- Saturday
- January 11th, 2025
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கிளிநொச்சியில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி இந்து கல்லூரி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் மண்டபமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை, கிளிநொச்சியில்...
கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்றையதினம் 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோல் காணப்பட்டுள்ளது. இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் அதன் தோல் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறே நாயின் தோலும் காணப்பட்டுள்ளது....
கிளிநொச்சியில் பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு ஆரம்பித்த மழை இன்றும் (திங்கட்கிழமை) தொடர்ச்சியாக பெய்வதால் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்து...
முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் தாக்குதல் நடத்தச் சென்ற இருவர் சுதந்திரபுரத்தில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த இருவர்...
வவுனியா- குறிசுட்டகுளம் பகுதியில் காணாமல்போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறிசுட்டகுளம் காட்டிற்குள், மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து குறித்த இளைஞனை பொலிஸார் சடலமாக இன்று (திங்கட்கிழமை) கண்டெடுத்துள்ளனர். காட்டிலுள்ள கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் நீதவானின் வருகையின் பின்னர்...
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிசுட்டகுளம் பகுதியில் இளைஞர் ஓருவர் காணாமல்போயுள்ளார். குறித்த இளைஞர் நேற்று காலை 7.30 மணியளவில் குறிசுட்ட குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்பதால், அவரது பெற்றோர் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். இந்நிலையில், அவர்...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவுள்ளன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்படவுள்ளன. சுதந்திரபுரம் – கொலனி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து அகழப்பட்ட மண் நேற்று பிறிதொரு பகுதியில் கொட்டப்பட்டது. இதன்போதே, குறித்த மனித எச்சங்கள்...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவரை கப் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் ஒன்றுதிரண்டு வாகனத்தைச் செலுத்தி வந்த சிங்கள சாரதியை தாக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் சாரதியை பொது மக்களிடமிருந்து மீட்டுச் சென்றனர்....
நீதிமன்ற தீா்ப்பினை மீறி நீராவியடி பிள்ளையாா் ஆலய சூழலில் பிக்குவின் உடலம் தகனம் செய்யப்படுவதை கண்டித்த சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்கள காடையா்கள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனா். இதனை கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் பகீஸ்காிப்பில் இறங்கினா். நீதிமன்ற தீா்ப்பினை மீறி பொலிஸாா் முன்னிலையில் பிக்குவின் உடலை நல்லடக்கம் செய்வத ற்கு பௌத்த பிக்கள் முயற்சித்ததை தட்டிக் கேட்டதற்காக...
தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட தேக்கம் மரங்கள் வனவளத் திணைக்களத்தால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பயன் தரும் தேக்கம் மரங்கள் நடப்பட்டன. அவை வனவளத் திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. நேற்று காலை முதல்...
முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளர் என அறியப்படுகிறது. முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில நேற்று (புதன்கிழமை) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும்...
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள வங்கி இயந்திரத்தில் களவாட முற்பட்ட 6 பேர் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து களவாட முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த 6 பேரும் நேற்றைய தினம் முழங்காவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்....
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டு வளவில் முதலாவதாக படையினர் தேடுதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார். அதன் பின்னர் தவறுதலாக தேடுதல் நடத்திவிட்டோம் என அடுத்த வளவிற்குள் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து இவ்வாறு தேடுதல் நடவடிக்கை...
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பூவரசங்குளப் பகுதியில், சிசு ஒன்றின் சடலம் குளம் ஒன்றின் அருகில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவை தாய், குளத்தில் அருகில் பிரசவித்திருக்கலாம் எaன்றும், அதன் பின்னர் குளத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை, சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சிசுவின் தாயையும்...
இனப்படுகொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பொறுத்த வரையில் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நேரடியான இனப்படுகொலையாளி எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அவர்...
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார், ஆனால் நாம் அதனை நிராகரித்தோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,...
முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர்களை நோக்கி நேற்று இரவு இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அம்பகாமம் பகுதியில் தற்பொழுது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் வடமாகாண மக்கள் 1000 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் வருகை...
முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. றோமன் கத்தேலிக்க பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய இ. லிந்துசியா (சீனு) என்ற மாணவி கடந்த மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி சம்பவ தினத்தன்று பாடசாலை...
நாட்டில் அமையவுள்ள எமது புதிய அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள இளைஞர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர்கள் அனைவரும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிசொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மகிந்தானந்த மேலும்...
Loading posts...
All posts loaded
No more posts