- Sunday
- February 23rd, 2025

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தெஹிதெனிய, நீதியரசர் அமரசேகர முன்னிலையில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கினை ஆராயாமல் வழக்கு ஆவணங்களில்...

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், அடுத்த ஆண்டில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வடக்கு மாகாணசபைக்கு, மீண்டெழும் செலவினத்துக்கு 18,650,939,000 ரூபாவும், மூலதனச் செலவுக்கு...

வடக்கு மாகாணத்தில் 182 தொண்டர் ஆசிரியர்களை மட்டும் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கு கொழும்பு கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட அனுமதி தொடர்பில் வடக்கு மாகாண சபை சீராய்வு செய்த பின்னரே அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண...

வடக்கு மாகாண அமைச்சர்களால் தனக்கு பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மாகாண சபையின் 107 ஆவது அமர்வு நேற்று பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்திய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணையை சமர்ப்பித்து அவைத்தலைவர் உரையாற்றிய பின்னர், எதிர்க்கட்சித்...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வடமாகாண சபையின் நால்வரை கொண்ட குழு இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த குழுவில் தாம், உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மேலும் இருவர் அடங்குவதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமது குழு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று...

வட மாகாண சபை உறுப்பினர் றிவ்கான் பதியூதீன் தமது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வட மாகாண சபையின் 107 ஆவது அமர்வு தற்போது இடம்பெற்று வரும் நிலையில் அவர் தனது பதவி விலகளை அறிவித்துள்ளார். தமது பதவி விலகள் தொடர்பான கடிதத்தை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் இன்று கையளித்தாக றிவ்கான் பதியூதீன் தெரிவித்தார்....

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த பிரேரணை, தீர்மானமாக மாற்றப்பட்டு ஜனாதிபதி, துறைக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் எதிர்க் கட்சி தலைவர் ஆகியோருக்கு மின்னஞசல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்...

16 வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பயணம்செய்யவுள்ளனர் என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம்தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லியில் எதிர்வரும் 8ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காகவே குறித்த குழுவினர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று(28) வடமாகாணசபையின் 106ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோதேமேற்கண்டவாறு தெரிவித்தார். புதுடில்லி பயணம்...

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.டெனிஸ்வரன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்....

சர்வதேச சுற்றுலா தின நிகழ்வு வடமாகாண சுற்றுலாத்துறை அமைச்சினால் எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வினை வடமாகாண முதலமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது, சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. வடமாகாண சுற்றுலாதுறையை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச சுற்றுலா தினம் வடமாகாணத்தில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம், வடமாகாணத்தில்...

வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக வரக்கூடியவர் இந்த மண்ணில் இருப்பவராகவும், மண்ணுக்காக பாடுபட்டவராகவும், அரசியல் மற்றும் நிர்வாகங்கள் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் பங்குபற்றி கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவா் வே. பிரபாகரன்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு, வடக்கு மாகாண சபையின் 5 பேர் கொண்ட குழுவினர் ஜெனீவா பயணமாகியுள்ளனர். வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களான பா. கஜதீபன், ஆ. புவனேஸ்வரன், தியாகராஜா...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பதற்கு, உறுப்பினர்கள் சிலர் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை திட்டம் தொடர்பில் மிக இரகசியம் பேணப்பட்டு நடவடிக்கைகள் பேணப்பட்டுவந்தன. எனினும் பிரேரணைக்கு போதியளவு உறுப்பினர்களின் ஆதரவின்மையால் முதலமைச்சர் சார்பு உறுப்பினர்களின் ஆதரவு கோரப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மூலமே தகவல் வெளிக்கசிந்ததாக தெரியவருகின்றது. மாகாண...

முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களால் பரிந்துரைக்கப்படும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக ஆண்டுதோறும் 6 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு வருகிறது....

மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் போது, வடக்கு மாகாண மக்களின் கோரிக்கையை அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு எடுத்துரைத்தால் மாத்திரமே சாதகமான பலன்களை எட்ட முடியுமென வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து...

20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபையும் நிராகரித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடிய வடக்கு மாகாண சபை அமர்வில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் இத் தீர்மானம், அவைத்தலைவர் ஊடாக ஆளுநருக்கு...

அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தம் இன்று வட மாகாண சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று (04) மேற்கொள்ளப்படும் என வட மாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் ஆதரவை பெற்றுக் கொடுப்பது...

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியமையை எதிர்த்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் அந்த...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 103வது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நிலையில், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போராட்டம்...

“நாம் இருவேறு கடமைகளில் ஈடுபட்டுள்ளோம். கட்சி நலம் கருதி சிபாரிசு செய்வது உங்கள் பொறுப்பு. ஆட்சி நலம் சார்ந்து நடவடிக்கை எடுப்பது முதலமைச்சர் பொறுப்பு. கட்சிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லாது பிறரை முன்னைய அமைச்சரவையில் உள்ளடக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அது வாஸ்தவமே” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர்...

All posts loaded
No more posts