- Monday
- February 24th, 2025

கிளிநொச்சி- பொன்னார்வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படுவதாக மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் மறுத்துள்ளார். கட ந்த ஆட்சியில் எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
வடமாகாணசபையின் 101வது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில்...

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவரனை செஞ்சோலை சிறுவர் இல்ல பிள்ளைகள் சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது செஞ்சோலைப் பிள்ளைகளின் தேவைகள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவ்ரன் கேட்டறிந்து கொண்டார். வடமாகாண சபையின் 101வது அமர்வைப் பார்வையிட இன்றையதினம் வந்த சிறுவர்கள் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதுடன், தமக்கான தேவைகள் தொடர்பிலும் கோரிக்கைகளை முன்வைத்தனர். கல்வி உதவிகள் மற்றும் கல்வி கற்பதற்கான...

வட மாகாணத்தில் மயானங்களை சுற்றி 200 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் குடியிருப்புகள் உருவாக்கப்பட கூடாது. அதற்கான நடவடிக்கைகளை மாகாண உள்ளூராட்சி அமைச்சு எடுக்க வேண்டும் என மாகாண சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 101வது அமர்வு இன்று பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்ற போது, நீர்வேலி பகுதியில் மயனாம் ஒன்றை அண்மித்திருக்கும் குடியிருப்பாளர்கள், மாகாண...

வட மாகாண சபையின் அமைச்சரவை நெருக்கடியால் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று(திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடையேயான நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், வடக்கு...

வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சுக்களுக்கு நிதி, அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் துணியிலான பைகள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி நெறி இன்று (03) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...

வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். யாழ்.வணிகர் கழகத்தின் அலுவலகத்தில் சிரேஸ்ட சட்டத்தரணியும், சமாதான நீதவானுமாகிய வீ.ரீ.சிவலிங்கத்தின் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு இவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாகாணசபையின் அங்கத்துவக் கட்சிகளுக்கான சுழற்சிமுறை ஆசனம் இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்படுகின்றது. முதலில்...

வடமாகாண மக்களின் உற்பத்திகளை வெளிநாட்டில் சந்தைப்படுத்துவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜேர்மனிய தூதுவர் ஜோன் ரோக்டியிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவருக்கும் இடையிலான விசேட குழுவினருக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசேட சந்திப்பு இடம்பெற்றது. முதலமைச்சரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு, தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, "வடக்கு...

சில சில சச்சரவுகள் இருந்தாலும் இதுவரை காலமும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சபை அமர்வுகளை சுமூகமாக முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 100ஆவது சபை அமர்வு இன்றையதினம் வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போதே அவைத்தலைவர் அவ்வாறு தெரிவித்தார்....

கௌரவ அவைத் தலைவர் அவர்களே, எமது சபையின் நூறாவது அமர்வுக்கு முன்பாக இன்றைய 99வது அமர்வில் வட மாகாண சபையின் ஆயுட் காலத்திற்கு இன்னும் பதினைந்து மாதங்களே இருக்கின்ற நிலையில் கடந்த கடந்த மூன்று வருடம் 9 மாதத்தில் ஒட்டு மொத்த வட மாகாண சபையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு முதலில் எனது நன்றிகளைத்...

வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக என்.விந்தன் கனகரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பரிந்துரைக்கான கடிதம் நேற்றயதினம் (திங்கட்கிழமை) கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் செயற்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடல் வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது 8 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், டெனிஸ்வரனின்...

வடமாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் அறிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பாக அவர் பிரதிநிதித்துவம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.ஸ்ரீகாந்தாவினால் அனுப்பி வைக்ககப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப்...

நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார். நெடுந்தீவில் அண்மையில் வரட்சி காரணமாகக் குதிரைகள் இறந்துள்ளன என்ற செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்தே முதலமைச்சரால் இந்த விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தலைமையிலான இக்குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன்...

வட. மாகாணத்தில் காணப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் தமிழ் இளைஞர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட. மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளுக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு யாழ். கைதடியில் அமைந்துள்ள வட. மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த...

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை செய்யப்படும் என்று வட.மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார். வவுனியா, தோனிக்கல் முத்து மாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “ஞாயிற்றுக்கிழமைகளிலே தனியார் கல்வி நிறுவனங்கள்...

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்ததுடன் பிரதமர் மோடியின் அனுபவ குறிப்பு ஒன்றினையும் வழங்கியுள்ளார். யாழ்பாணத்திற்கான விஜயத்தினை நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்த தமிழிசை, வடக்கு முதலமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை இச்சந்திப்பு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதாகவும் பிரதமர்...

வட மாகாண சபையின் மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள், புனர்வாழ்வு, கூட்டுறவு அமைச்சராகப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் திருமதி அனந்தி சசிதரன, தனது கடமைகளை, இன்று (03) பொறுப்பேற்றார். யாழ். ஏ-9 வீதியின் அரியாலைப் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்,தன்னுடை கடமைகளை, இன்று (03) மதியம், உத்தியோகபூர்வமாக அனந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், வட மாகாண...

பத்திரிகையாளர் தராகி சிவராம் படுகொலையில் தான் சம்பந்தப்படவில்லையெனவும், வடமாகாண முதலமைச்சர் தனக்கு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் யாழ் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வரும்வகையில் வெளியே கிடைக்கச் செய்தமை, முதலமைச்சருக்கும் மாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இருக்கக்கூடிய தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை பெறுமதியற்றதாக்கியுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட சுயவிவரக் கோவைகளும் அதற்கான பதில்களும்...

மாகாணத் தெரிவுக்குழு என்னை முழுமையாக விசாரணை செய்யாவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாகச் சென்று ஆஜராவேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மக்கள் தங்கள் வாக்குப்பலத்தினால் தங்களுக்கு சேவை செய்யவே எங்களைத் தெரிவுசெய்துள்ளனர். அவர்களுக்கு பதில்சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு...

All posts loaded
No more posts