- Wednesday
- February 26th, 2025

நேற்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கரடிப்போக்கு சந்தியில் நேற்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில்...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து...

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய விடயங்களைப் பயன்படுத்த வேண்டாம் என, அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குழுவொன்று, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கிட்டுவின் 25வது நினைவு தினத்தை அனுஷ்டித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. இதில்...

கிளிநொச்சி, பன்னங்கண்டி பாலத்தின் கீழிருந்து ஆணொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வட்டக்கச்சி மாயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக பயணித்தவரே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

கிளிநொச்சி இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்டு நீர்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 98 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இன்று (திங்கட்கிழமை) பொங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றது. இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், இரணைமடு விவசாய சம்மேளன விவசாயிகளால் பொங்கல் பொங்கப்பட்டு நன்றி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட...

கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா தொடக்கம் பரந்தன் வரையான பிரதேசத்தில் 1000 மருது மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சியில் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வருடத்தில் மர நடுகைத் திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இலங்கை இராணுவம் பிரதான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக மர நடுகை மூலம் இலங்கையில் சௌபாக்கியமான...

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் 2 ரிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார். மாங்குளம் பகுதியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை யாழ் நோக்கிப் பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. முன்னே சென்ற ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னால்...

முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம் அல்வாய் வடக்குப் பகுதியை சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது – 24), சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது -36), யாழ்ப்பாணம் மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் இந்துகன் (வயது -19), யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணரூபன் (வயது-19) ஆகியோரே...

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் பலியானார்.சம்பவத்தில் மற்றுமொரு மாணவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொக்கோ (JCB) இயந்திரம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் மீது புரண்டுள்ளது.இதன்போது அனர்த்தத்தில் சிக்கிய மாணவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தில் பலியானவர் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும்...

கிளிநொச்சி மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொக்காவில் பகுதியில், தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்று 08.01.2018 ஞாயிற்றுக்கிழமை வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை- மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டனர். நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வவுனியா வடக்கு, பரந்தன், புளியங்குளம் முத்துமாரி நகர், கனகராயன்குளம் பெரியகுளம், வவுனியா வடக்கு...

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டநிலையில் எதிர்வரும்...

உலகளாவிய ரீதியில் பிளாஸ்ரிக் பொருட்களை தடை செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சியிலும் இதற்கான முதற் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக பிளாஸ்ரிக் கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக் பொருட்களின் பாவணையை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த செயற்திட்டத்தை கிளிநொச்சி...

விபத்துக்குகாரணமான லொறி சாரதியை விடுவிக்க பொலிஸார் முயற்சி!! பொதுமக்கள் பொலிஸார் இடையே அமைதியின்மை!!
கிளிநொச்சி- செல்லையாதீவு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில், பொலிஸார் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை சீரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை மாலை பூநகரி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 32 வயதான ஒருவர், செல்லையாதீவு சந்தி பகுதியில் விபத்துக்குள்ளாகி...

முல்லைத்தீவில் தீவிரமாக பரவி வரும் இன்புளுவன்சா பி வைரஸ்தொற்று தொடர்பில் ஆராய, வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய மருத்துவமனைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் வைரஸ்தொற்று தொடர்பிலான நிலைமைகளை மருந்துவர்களிடம் கேட்டறிந்துக் கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனையின் பொது...

கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் வசமிருந்த காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் நேற்றயதினம் மக்கள் முன்னிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. காணி கையளிக்கும் நிகழ்வு கேப்பாப்புலவுவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம்...

முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களின் உதவியுடன் உள்ளூரட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர். அந்தவகையில், கூட்டமைப்பினருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (புதன்கிழமை) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்ட இந்த சந்திப்பில், கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான...

கேப்பாப்புலவில், இலங்கை ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டது. காணிகள் விடுக்கப்பட்ட போதிலும், காணி அளவீடுகளின் பின்னரே மக்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில், இலங்கைப் படையினர் அமைத்துள்ள படைத்தளங்களை இடம்மாற்றுவதற்கு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு 148 மில்லியன் ரூபாவை...

வட. மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபைக்கான உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிடும், இ.கௌதமனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது...

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், அன்னலெட்சுமி...

All posts loaded
No more posts