- Monday
- February 24th, 2025

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். இன்று (26) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர்...

கிளிநொச்சியில் ஏ-9 வீதியில் இன்று (15) காலை நடந்த விபத்தில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணவி மஞ்சள் கோடு ஊடாக வீதியைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு உயர்தர வகுப்புக்கு அனுமதி பெற வந்தபோதே இந்த விபத்து நடந்துள்ளது. மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மாணவி மஞ்சள்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒரு பிள்ளையின் இளம் தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாயின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி காலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 22 அகவையுடைய ஒரு பிள்ளையின் தாயே...

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு பொலிஸார் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறி பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இவ்வாறு பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை...

கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி- உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர், கடந்த 16ஆம் திகதி, மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய இறுதி...

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மயானத்தை அமைக்க 24 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாயை கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார்....

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர். இதன்போது அந்த இடத்தில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து காணி அளவீடு செய்ய வேண்டாம் என்ற...

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 25க்கும் மேற்பட்டோருக்கு இன்று காலை, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டமையினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த...

கிளிநொச்சி - புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில், இன்று (21) அதிகாலை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார். நாகேந்திரபுரம் பகுதியில், இன்று அதிகாலை 4 மணியளவில், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி ஊடாக சென்ற டிப்பர் ஒன்றை நிறுத்துமாறு, படையினர் சமிஞ்கை...

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் தனிநபர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் தொற்று நீக்கும் பணியினை முன்னெடுத்திருந்தார். கிளிநொச்சி- கண்டாவளை, தருமபுரம் பகுதியில் மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள் மற்றும் பொலிஸ் நிலையம், இராணுவ சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயல்பாட்டினை அவர் நேற்று (வெள்ளிக்கிழமை)...

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் கரைச்சி சுகாதார வைத்திய பிரிவில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கண்டாவளை சுகாதாரப் பிரிவில் கண்ணகிபுரம், புன்னைநீராவி என்ற முகவரியைச் சேர்ந்த 67 வயதுடைய நல்லதம்பி சிவபாக்கியம் என்பவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, கரைச்சி...

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள், கொரோனா பரிசோதனைகளிற்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர் என அறியமுடிகிறது. இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வலைவீசி பிடிக்கும் பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,முள்ளியவளை காவல்துறை பிரிவுகள் கடந்த 17.05.21 ஆம் திகதி இரவு 11.00...

இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் 'முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்' 12ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகெங்கிலும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை உடன் இரத்துச் செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலில் கலந்துகொள்வதைத்...

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் , நினைவு தூபி உடைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இம்முறை புதிதாக நாட்டுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த 6.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பொது நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமான நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு...

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை முள்ளிவாய்க்கால் கிராமத்துக்கு பயணிப்போரை வேறு பாதையொன்றினை பயன்படுத்துமாறு இராணுவத்தினர் வலியுறுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) பொது நினைவுக்கல் ஒன்று...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் முடிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு (வியாழக்கிழமை) முதல் அது பயன்பாட்டுக்கு வருகிறது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளைக் கொண்டதாகவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த சிகிச்சை நிலையமானது, கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகக் கட்டமைப்பின்...

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.40 மணியளிவில் இடம்பெற்றது. சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் திஷாந்த் (வயது-19) என்ற இளைஞன் சம்பவ...

முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு 03 கண்டம் வயல்வெளிப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள். நேற்று (15)மாலைவேளை தண்ணிமுறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்துவந்துள்ளது. குமுழமுனை பகுதியனை சேர்ந்த இரு விவசாயிகளும்,கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த ஒரு விவசாயியும் குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு...

All posts loaded
No more posts