- Friday
- February 28th, 2025

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து...

முல்லைத்தீவில் இன்று மாலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை வன்மையாக கண்டிப்பதோடு, குறித்த தீர்ப்பிற்கு எதிராக இலங்கையின் சகல மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அணிதிரள வேண்டுமென உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களது நினைவாக சிலைகளை அமைத்து, கல்வெட்டுக்களை பதித்து இன்று மாலை சிவில் அமைப்புகள்...

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழர் தாயத்தில் மட்டுமன்றி தமிழ் மக்கள் விரவி வாழும் தேசமெங்கும் இன்று (வியாழக்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தியுள்ளார். ”எங்கள் பெருமைமிகு...

கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி இந்துக் கல்லூரியின்...

பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் இன்றைய தினம் நடத்தப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடையுத்தரவில், சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைய முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும்...

கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது.இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்ன அவர்களுக்கு கிளிநொச்சி...

கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது, ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார். இன்று (16) மதியம் ஒரு மணியளவில் கனகபுரம் பழைய சந்தைக்கருக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், உதயநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு பலியானதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

முல்லைத்தீவு மாவட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று (14) 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது. வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி நிலவுவதன் காரணமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் குடிநீர் நெருக்கடி தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பிரதேச சபைகள்,...

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை 83வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே...

கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எந்த வித சட்ட திட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது. 1 ஏபி பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த அதிபர் தரம் இரண்டைச் சேர்ந்த அதிபரை 1...

வடக்கு கிழக்கில் வேலையற்ற நிலையில் பல இளைஞர்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்குள்ள அலுவலகங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக...

இரணைதீவு மக்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என கோரி இரணைமாதா நகரில் கடற்கரை ஓரமாக தகரக் கொட்டகைக்குள்ளிருந்து போராட்டம் நடாத்திவருகின்றனர். வீதியோரம் சமைத்து உண்டவாறு இரவுபகலாக தங்கியிருந்து போராடுகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆரம்பித்த நாள் முதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் சென்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 5வது...

இரணைத் தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால், அந்த வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதனாலேயே போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை ஜந்தாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத காரணத்தால் அவசர முறைபாடுகளை பதிவு செய்வது சிரமமாக காணப்படுகிறது என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு செல்கின்ற பொதுமக்கள்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் – நடனமிட்டான் குளப்பகுதி மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், குளப்பகுதி அகழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) இவ் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும் குறித்த பகுதியிருந்து வெடிபொருட்கள் எவையும் மீட்கப்படாததால், அகழ்வுப் பணி கைவிடப்பட்டது. அகழ்வு...

புதுக்குடியிருப்பு நகரமே அதிர்ந்தது என்று குறிப்பிடும் அளவுக்கு நேற்று திங்கட்கிழமை (01.05.2017) புதுக்குடியிருப்பில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க புதுக்குடியிப்பு சிவன்கோவில் முன்றலில் இருந்து பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பித்த மேதினப் பேரணியில் வடக்கு மாகாணத்தின்...

விடுதலைப்புலிகள் யுத்தத்தில் மாத்திரம் ஈடுபடவில்லை. கல்வி வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை காட்டினார்கள். இதனாலேயே பல்கலைக்கழகம் ஒன்றுக்குரிய கட்டுமானங்களை உருவாக்கும் நோக்கில் அறிவியல் நகரை உருவாக்கி கட்டிட நிர்மாணப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்கள். இப்போது அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடம் இயங்கி வருகிறது. நாங்களும் பண்ணையாளர்களுக்கும், எமது கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவூட்டும் நோக்கில் பிராந்திய கால்நடை...

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து...

முல்லைத்தீவு பகுதியில் இராணுவ பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹர்த்தால் இடம்பெற்ற போது இவ்வாறு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பகுதியை கடந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

All posts loaded
No more posts