- Sunday
- February 23rd, 2025

தாம் வகிக்கும் போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சை ஆளுனர் நினைத்தால் போல் சுவிகரிக்க முடியாது என வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் வேண்டு கோளுக்கமைய அவ்வாறு அமைச்சு பதவியை சுவிகரிக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். டெனிஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து விலக்குவதற்கான அனுமதியை கடிதம் ஒன்றின் மூலம் முதலமைச்சர்...

வடக்கு மாகாணத்தின் மீன்பிடி அமைச்சராக சிவனேசனும், சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி குணசீலனும் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ரெனினோல்ட் குரே முன்னிலையில், இவர்கள் இருவரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உடனிருந்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில் அண்மைய காலமாக நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அமைச்சரவையில்...

“வட மாகாண சபையில் டெலோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியை, டெலோவின் உத்தியோகபூர்வ பரிந்துரையை மீறி குணசீலனுக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவது, டெலோவுக்குள் கடும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது” என, டெலோ தெரிவித்துள்ளது. இது குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அமைச்சர் பா.டெனிஸ்வரன் டெலோவின் கொள்கைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் அப்பால் சென்று வடக்கு...

“வடமாகாணப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிட்டேன்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். நேற்று (22) அனுப்பிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “டெலோ விடுத்த கோரிக்கைக் கேற்ப விந்தன் கனகரத்தினத்தை உள்ளடக்க முடியாது எனவும் அவரை...

புகையிரதக் கடவை விபத்துகளைத் தடுக்க வடமாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (24.08.2017) வட மாகாண சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கிலுள்ள புகையிரதக் கடவைகளில் பல பாதுகாப்பற்றவையாகக் காணப்படுவதனால் தொடர்ச்சியான விபத்துகள்...

முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். அவர்களது இடத்திற்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அனந்தி சசிதரன் மற்றும்...

வட மாகாண சபையின் கையாலாகாத் தன்மைக்கு விடையளிக்கத் தெரியாமல் முதலமைச்சர் பாப்பாண்டவரின் பெயரை உவமைக்கு எடுத்துக் கொண்டமை கண்டிக்கத்தக்கது என வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். தான் ஊடக விளம்பரத்திற்காகச் செயற்படுவதாக தெரிவித்து விடயத்தைத் திரிபுபடுத்த முதல்வர் முயன்றுள்ளதாகவும் அவர் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது செயற்பாடுகளை...

வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் தனது பதவியை தக்க வைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,...

வட மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களிற்கான ஆக்க பூர்வமான பதில்களாக அமைந்திருக்கவில்லை. என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குறிப்பிட்டு உள்ளார். எதிர்க்கட்சி தலைவரினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட...

தனியார் மருத்துவக்கல்வியை எதிர்க்கும் வைத்தியர்கள் மக்களின் வரி பணத்தில் இலவசகல்வியினை கற்ற வைத்தியர்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற தயாரா? என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள...

முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளை மீட்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் வடாமாகாண முதலமைச்சர் ஆகியோர் தலையிடுவதற்கு அமைச்சர் றிஷாட் பதியூதீன் தடையாக உள்ளார் என கூறியிருக்கும் வட மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், மேற்படி காணிகளை மீட்க முடியாமைக்காக அமைச்சர் றிஷாட் பதியூதீன் பதவி துறக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
வட...

யாழ். நல்லூர் பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ். மாநகர ஆணையாளருக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார். தியாகி திலீபனின் நினைவிடம் எவ்வித பாதுகாப்பு வேலிகளும் இன்றி வெறுமனே காணப்படும் நிலையில், அதற்கு எல்லைகளை போட்டு பாதுகாப்பு...

பாப்பரசரை போல பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காகவே வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகிறார் என, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 102ஆவது அமர்வு, அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அமர்வின் ஆரம்பத்திலேயே முதலமைச்சருக்கும் மாகாண எதிர்க்கட்சித்...

அமைச்சராக பொறுப்பெடுத்துள்ள நிலையில் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுத்து வருவதுடன், வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியும் எப்போது பறிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளதாக வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள், புனர்வாழ்வு மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து...

எந்த நம்பிக்கையுடன் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா சேமமடு கிராமத்தில் நேற்று (திங்கட்கிழமை) கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும்...

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சிப்பொறுப்பில் இருந்து தான் ஒரு போதும் சுய விருப்பத்துடன் பதவி விலகப்போவதில்லை என்றும், கட்சியோ முதலமைச்சரோ தனக்கு பெரியவர்கள் இல்லை என்றும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு டெனிஸ்வரனுக்கு டெலோ அறிவித்திருந்த நிலையில், அவரது நிலைப்பாடு குறித்து நேற்று (திங்கட்கிழமை) மன்னாரில் உள்ள அமைச்சரின் உபஅலுவலகத்தில்...

வடமாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச்செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த கால வரலாறுகளில் வடமாகாண சபைக்கு...

வட. மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் மற்றும் ரெலோ கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சபை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வட. மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து, இலங்கை தமிழரசு கட்சி வடமாகாண சபையில் அமைச்சுப்...

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக பாலின் கொள்வனவு விலையை 72 ரூபாக உயர்த்த வடமாகாண சபை முடிவெடுத்துள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 101ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , உள்ளூர் பால் உற்பத்தியினை ஊக்குவிக்கவும் , உள்ளூர்...

அறிவுரீதியாகவும், இராஜதந்திர ரீதியிலும் தமிழ் மக்களுக்கான தீர்வு நோக்கி எமது தலைவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நாம் வெற்றியடைவோம். ஆனால், அபவிருத்தியை நோக்கிப் பயணிப்பதையும், தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற இரண்டும் வடமாகாணசபையினால் சாதிக்கமுடியும். ஆனால் நாம் அதனைச் சாதிக்கத் தவறிவிட்டோம் என வடமாகாண சபை உறுப்பினராகப் பதவி ஏற்றுள்ள ஜெயசேகரம் தனது கன்னி உரையில் தெரிவித்துள்ளார்....

All posts loaded
No more posts