- Thursday
- February 27th, 2025

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் - கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது. இதற்கமைய, வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் அவரது உறவினருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது....

16 வயதுக்கு குறைந்த பிள்ளையை காதலித்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வித்தித்து தீர்ப்பளித்துள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன் 2011 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில்...

கருப்பை கழுத்து புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 10 வயதை தாண்டிய பெண் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் எச்.பி.வி தடுப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார். இதனை கருத்தடை ஊசி என மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. ஆனால் அதில் உண்மையில்லை. கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு...

முல்லைத்தீவு மக்களின் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நில அளவீட்டு முயற்சி, மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. வட்டுவாகல் கடற்படை முகாம் அமைந்துள்ள மக்களுக்குச் சொந்தமான காணி, மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை அளவிடுவதற்கு அரச அதிகாரிகள் சென்றுள்ளனர். இதனை அறிந்த மக்கள், முல்லைத்தீவு – பரந்தன் வீதியை மறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்....

கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம் மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கின்ற போது தொடர்ந்தும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதி மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களிற்கு மாலை நேர வகுப்புக்களுக்கு சென்று வருகின்ற நிலையில், இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் ஆகிய பகதிகளிலும் வன்னேரிக்குளம் ஸ்கந்தபுரம்,...

யாழ் இந்திய துணை தூதுவா் ஆர்.நடராஜனின் மகள் பயணித்த வாகனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சங்குப்பிட்டியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த, யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் சென்ற வாகனம், சங்குப்பிட்டிப் பகுதியில் வைத்து, அதே திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியுள்ளது. இதன்போது, தனியாருக்கு சொந்தமான கார் தடம்புரண்டது. எனினும்,...

தமிழ் தேசிய ஜனநாயக போராளிகள் அமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சி பாரதி ஸ்டார் விடுதியில் மாலை 2 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ”இன்று பலர் முன்னாள்...

முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த மற்றுமொரு மாணவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரைப் பிரதேசத்தில் நீராடியபோது காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினமான நேற்று (புதன்கிழமை) நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் குளித்துக்கொண்டிருந்த சமயம் இரண்டு மாணவர்கள் நீரில்...

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்டு காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளான நேற்று பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒரு...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்து இன்றும் தொடர்கின்ற நிலையில் தீர்வு கிடைக்கும் வரை போரட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் தெரிவிக்கின்றனர். யுத்த காலத்தில் வலிந்து இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என்று கேள்வி எழுப்பும் பெற்றோர்கள் இதுவரை தமக்கான தீர்வு கிடைக்கவில்லை...

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாழும் பொதுமக்களில் 99 வீதமானோர் நல்லொழுக்கம் மிக்கவர்கள் என்றும், ஒருசிலரின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு ஏனையோரை மதிப்பிடமுடியாதென்றும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக வடக்கில் செயற்படும் வாள்வெட்டுக் குழுக்களுக்கு பின்னணிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவ்வாறு...

கிளிநொச்சி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்றுடன் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியாருக்கு சொந்தமான குறித்த பேரூந்து ஏற்கனவே விபத்தில் சிக்கிய நிலையில்...

இலங்கையின் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என பெயரிடப்பட்டு, கிளிநொச்சியின் முக்கிய இடங்களில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சண்டையிடுதல், பாடசாலைகள் ஆலயங்களுக்கு இடையூறு விளைவித்தல்,...

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 6 சிறுவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சிறுவர் இல்ல அதிகாரி ஒருவர் நிதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி நேற்று மதியம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். கிளிநொச்சி – மகாதேவா...

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில், சிறுவர்கள் எவரும் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்துள்ளார். மகாதேவ சைவச் சிறுவர் இல்லத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக சிறுவன் ஒருவனின் தந்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு...

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே...

கிளிநொச்சி – கல்மடு நகர் பகுதியில் பாடசாலைக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட சிறார்களை மீள கற்றலில் இணைக்கும் செயற்பாடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி – கல்மடு நகர், நாவல் நகர், றங்கன் குடியிருப்பு ஆகிய பகுதியில் பாடசாலைகளுக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளை கொண்ட அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும்...

கிளிநொச்சி மாவட்டத்தின் சின்னப்பல்லவராயன்கட்டு கிராமத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்பை, ராணுவத்தினர் தீயிட்டு அழிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இங்கு வசித்த மக்கள் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்ததால், கடந்த ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு 100 ஏக்கர் தென்னையும் குடமுருட்டிக் குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களில் வசித்த மக்களுக்கு 25 ஏக்கர் தென்னையும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும், தென்னைகள் உரிய பராமரிப்பின்றி...

All posts loaded
No more posts