- Monday
- February 24th, 2025

நாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில், சூரியன் பூமிக்கு நேராக உச்சம் கொடுப்பதே இந்த கடும் வெப்பமான காலநிலைக்கு காரணமாகும்....

கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறையினால் போராட்டம் இன்று (திங்கட்கிழமை)ஆ ரம்பமானது. குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை முதல் குறித்த வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், முன்னாள் வடக்கு...

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் பொலிஸாரின் பாவனையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரின் ஏ-9 வீதியில் பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் திணைக்களப் பிரிவுகள் பயன்படுத்திவரும் காணியை அரச காணி எனத் தெரிவித்து அளவீடு செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. குறித்த பகுதிக்கு இன்று (புதன்கிழமை) காலை...

கிளிநொச்சியில் அமைந்துள்ள உருத்திர புரீச்சகம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுக்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கோவில் வளாகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கோவில் அமைந்தள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்புடுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால்...

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்றது. ‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை இரணை மாதா நகர் பகுதியில்...

கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தாயார் கிணற்றிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், 3 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று மற்ற இரண்டு சடலங்களும் மீட்கப்படவுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலய கிணற்றிற்குள், நேற்று (3) மாலை இந்த அனர்த்தம் நடந்தது. கணவருடன்ஏற்பட்ட தகராறையடுத்து தனது பிள்ளைகளுடன்...

இரணைதீவுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்றபோது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை மாதா நகர் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், மெசிடோ...

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இவர்கள் மீது, தாக்குதல் நடத்தியது 17 வயதுடைய உறவுமுறைச் சிறுவன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சகோதரனான நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்....

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி...

“எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது உறவுகளை எம்மிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம்” இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர்...

எதிர்வரும் 20ஆம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் பணியாற்றிய ஏனைய ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) கடமைக்குச் சென்ற நிலையில், அவர்கள் தமது அச்சத்தினை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத குறித்த ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகம் தொடர்ந்தும் அவர்களை சேவையாற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பமான நிலையில் தற்போது முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது. தற்போது வட மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற சிவமோகன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன்...

விடுதலைப்புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் போராட்டம் நேற்று (01) ஆரம்பமானது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடிய உறவுகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது....

கிளிநொச்சி- உருத்திரபுரம், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் ஆராய்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுர சிவன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக் கூறி அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அப்பகுதிக்கு பௌத்த தேரர் ஒருவர் நண்பகல்...

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் அமைந்துள்ள கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் உள்நுழைந்தமைக்காக கேப்பாபுலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (25) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கால்நடைகளின் உரிமையாளர், வழமைபோன்று நேற்றைய தினம் (25)...

முள்ளியவளை நாவல்காட்டு கிராமத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சம் நெஞ்சில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது என்று சட்ட மருத்துவ வல்லுநரின் நிபுணத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நபர் 6 மாதங்களுக்கு அண்மித்த காலப்பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளமையும் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காட்டு கிராமத்தில்...

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கான நீர்வருகை தொடர்ந்து காணப்படுவதனால் குளத்தின் வான் கதவுகள் 14ம் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. இரண்டு வான் கதவுகள் 2 அடியாகவும், 4 வான் கதவுகள் 1 அடி 6 அங்குலமாகவும், 4 வான் கதவுகள் 1 அடியாகவும், 4 வான் கதவுகள் 6 அங்குலமாகவும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன...

தற்போதைய உலக அரங்கில் தனிநாடு என்பது சாத்தியமில்லை. இருந்தாலும், தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை பூர்த்தி செய்து சுதந்திரமாக வாழ வேண்டும். இதை நிறைவேற்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்க முன்வர வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று (3) கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை...

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று (30) இனம் காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இன்று (31) இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்றன. குறித்த இடத்தில் தடயவியல் பொலிஸார் மற்றும்...

All posts loaded
No more posts