- Wednesday
- February 26th, 2025

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து சென்ற விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுத்தனர். கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்....

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைக்கு தனது மகனை ஆள்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோரி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த தாயார் ஒருவர் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு யாழ். படைத் தலைமையகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் எழுதிய கடிதம்...

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று நேற்று (புதன்கிழமை) முன்னெடு்கப்பட்டது. குறித்த போராட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கூடிய பிரதேச மக்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர். அதனைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபைக்கு சென்று அங்கு...

முல்லைத்தீவு மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக அளவீடு மேற்கொள்ளும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த முகாம் அமைந்துள்ள இந்த காணிகளை விடுவிக்குமாறு பலதடவைகள் மக்கள் கோரியும் இந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை அளவீடு செய்வதற்காக சென்ற போது, மக்கள்...

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளை 10 மணித்தியாலங்களுக்கு மேல் பணியில் ஈடுபடுத்த பணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விடையம் தொடர்பில் முறைப்பாடு செய்யவதற்கு அங்கு பணிபுரிபவர்கள் முன்வருவதில்லை என நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள ஆடை...

கிளிநொச்சி – இரணைதீவில் கிராம மக்களது போரட்டம் தொடர்பில் அரச நிர்வாகத்திற்கு எதிராக யாழ். மனித உரிமை ஆணைகுழுவிடம் முறை பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது சொந்த கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்களே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பிரச்சினைகளுடன் சம்மந்தப்பட்ட...

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மழையுடன் கூடியகடும் காற்று வீசியதன் காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்த மினி சூறாவளியால் மாங்குளம், துணுக்காய் வீதியில் அமைந்துள்ள சுமார் 10 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில வீடுகள் சிறிதளவு...

கிளிநொச்சியில் 13.5 மில்லியன் ரூபாய் நிதியில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டு வருகின்றது. விவசாய திணைக்களத்தினால் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில், கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் குறித்த உணவகம், அமைக்கப்பட்டுவருகின்றது. கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் யாழ் பல்லைக்ககழகத்தின் இரு பிரிவுகள் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையம் என்பன இயங்கி வருவதுடன், தனியார் துறையின் கீழ்...

ஒட்டுசுட்டான், கற்சிலைமடுப் பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இராணுவம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளதாக அக்காணி உரிமையாளரான சமாதான நீதவான் கந்தையா சிவராசா தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள சான்றுப் பொருட்களை அழித்துவிட்டு அவ்விடத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்க இராணுவத்தினர் முயன்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, “எனது காணிக்குள் மிகவும்...

கிளிநொச்சி – பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியொன்று நேற்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது. சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கினார். அக்காணியில் நிலமட்டத்திலிருந்து சுமார் 35 அடி கீழ்நோக்கிச்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 68 மில்லியன் நிதி முதற்கட்டமான கிடைக்கப்பெற்றுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான வசதிகள்...

கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி, ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 46 வயதுடைய வேலாயுதம் விக்கினேஸ்வரன் என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர மற்றும் வெலிஓயா, கிதுள் ஓயா பகுதிகளில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வடமாகாண சபையினர் முன்னெடுக்க வடமாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. வடமாகாண சபையின் 120 வது விசேட அமர்வு...

மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கங்களை இனியும் நம்புவதற்கு நாம் தயாராக இல்லை என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 405ஆவது நாளாக நேற்று (புதன்கிழமை) தங்களது போராட்டத்தை தொடர்ந்த உறவுகள், கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல்...

நுண் கடன்களிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விசேட செயற்திட்டம் ஒரு மாத்திற்குள் நடைமுறைக்கு வரும் எனவும், இதேவேளை வரும் ஆறு மாத்திற்குள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பெற்ற கடனை மீளச் செலுத்ததேவையில்லை எனவும், இதனை அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரத்துங்க தெரிவித்துள்ளார். நேற்று (03) கிளிநொச்சியில் கரைச்சி தெற்கு...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வழங்கும் போது பேரம் பேசப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு பதிலளித்த போதே, மத்திய வங்கியின்...

முல்லைத்தீவு ஆண்டான் குளபகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கியை இருவர் பறித்து சென்றமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு குமுழமுனை ஆண்டான் குள வீதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு இராணுவத்தினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இருவரே துப்பாக்கியை...

முல்லைத்தீவின் ஆழ்கடல் பிரதேசம் வழியாக அரியவகை இராட்சதப் பறவை ஒன்று பறந்து சென்றுள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தென்பட்ட இந்த இராட்சதப் பறவை, வட – கிழக்கு கடல் வழியாக ஆழ்கடல் நோக்கிப் பறந்து சென்று மறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் முல்லைத்தீவுப் பெருங்கடலில் ஏற்பட்ட பல்வேறு...

உடையார்கட்டு குளத்தில் இருந்து இராணுவப் பண்ணைகளுக்கு பாரிய இயந்திரங்கள் மூலம் இராணுவத்தினர் நீர் இறைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உடையார்கட்டு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்று கூடிய மக்கள் பதாகைகளுடன் பரந்தன்-முல்லைத்தீவு வீதிவரை சென்று வீதியின் கரையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து உடையார்கட்டுக் குளத்தில் நீர் இறைக்கும்...

All posts loaded
No more posts