- Saturday
- January 11th, 2025
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூரவீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அப் பகுதி மக்களால் இதுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் நேற்று (வியாழக்கிழமை) குமுழமுனைப் பகுதி இளைஞர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன்...
காணாமற்போயிருந்த இளைஞனும், பெண்ணும் 7 நாள்களின் பின் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது சடலங்கள் பரந்தன் ஓவிசியர் கடைச் சந்திக்கு அண்மையாகவுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் பழுதடைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி குமரபுரத்தைச் சேர்ந்த இளைஞனும் திருநகரைச் சேர்ந்த இளம் பெண்ணுமே கடந்த 3ஆம்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் உள்ள இளையோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொழில் சந்தை நாளை வியாழக்கிழமை (ஓகஸ்ட் 27) காலை 8.30 மணிக்கு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தத் தகவலை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்த தொழில் சந்தையில்...
செஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த...
கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் குறித்த நான்கு பேரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நால்வரும் மதுபோதையில் சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு கற்களால் எறிந்தும் வேலிகளை அடித்து உடைத்தும் அட்டக்காசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீட்டின்...
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் எழுமாறாக 100 பேரின் உயிரியல் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 9 மாகாணங்களின் சுகாதாரத் திணைக்களங்களால் அடுத்த ஒரு வருடத்துக்கு எழுமாறாக தெரிவு செய்யப்படும் நபர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி...
கிளிநொச்சியில் அண்மையில் யானையின் தாக்குதலில் காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்சி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்க நேற்று (புதன்கிழமை) மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளர் வழிபாட்டு இடத்திற்கு...
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில் நுட்பபீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் கிளிநொச்சி வாழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்....
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின்...
கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விசுவமடு பகுதியில் இருந்து 35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளி விட்டு குறித்த டிப்பர் வாகனம்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டிய நிலையில நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உறவினர்கள் பதாகைகளை ஏந்தியவாறும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது...
சுதந்திரபுரம் படுகொலை 22ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று...
அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த புயல் தாக்கத்தினால் பள்ளிக்குடாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கௌதாரி முனையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த...
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு தினமான இன்று (18)உயிர் நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்த்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார். "எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின்...
கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு எனத்தெரிவித்து குறித்த பாடசாலையினை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையின் அதிகாரிகள் வடக்கு...
ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மக்கள் தமது தேவைகளுக்காக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க கிளிநொச்சி நகருக்கு பயணிக்க முடியும் என கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு...
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன இன்று (17-04-2020) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவருடன் விமானப்படைத் தளபதியும் வருகைதந்திருந்தார். இன்று காலை பலாலி விமான நிலையத்திற்கு விசேட விமானம் மூலம் விஜயம் சென்ற இவர்கள் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சி இரணைமடு நெலும் பியச மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார்கள்....
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் பலர் கடல் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு இலங்கை இராணுவத்தினரும் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து வறிய மக்களுக்கு கடல் உணவுகளை வழங்கும் நடவடிக்கநேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில், முதற்கட்டமாக 460 குடும்பங்களுக்கு தலா ஒன்று முதல் 2 கிலோ நிறையுடைய...
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தையான மார்க்கண்டு...
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த...
Loading posts...
All posts loaded
No more posts