- Saturday
- December 21st, 2024
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் நிமால் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர். அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில்...
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, ஓஎம்பி அலுவலகத்தின் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க,...
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் 14 ஆவது வயதுடைய மகன் அதிக மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த மகன் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம்...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். புதுக்குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள், போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். புதுக்குடியிருப்பின் பல இடங்களில் வெள்ள...
முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை மூடி மழைவெள்ளநீர் பாய்வதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சிரமத்தினை எதிர்கொள்வதோடு விபத்து ஏற்படும் சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். கனமழை பெய்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை தொடர்ச்சியாக பெய்துவருகின்றது. இதனால்...
024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் நேற்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா...
10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் (10) 3.00 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பிரச்சாரக்...
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாாிகள் (OMP) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினரால் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 128 பேரிடமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்...
முல்லைத்தீவு கல்விளான் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (24.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வயலில் அறுவடை செய்த நெல்லை வீதி காவலில் பாதுகாத்தவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி – குஞ்சி பரந்தன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணம் செய்த டிப்பர் வாகனமொன்றை பொலிஸார் பல தடவைகள் நிறுத்துமாறு கூறியதாகவும், எனினும் குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றதால் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த...
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவனின் தலையில் ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை செல்வதற்கு மாணவன் மறுப்புத் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, கடந்த 19 ஆம் திகதி குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தலையில்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும், இதன்மூலம் கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையை பொறுத்த வரையில்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசர் நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் கடந்த புதன்கிழமை (26) உயிரிழந்தார். குமாரசாமிபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த நான்கு வயதான சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியில் 24 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். குறித்த நபர் கடந்த 2ஆம் திகதி கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டிருந்த நிலையில், தன்னை அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் தஞ்சமடைந்துள்ளார். இதன்போது தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம்...
கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகைத் தந்திருந்த பொலிஸார் குறித்த சிதைவுகளை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும்,...
சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 45 வயதுடைய ஆண் ஒருவரும் 37...
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த இளைஞனை வவுனியா ஆச்சிகுளம் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பபெண் திருமணம் செய்து 7 மாதங்களாக...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்ற போது, ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த வடமாகாண ஆளுநர் பி....
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவு இயந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவு இயந்திரத்தில் பயணித்த...
Loading posts...
All posts loaded
No more posts