- Sunday
- January 12th, 2025
வவுனியா கனகராயன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (11.09.2018) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது. கனகராயன்குளம் வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிவில் உடையில் சென்று இரண்டு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு...
வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து...
முல்லைத்தீவு, திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் பொலிஸாரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்துக்கென சிறப்பாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசராஜாவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத்துணிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நாட்டை ஆளப்போகும் எதிர்கால சந்ததிகள் இம்மாணவர்களே. அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என நிகழ்வில்...
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிதயில் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தில் தமிழ்...
கிளிநொச்சியில் மாகாண மேல் நீதிமன்றை உள்ளடக்கிய நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடத் தொகுதி 450 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (3) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று (03-09-2018) காலை 09.00 மணிக்கு இந்த அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா தலைமையில்...
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் மிதிவெடி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த 24 வயதான பி.திலீபன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்போது மற்றுமொருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா...
கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட முறிகண்டி பகுதியை சேர்ந்த கருப்பையா நித்தியகலா என்ற யுவதியின் உடல் நேற்று (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது. முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி வழிபாடு இடம்பெற்றதை அடுத்து அன்னாரின் பூத உடல் முறிகண்டி சேம காலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த யுவதியின் உடலிற்கு...
கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கிளிநொச்சி, பன்னங்கண்டி...
படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநாச்சி சேவை சந்தை முன்பாக இந்த ஆரப்பாட்டம் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில், கிராம மட்ட அமைப்புக்களும் கலந்து கொண்டன. கிளிநொச்சி சேவை சந்தைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை...
கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடது புற கண்ணுக்கு மேற்பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐந்து மாத கர்ப்பிணி எனவும்...
கிளிநொச்சியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகதரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனாக்கள் காணப்பட்டுள்ளமயினால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட ஊடகவியலாளர் ஒருவரும் மற்றும் கிளிநொச்சி...
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை இடுப்புப்பட்டி மற்றும் பேனா ஆகிய தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிப்பதை கண்டித்து, நேற்று (செவ்வாய்கிழமை) முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
தமிழர் தாயகத்தை துண்டாடும் வகையில் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை கண்டித்து முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணியும், போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய...
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் நேற்றையதினம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட உயரமான முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றிணையுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை’-இன் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை, முல்லைத்தீவு மாவட்ட தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள், கலை, கலாசார, பண்பாடுகள் சிதைக்கப்படுவதை...
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலையம் ஒன்றின் நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்வி கற்று வருகின்ற நிலையில்,...
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதாக வட.மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வீ.பிறேம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘வட.மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் கிளிநொச்சி இரணைமடுக்குளம். கடந்த 1975 ம் ஆண்டுக்கு...
முல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, ஒருசில தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்போது, சுனில் நிஷாந்த என்ற தனிநபருக்கு சொந்தமான பல மீன்பிடி படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து...
முல்லைத்தீவு - நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி கடற்றொழிலில் ஈடுபட்ட 27 வெளி மாவட்ட மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Loading posts...
All posts loaded
No more posts