- Thursday
- February 27th, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளவு ள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து குடியேற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர்...

ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஸ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத்திய அரசினால் மீளப்பெறப்பட முடியாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்படுமானால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி கிளிநொச்சி...

கிளிநொச்சி, முறிகண்டி ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து தவறி விழுந்தவராக இருக்கலாம் என்ற ரீதியில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றிரவு யாழிலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த ரயிலில், மிதிப்பலகையில் சென்ற நபரொருவர் தவறி விழுந்ததாக...

முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் குமுழமுனை, முத்தையன்கட்டு, மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளின் பல கிராமங்கள் பேருந்து சேவைகள் நடைபெறாததன் காரணமாக மக்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. அதன்படி வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வண.பிதா. எழில்ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் நடத்தப்படவிருந்த நினைவு தின நிகழ்வை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களால் இயன்றளவு பங்களிப்புக்களை செய்திருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளையினருடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டும் சட்டவிரோத தொழில்கள் அனைத்திற்கும் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் உறுதுணையாக இருக்கின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையகத்தின் பொருளாளரும், முல்லைத் தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவருமான எ.மரியராசா குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் ஓர் முக்கியம் இடம்பெற்ற மாவட்டமாக திகழும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி வைர விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் பாரிய தொழில் பயிற்சி...

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம், எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் மற்றும் மக்களின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் எல்லோரும் கடவுளை கூம்பிடுவோம் எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சிக்கு இன்று புதன் கிழமை பயணம் செய்த அவர் கிளிநொச்சி கந்தசுவாமி...

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. கொள்கைபரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்...

கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு மாவா என்கின்ற போதை வஸ்தை விற்பனை செய்த சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் காவல்துறை அதிபர் மகேஷ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால் நேற்று திங்கள் இரவு இரணைமடுப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப் பட்டுள்ளார் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த...

காணிப் பிரச்சினை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளிநடப்புச் செய்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ரிஷாட்...

மாற்று சக்தி மின் நிலையத்தில் வடக்கில் உள்ள 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையின் மிகப்பெரிய மாற்று சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் மிகப்பெரிய மாற்று...

நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக நந்திக்கடலை அண்டிய பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 4 ஆயிரத்து 800 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களை விட இந்த வருடம் ஏற்பட்டுள்ள அதிக வறட்சி காரணமாக நந்திக்கடல் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன், நந்திக்கடலை...

கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனுமதி வழங்காததால் பணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கோணாவில் போத்தல் கள் அடைப்பு நிலையத்தில், இந்த வருடம் 5 இலட்சம் போத்தல் கள் அடைக்கப்பட்டு 15 மில்லியனுக்குமேல் உற்பத்தி வரியாக மதுவரித் திணைக்களத்திற்கு...

முழங்காவில் பகுதியில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது – 18) என்ற இளைஞனை, கடந்த ஒரு வார காலமாக காணவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நாவாந்துறையில் மேசன் வேலைக்காக சென்ற குறித்த இளைஞன், மாலை...

கிளிநொச்சி கண்டாவளை வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரண்டு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும்,...

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தினையடுத்து அப்பகுதி மக்கள் பெரிதும் பதற்றத்திற்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மையில் குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட்டிருந்தன. குறித்த காணிகளைத் துப்பரவாக்கும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது அக்காணிகளில் இருந்த வெடிபொருட்களே வெடித்துள்ளதாக அப்பகுதி...

நாட்டினதும், மக்களினதும் அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என வட. மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவித்த அவர், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை மக்களுக்கு உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும்....

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலையின் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் திறன் விருத்திக்கான கட்டடத்தொகுதி மற்றும் பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மாடிக்கட்டடம் ஆகியன இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரனின் அழைப்பின் பேரில், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இலங்கைக்கான...

All posts loaded
No more posts