முல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற மரங்களும் முறிவடைந்துள்ளன. இதன்போது, வீட்டின் கூரைகள் வீசப்பட்டதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இதேவேளை, குறித்த...

வெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்!

முள்ளியவளை முதலாம் ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தயானந்தன் என்பவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஆடுகளுக்கு குழைகள் வெட்டி எடுத்துவந்த வேளை மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (17) மாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.00 மணிக்கே இவர் உயிரிழந்திருந்தமை அயலவர்களால் கண்டறியப்பட்டு பொலிஸாருக்கு...
Ad Widget

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் நேற்று (புதன்கிழமை) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துள்ளார். வைத்தியசாலையில் நிலவும் சில குறைபாடுகள் தொடர்பாக மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டே ஆளுநரின் இந்த திடீர் கண்காணிப்பு...

தமிழ் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் வீடுகள் வழங்கி வைப்பு

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தால் வறிய நிலையில் உள்ள இரண்டு தமிழ் குடும்பத்திற்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. குறித்த வீடுகள் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரெராவின் ஆலோசனை வழிகாட்டலில் இவ்வாறு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. குருநாகலைச் சேர்ந்த சந்தன அழககோன் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேயர் ஆகியோரின்...

கிளிநொச்சி உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத்தண்டணை!!

கிளிநொச்சியில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவுக்குள் புழுக்கள் காணப்பட்ட விவகாரத்தில் உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டணை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆளுநர் செயலக ஊழியர்களால் பெறப்பட்ட உணவுப் பொதிகளில் கானப்பட்ட கத்தரிக்காய் கறியில் புழு காணப்பட்டது. ஆளுநரின் பணிப்பின் பெயரில் குறித்த விடயம் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது....

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு

கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மயக்கமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். முல்லைத்தீவு, கோம்பாவில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த்த் துயரச் சம்பவம் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு விக்னேஷ்வரா விளையாட்டுக்கழக வீரரான இராசேந்திரம் நிதர்சன் (வயது -25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (02) மாலை கரப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிதர்சன் சோர்வாகவுள்ளதாகத்...

தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மூலக்கிழை தெரிவின் பின்னர் பொதுமகன் இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 31.03.19 அன்று முப்புரம் வட்டார தொகுதியின் மூலக்கிழை தெரிவு நடைபெற்றுள்ளது மூலக்கிழையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த...

ஆளுநருக்கு அழைப்பாணை!

கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல உணவகம் தொடர்பிலான வழங்கில் எதிர்வரும் 5ம் திகதி முன்னிலையாகுமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா நேற்று 29.03.2019 வெள்ளிக்கிழமை அறிவித்தல் வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய புழு ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட...

சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு ஆளுநர் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்

பாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வடக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது, கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு காணப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை...

6 மாதங்களில் கிளிநொச்சி மைதானம் சுகததாச போன்று மாறும் – அமைச்சர் உறுதி

6 மாதங்களுக்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாக தொலைத்தொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குறுதியளித்தார். இங்குள்ள வீர வீராங்கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு இந்த விளையாட்டரங்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வட. மாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கநேற்று (ஞாயிற்றுக்கிழமை) கையளிக்கப்பட்டது....

ஒன்றரை வயதுக் குழந்தையுடன் இளம் தாயார் தற்கொலை முயற்சி!!

பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து தனக்குத் தானே தீவைத்து உயிரை மாய்க்க முயன்றார் என்று தெரிவித்து ஒன்றரை வயதுக் குழந்தையின் தாயார் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தனது குழந்தையையும் அழைத்துச் சென்று அடர்ந்த பற்றைக்குள் இவ்வாறு தனக்குத் தானே தீவைத்தார். எனினும் அவர் குழந்தையுடன் அவர் பற்றைப் பகுதிக்குள் ஓடிச்...

முல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொள்ளை!

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளரின் வீட்டில் நேற்று பகல் வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணணி என்பன திருடப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில்...

முகாமையாளர் கொலையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின!

கிளிநொச்சி காப்புறுதி நிறுவன முகாமையாளர் கொலை விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. காப்புறுதி முகாமையாளரை கொல்லப் போகின்றேன் என சந்தேகநபர் தனது மனைவியிடம் முதல்நாள் தெரிவித்துவிட்டே இந்த கொலையை செய்தார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உதயநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளரான வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (32) என்பவர்...

35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் கடத்தல்!

வவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார். பாடசாலை சென்று வீடு...

கிளி.கொலை சம்பவம் – வெளிநாட்டுக்குச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் கைது

கிளிநொச்சி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக, ஒரு பிள்ளையின் தந்தையான காந்தலிங்கம் பிரேம ரமணன் என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டிருந்தார். கொலை செய்யப்பட்டவருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார்...

கிளிநொச்சியில் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை! பிரதேசத்தில் பதற்றம்!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வருகின்ற ஒரு பிள்ளையின் தந்தையான காந்தலிங்கம் பிரேம ரமணன் (வயது-33) என்பவரே கொலையுண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,...

அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள்!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) போராட்டம் இடம்பெறும் இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம், இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதனை...

கிளிநொச்சியில் ஏழு நாட்களாக 14 வயது சிறுவனை காணவில்லை!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை சிறுவனின் தந்தை வழங்கியுள்ளார். ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 9-ல் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த...

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த பஸ் விபத்து: பலர் படுகாயம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சாரதி உள்பட பயணிகள் பலர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பரந்தனில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்ப்பு நோக்கி பயணித்த பேருந்து பரந்தனில் ஏ9 வீதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் சாரதி...

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவு

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட. மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னாண்டோ நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்படி உத்தரவை கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவர் விடுத்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப்...
Loading posts...

All posts loaded

No more posts