- Thursday
- February 27th, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை உள்ளிட்ட பிரதேசங்களிலே நேற்று மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொடர் வறட்சி காரணமாக முல்லைத்தீவு பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்ததுடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் மழை...

இலங்கை இராணுவ வீரர்கள் அண்மையில் கிளிநொச்சி மல்லாவி வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானப்பணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரியினால் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 65வது படைப்பிரிவின் கீழுள்ள சுமார் 500 படை வீரர்கள் இந்த சிரமதானப்பணியில் ஈடுபட்டனர். இதன்போது வைத்தியசாலை வளாகத்தினை அழகுபடுத்தும் வகையில் 150 பூச்சாடிகளை...

கிளிநொச்சி நகரத்தில் இயங்குகின்ற இணையத் தள நிலையங்களை நாடுகின்ற சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளினால் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டின் பின்னர் கிளிநொச்சி நகரத்திலே பல இணையத் தள நிலையங்கள் இயங்குகின்றன. இவ் இணையத் தள நிலையங்களை நோக்கி சிறுவர்கள் கூடுதலாக செல்வதாகவும் இதன் காரணமாக பெற்றோர்கள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டச்...

கிளிநொச்சியில் தனியார் பேரூந்து ஒன்றும் பிக்கப் ரக வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தெரேசா ஆலயம் முன்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. தெரேசா ஆலயத்திற்கு முன்பாக வீதியினை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டி ஒன்றினால் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து...

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தம் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் பயிர்செய்கை நிலங்களிற்கு நீர் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரணைமடு திட்ட விவசாயிகள் இணைந்து குளத்தின் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தி நீரை...

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இனவாதத்தை பாதுகாக்கும் அரசாங்கம் இதனை பாதிப்பாக...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள், நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு...

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் ( வயது 59) என்பவருக்கு கிடைத்துள்ளது....

குடிநீர் போத்தலினுள் ஒருவகை மருந்துப்பொருள் கலக்கப்பட்ட நிலையில், அதனை பருகிய மாணவி மயக்கமடைந்த சம்பவமொன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதி பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த குடிநீர் போத்தலினுள் ஏதேனும் மருந்துப்பொருள் கலக்கப்பட்டிருந்ததை பாடசாலை ஆசிரியர் ஒருவர் உறுதிபடுத்திய போதிலும்,...

யாழில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்து, கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் இக்கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி சேவை சந்தை முழுமையாக முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி நகரில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நகர் வீதிகளிலும்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்தியதாக கூறப்படும் படகு முல்லைத்தீவு கடலில் இருப்பதாக வௌியான தகவல்களில் உண்மையில்லை என, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படகு அண்மையில் முல்லைத்தீவு கடலில் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எதுஎவ்வாறு இருப்பினும், இந்தத் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என, கடற்படை ஊடகப்...

கிளிநொச்சியில் மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூஜை ஒன்றும் ஆயிரத்து எட்டு இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட குறைந்தளவு ஏக்கர் சிறுபோக நெற்செய்கையில் கூட, மழை இன்மையால் குளத்தில் இருந்த மிகக்குறைந்த அளவு நீர் மட்டமும் குறைந்து செல்வதனால் நெற்பயிர்கள் அழிவடைந்து கொண்டுள்ளது....

தமது சொந்த நிலங்களை மீட்க தொடர்ந்து 141 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக வாயில் முன்பாக கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களிடம் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தொலைபேசிவாயிலாக ஒரு தொகுதி காணிகள் நாளை விடுவிக்கப்படும் என்று உறுதியளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள்...

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தினால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், எட்டு மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். மயக்கமடைந்த மாணவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் ஜெலெக் நைட் எனும் வெடிபொருள் வெடித்ததிலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பான மேலதிக...

வாள்வெட்டுக்கு இலக்காகிய தபால் உத்தியோகத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த குணபாலன் வயது 50 என்பவரே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் குறித்த உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுளைந்த மர்ம நபர் ஒருவர் அவருடன் உரையாடிக்கொண்டிருந்த சமயம்...

நேரியகுளம், மாங்குளம் பகுதியில் குடும்பத்தினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாங்குளத்தை சேர்ந்த 68 வயதுடைய இஸ்மாயில் சம்சுதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இரவு 8 மணியளவில் நேரியகுளம் மாங்குளம் பகுதியில் உள்ள சம்சுதீன் என்பவரது வீட்டில் உறவினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது....

மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிற்கு எதிரானவை எனக் கருதப்படும் சுவரொட்டிகள் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு விமர்சிக்கப்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. மக்கள் அதிகம் நடமாடும்...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லையினை கிராமங்களின் மக்கள் எதிர்கொண்டுள்ளனா் கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ம் ஆண்டில்தான் மின்சார வேலி அமைக்கப்படும் என அதிகாரிகளினால் தெரிவிக்கப்படும் நிலையில் ஆயிரம் குடும்பங்கள் வரை நாள்தோறும்...

முல்லைத்தீவில் குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம் நன்னீர் மீன்பிடி நிலத்தடி நீர், விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனா். முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர் மட்டம் அடிநிலையினைச் சென்றடைந்துள்ளதன் காரணமாக இக்குளங்களின் கீழான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது அத்தோடு...

எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைத்து, இளைஞர்களின் மனநிலையினை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இளைஞர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது...

All posts loaded
No more posts