- Tuesday
- January 7th, 2025
கிளிநொச்சியில் அண்மைக் காலமாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர், உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தருமபுரம் பகுதியில் உள்ள பாடசாலை சிலவற்றுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று வியாழக்கிழமை...
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
முல்லைத்தீவு - கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில்...
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் மத்திய கல்லூரியின் பின்புறமாக அமைந்துள்ள வீதி கடந்த 48 வருடங்களாக மக்கள் பயன்படுத்த முடியாதளவு சீரற்று காணப்படுகிறது. குறிப்பாக, மழைக் காலங்களில் முற்றும் முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் இந்த வீதி கால்வாய் போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மேலும் கூறுவதாவது : நாளாந்த தேவைகளுக்காக...
சிறையில் இருந்து பிணையில் வந்த 22 வயதான நபர் ஒருவர் கிளிநொச்சி புகையிரத வீதிக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலை வழக்கொன்றுடன் தொடர்பு பட்ட சந்தேக நபரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக வழமை போன்று இன்றும் (27) புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொள்ளவுள்ளனர். புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் இதனைத் தெரிவித்தார். அதன்படி இன்றைய தினம்(27) மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதோடு நடைபெறவிருக்கும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்துக்...
முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (22) பிற்பகல் 3 மணி அளவில் குறித்த பெண் அவரது மகன் பேரக் குழந்தை ஆகியோர் உள் வீதியில் இருந்து பிரதான...
கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் 46 மரங்களை முழுமையாக அகற்றவும், 11 மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடவடிக்கைக்கு போக்குவரத்து...
அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைதீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்படக்கங்களை தனதாக்கியுள்ளார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார்....
முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணிதபாடத்தில் சிறப்புதேர்ச்சி பெற்ற ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் கணிதபாடம் கற்பிப்பதில் சிறப்பான பெயர் பெற்றுள்ளார். இந்த நிலையில்...
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம் தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை, அந்த...
நாட்டில் மின்னல் எச்சரிக்கை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம்...
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் 20 மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணை எடுத்து கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இன்றையதினம் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ அவர்கள்...
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் கிராமத்தின் வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நவரத்தினராசா மதுஸன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சடலம் நேற்று (25) இரவு 8.30 மணியளவில் பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது....
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. முறிகண்டி மற்றும் மாங்குளம் ஆகிய இரண்டு புகையிரத நிலையங்களில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் புகையிரத சேவைகளை பெற்று வருகின்றனர். இந்த இரண்டு புகையிரத நிலையங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுக்கான புகையிரத சேவைகளை...
கிளிநொச்சி - பெரியபரந்தன் பகுதியில் நண்பிகளான பாடசாலை சிறுமிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர். நேற்று (16.0.2023) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தற்கொலை செய்துள்ளனர். சுரேஸ்குமார்...
கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 30 ஏக்கர் சந்திப்பதில் உள்ள வீடு ஒன்றின் மீது குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களுக்கு இடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை...
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04.10.2023) இரவு 8.30 மணியளவில் பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி...
முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தாெங்கிய நிலையில்...
Loading posts...
All posts loaded
No more posts