடிராகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். இந்...

பெண் போராளிகளின் மனித எச்சங்கள் தென்பட்டதால் பரபரப்பு!!

முல்லைத்தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினைத் தோண்டிய போதே குறித்த மனித எச்சங்கள் தென்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும்...

கிளிநொச்சியில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. 2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள் ஒவ்வொரு மாதமும் 30ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை...

கிளிநொச்சியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!!

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கார் சாரதியே காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவர்...

வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் பாரிய போராட்டம்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகங்கள் இன்று சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் தங்களிடம் அதிகரித்த வரி அறவீடு மேற்கொள்வதற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேராட்டத்தில் ஈடுப்பட்ட சந்தை வர்த்தகர்கள் சார்பாக வர்த்தக சங்க பிரதிநிதிகள்...

கத்தியை காட்டி மிரட்டி இளம் பெண் கடத்தல்!

கிளிநொச்சி - பூநகரி, முட்கொம்பன் பகுதியில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த பெண்ணை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் அவரது கணவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிளிநாச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து...
Loading posts...

All posts loaded

No more posts