- Saturday
- January 11th, 2025
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளது என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக, நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 26 அடி 1அங்குலமாக உயர்ந்துள்ளது. 36...
கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்றையதினம் (புதன்கிழமை) இரவு பத்து மணிக்கு கணிக்கப்பட்ட நீரின் அளவின் அடிப்படையில் சில குளங்கள் இன்று வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அக்கராயன்குளம் 11 அடி 04 இஞ்ச் “FSL 25′-0”, கரியாலை நாகமடுவான் குளம் 02...
கிளிநொச்சியில் இதுவரை 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் (திங்கட்கிழமை), கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலை...
கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர் இருவர் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கி வீசப்பட்டதாக சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வழமைபோல் கார்த்திகை விளக்கீட்டிற்காக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் வீட்டு வளவின் உள்ளே...
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை கண்டறியப்பட்டது. இதனால், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றியோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு...
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் எரிபொருள் கடையொன்றினை நடத்திவரும் 72 வயதுடைய பாரதி புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை மூலம்...
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்...
கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை (Infectious Disease Hospital for Northern Province) கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று (11) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட இவ் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன்...
வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையமாக இந்தப் பிரிவு நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளமை குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக...
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் போக்குவரத்துக்களை மாவட்டங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தி சேவை வழங்க மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பொதுப் போக்குவரத்தினால் கொரோனாத் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்தார். அவர் கூறுகையில், “யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...
கிளிநொச்சியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் பயண விபரங்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் நல்லூரடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரிற்கு சொந்தமான, கொழும்பு உணவகத்திலேயே இந்த நபரும் பணியாற்றினார். அந்த உணவகத்தில் பணியாற்றிய மேலும் 3 பேர் புங்குடுதீவு, வேலணை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட நபர், மயூரா ஹோட்டல், இல.46, கதிரேசன்...
கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) இரவு கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கும் மயூரா உணவகத்தில் பணியாற்றும் பணியாளருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது...
மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மதுபானம் அருந்திய நிலையில் இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில்...
முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 05.00 மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள் இது குறித்து எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்....
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக குறித்த கடிதம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் நேற்று தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக கண்டனங்கள் வெளிவரும் நிலையில்,...
முல்லைத்தீவு, முறிப்புப் பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன், வாள் முனையில் பொய் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரியவருவதாவது, முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின்...
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்றைய தினம் பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாகத் தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறு கோரியே இந்தப் போராட்டம்...
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த காலம் தொட்டு இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சுரேன் ராகவனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு...
ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்… வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து...
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் மாணவன் ஒருவனின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளதோடு, 20 க்கு மேற்பட்ட கதிரைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் க.பொ.த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார்...
Loading posts...
All posts loaded
No more posts