- Saturday
- January 11th, 2025
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள இராணுவத்தினர் , மாணவர்களின் உணவு வகைகளை கைகளால் சோதனையிடுவது தொடர்பில் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாடசாலைகளின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் , இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை எனும் பெயரில் மாணவர்களை தினமும் இம்சித்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. மாணவர்கள் , ஆசிரியர்கள்...
முல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறுவிளைவித்த கொக்குளாய் பகுதியினை சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் நேற்று (22) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்., கடந்த 15.05.2019 அன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கொக்குளாய் மேற்கு 77 ஆம் இலக்க கிராம சேவையாளர்...
புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒத்துழைப்பு மையத்திலேயே குறித்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 36 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் புனர்வாழ்வு நாயகம் மேஜர் ஜெனரல் ஜனக...
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் இவை வைக்கப்பட்டிந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியனவே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தர்மபுரம்...
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது . சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம்...
வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முள்ளிவாய்க்காலில் முன்னெடுத்தனர். வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்திற்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காலையில் இருந்து பிற்பகல் 4 மணி வரை அடையாள உணவுத்...
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு கதறி அழுத நிகழ்வு நேற்று...
முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு அவ்விடத்தில் வீடமைப்புத் திட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிங்கள மக்கள்,நேற்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட மக்கள், 1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து தொழில் செய்து வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் இங்கு வாழ்ந்து...
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குறித்த மௌலவி நீராவிப்பிட்டி பகுதியில் தங்கி இருப்பதாக சிறப்பு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ளார்கள். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து இவர் இலங்கையில் தடைசெய்யப்பட்ட...
உணவகத்திற்குள்ளிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜன்குளம் தாவூத் ஹோட்டல் உாிமையாளா் பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு கனகராஜன்குளம்...
கிளிநொச்சியில் நேற்று (25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பங்களை அடுத்து நாடாளவிய ரீதியில் தேடுதல்களும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்படி ஆறு பேரும்...
கிளிநொச்சி பளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் காலை முதல் குறித்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பளை பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற மரங்களும் முறிவடைந்துள்ளன. இதன்போது, வீட்டின் கூரைகள் வீசப்பட்டதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இதேவேளை, குறித்த...
முள்ளியவளை முதலாம் ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தயானந்தன் என்பவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஆடுகளுக்கு குழைகள் வெட்டி எடுத்துவந்த வேளை மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (17) மாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.00 மணிக்கே இவர் உயிரிழந்திருந்தமை அயலவர்களால் கண்டறியப்பட்டு பொலிஸாருக்கு...
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் நேற்று (புதன்கிழமை) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துள்ளார். வைத்தியசாலையில் நிலவும் சில குறைபாடுகள் தொடர்பாக மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டே ஆளுநரின் இந்த திடீர் கண்காணிப்பு...
வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தால் வறிய நிலையில் உள்ள இரண்டு தமிழ் குடும்பத்திற்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. குறித்த வீடுகள் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரெராவின் ஆலோசனை வழிகாட்டலில் இவ்வாறு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. குருநாகலைச் சேர்ந்த சந்தன அழககோன் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேயர் ஆகியோரின்...
கிளிநொச்சியில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவுக்குள் புழுக்கள் காணப்பட்ட விவகாரத்தில் உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டணை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆளுநர் செயலக ஊழியர்களால் பெறப்பட்ட உணவுப் பொதிகளில் கானப்பட்ட கத்தரிக்காய் கறியில் புழு காணப்பட்டது. ஆளுநரின் பணிப்பின் பெயரில் குறித்த விடயம் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது....
கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மயக்கமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். முல்லைத்தீவு, கோம்பாவில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த்த் துயரச் சம்பவம் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு விக்னேஷ்வரா விளையாட்டுக்கழக வீரரான இராசேந்திரம் நிதர்சன் (வயது -25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (02) மாலை கரப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிதர்சன் சோர்வாகவுள்ளதாகத்...
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மூலக்கிழை தெரிவின் பின்னர் பொதுமகன் இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 31.03.19 அன்று முப்புரம் வட்டார தொகுதியின் மூலக்கிழை தெரிவு நடைபெற்றுள்ளது மூலக்கிழையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த...
கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல உணவகம் தொடர்பிலான வழங்கில் எதிர்வரும் 5ம் திகதி முன்னிலையாகுமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா நேற்று 29.03.2019 வெள்ளிக்கிழமை அறிவித்தல் வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய புழு ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts