- Thursday
- February 27th, 2025

கிளிநொச்சி கல்மடுக்குளம் பகுதியில் விமானப்படையினரால் வெற்றுக் கொள்கலன் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினுடையது என சந்தேகிக்கப்படும் குறித்த கொள்கலனில் எவ்வகையான பொருட்கள் இருந்திருக்கலாம் என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தற்போது பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த கொள்கலனை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெற்றுக் கொள்கலன் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து...

கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்திவ் கடன்சுமை என ஆலயப் பூசகரிடம் சென்றவரை செய்வினை அகற்றுவதாக கூறி பூசகர் கொடுத்த மருந்தை அருந்தியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார் குறித்த சம்பவத்தில் ஜெயந்திநகரச் சேர்ந்த ஆதித்தகுமார் வயது-50 என்பரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறி்த்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி ஜெயந்தி நகர்ப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கடன் சுமை என ஆலயப்...

யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 200 நாட்களை எட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கொட்டகை அமைத்து, மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாது இம் மக்கள் இரவு பகலாக...

இந்தியாவில் இடம்பெற்ற பல நாடுகள் பங்குகொண்ட சர்வதேச ரீதியிலான நடனப் போட்டி ஒன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞர் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஜூலை மாதம் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்ட ஹிடின் ஜடியல் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சிறந்த ஆற்றுகையாளராக தெரிவு செய்யப்பட்ட மலையாளபுரம்...

புதுமாத்தளன் சாலை கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களின் படகுகள் மீது தென்பகுதி மீனவர்களின் படகுகள் மோதியதில் புதுமாத்தளன் பிரதேச மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுமாத்தளன் தொடக்கம் சாலை பருத்தித்துறை வரையான கடற்பகுதியில் தென்பகுதியிலிருந்து வருகை தந்த மீனவர்கள் சட்டவிரோதமான தொழில்...

ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செல்வபுரம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். குறித்த அனுமதியினால் குறித்த பகுதியில் அதிக ஒலி காணப்பட்டது. ஒலிபெருக்கியின் சத்தத்தினை...

முல்லைத்தீவு - துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பஸ் சேவைகள் நடைபெற்றன....

எப்பொழுதும் உரிமை உரிமை என பாலர் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்களின் வறுமையை நீக்கி அவர்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் வழி செய்ய வேண்டும் என கிளிநொச்சி பொன்னகர் மத்தி, அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் உரிமையை பெற்றுத் தருகின்ற நேரத்தில் நாங்கள் உயிரோடு இருப்போமா என்ற நிலையில்...

கிளிநொச்சி மாவட்டத்தின் இரு பிரதேச செயலாளர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் கண்டாவளைக்கும், கண்டாவளை பிரதேச செயலாளர் த.முகுந்தன் கரைச்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேவைக் காலத்தைக் கருத்திற்கொண்டு, பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக உள்வாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற வன்முறைகளுக்கு உளவியல் தாக்கங்களே காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உளநலமருத்துவ விடுதி மற்றும் வைத்தியவர்களுக்கான விடுதி என்பனவற்றை இன்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர், ”உளநலப் பிரச்சினைகளால்...

முல்லைத்தீவு - துணுக்காய் - உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள், அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் வீடுகள் ஆபத்தான நிலையில் காணப்படுதல் காரணமாக, இப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் கிராமத்தில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில், தற்போது 20...

கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணால் நடத்தப்பட்டு வந்த வர்த்தக நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பரவிய தீ காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த...

கிளிநொச்சி பொதுச்சந்தை நீண்ட காலமாக துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பொது சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகள் இவ்வாறு துர்நாற்றத்துடன் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் புதிதாக மலசல கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், அது பாவனைக்கு கையளிக்கப்படவில்லை எனவும், 380 வர்த்தகர்கள்,...

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரில் ஒருவர், மேலதிக...

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இருவரினதும் இடது கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த இராணுவ வீரர்களின் நிலமையில் கவலையில்லை என்றும், வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர்களை...

வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் கிளிநொச்சி கிளை, நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.பி.நடராஜ் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு கிழக்கில் உள்ள மலையக சமூகத்தை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே இவ்வமைப்பின் நோக்கம் என ஒன்றியத்தின் இணைப்பாளர்கள்...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை எனவும் தனது பிள்ளையின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பல்லைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். அவர்களில் கிளிநாச்சி பகுதியை சேர்ந்த நடராசா...

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாப்புலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 175 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. கேப்பாப்புலவு மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

கிளிநொச்சியின் சில பிரதேசங்களில் அரசினால் வழங்கப்படும் வறட்சி நிவாரணத்தினைப் பெறுவதற்கு சிரமதானம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது அன்றாடக் கடமைகளை விடுத்து மேற்படி சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் வறட்சிக்கான நிவாரணங்கள் அரசாங்கத்தினால் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்...

கிளிநொச்சி இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்புப்பணிகள் இபாட் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதன் ஒரு அங்கமான நெற் களஞ்சியங்கள், நெல் உலரவிடும் தளங்கள் போன்ற கட்டுமானங்களும்...

All posts loaded
No more posts