- Tuesday
- February 25th, 2025

போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்...

அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கிளிநொச்சி இரணைமடு குளத்தினை விவசாயிகளிடம் கைளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இன்றைய விஜயம் அமையவுள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி...

இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் கிளிநொச்சி இரணைமடுகுளத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று(05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா...

நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநாச்சி பொது சந்தைவரை முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனயீர்ப்பு...

முல்லை மாவட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான இளையோர் அமைப்பு என்ற அமைப்பின் பெயரில் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் பல பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தச் சுவரொட்டிகளில் நீண்டகால யுத்தம் நிறைவிற்கு வந்து இப்போது நாம் ஓரளவு நின்மதியான காற்றினை சுவாசிக்கின்றோம் இதனைக் குழப்பும் விதமான செயற்பாடுகளும் இடைக்கிடை நடைபெறுகின்றன. அனைத்துவிதமான கொலைகளையும் சுமூகமாக நாம் எதிர்ப்போம்...

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலைக்குச் செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் சித்திரவதைக்கும் உள்படுத்தப்பட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட கும்பல் முச்சக்கர வண்டியில் மாணவியைக் கடத்திச் சென்று முல்லைத்தீவில் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். “இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முல்லைத்தீவில் வைத்துக்...

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் அடையாளம் தெரியாத...

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே...

இம்முறை மாவீரர்தினத்தில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், கொடி உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கிலும், கிழக்கிலுமாக இரண்டு இடங்களில் புலிக்கொடி பறக்கவிடப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு அருகில் இனம்தெரியாதவர்கள் புலிக்கொடியை பறக்க விட்டிருந்தனர். மத்திய கல்லூரிக்கு முன்பாக இருந்த மின்கம்பத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. சம்பவத்தை அறிந்த புதுக்குடியிருப்பு...

முல்லைத்தீவு காவல்துறையினர் இளைஞர்களிடம் கஞ்சா வாங்கி வருமாறு கோரிய போது அதனை மறுத்த மூன்று இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் , முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு 09 மணியளவில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் எம்மை மறித்து ,...

தமிழர் தாயக பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, எமது இனத்தை முற்றாக அழிக்கும் அளவிற்கு தென்னிலங்கை துணிந்துவிட்டது என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு...

முல்லைத்தீவு – நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பகுதி பெருக்கெடுத்துள்ளது. வடக்கில் தற்போது கடும் மழை பெய்துவருகின்ற நிலையில், குறித்த வாய்க்கால் பகுதி இன்று (புதன்கிழமை) காலை பெருக்கெடுத்து கடலுடன் சங்கமித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை நீடிப்பதோடு, குறிப்பாக வடக்கில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 100-150 மில்லிமீற்றர்...

தற்போது மழை வீழ்ச்சி குறைந்து காணப்படுவதால் இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் குறைந்து வருவதனால் வான் கதவுகள் திறக்கப்படமாட்டாது என எந்திரி சுதாகரன் தெரிவித்துள்ளார். இரணைமடு குளத்தினை தொடர்ந்து கண்காணிப்புகள் இடம்பெற்று வருவதாகவும் குளத்தில் நீர் 32.11 அடி இருப்பதனால் 36 அடி வரைக்கும் சேமிக்க முடியும் என்ற காரணத்தால்...

முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டது என்று கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டை உடைத்து ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஏழு பவுண் நகை, தண்ணீர் இறைக்கும் இயந்திரம், வீட்டு ஆவணங்கள்...

தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்தில் காணாமற்போன 6 பேர் விமானப் படையினரால் இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானப்படையின் எம்17 உலங்கு வானூர்தியின் உதவியுடன் அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டனர் என்று விமானப் படையினர் தெரிவித்தனர். நித்தகைக்குளம் மற்றும் அதனோடு...

கிளிநொச்சி ஏ9 வீதியில் நேற்று (செவ்வாய்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த எரிபொருள்தாங்கி வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உரியிழந்துள்ளார். மற்றொருவர் வைத்தியசாலைக் கொண்டு சென்ற...

கிளிநொச்சியில் ஜனாதிபதியினால் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுன கட்சியினர் பொங்கல் பரிமாறியதோடு பட்டாசுக் கொளுத்தியும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பதவி பிரமாணம் செய்தது முதல் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் பல இடங்களிலும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர் அந்தவகையில்...

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக வாகனங்களை பொல்லுகளை காட்டி நிறுத்தி பணம் கேட்டு அச்சுறுத்தல் விடுத்தவர்களில் இருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இதனால் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக மக்கள் திரண்டனர். வாகன நெரிசலும் ஏற்பட்டது. கிளிநொச்சி...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுப் படுத்துமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன் போது, தமது உறவுகளுக்கு நீதி வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு படுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்....

கிளிநொச்சி, சாந்தப்புரம் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் அகற்ற முற்பட்டமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. சாந்தப்புரம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்த காணி, கைவிடப்பட்டிருந்த நிலையில்...

All posts loaded
No more posts