- Sunday
- February 23rd, 2025

கேள்வி: நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன? பதில்: என் கட்சி என்ன? என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள்...

சிறந்த நீதியரசரான வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியாக தோல்வியடைந்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியையே சரியான முறையில் முழுமையாக பயன்படுத்தாத முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மலேஷியா வழங்கும் நிதியை என்ன செய்வார் என்று புரியவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்த...

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளார். மலேசியப் பிரதமருடனான சந்திப்புக் குறித்து முதலமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, மலேஷியப் பிரதம மந்திரியுடன் சந்திப்பு 19.12.2017 இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் சுளித்த முகத்தையும் மீறி மலேஷிய பிரதம மந்திரியுடனான வடமாகாண முதலமைச்சரின் சந்திப்பு சுமுகமாக “ஷங்க்ரி –...

வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கு கந்தையா அருந்தவபாலன் தலைக்கவசத்தால் தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பு மனு தயாரிப்பின் போது வேட்பாளராக முன்னர் நிறுத்துவதாக சம்மதிக்கப்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. அதனால் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் முரண்பட்டு கொண்டனர். முரண்பாட்டின் உச்ச கட்டத்தில்...

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டுமென, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதனை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் ஆமோதித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக, வேலியே பயிரை மேய்வதைப் போன்று வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை ஆசிரியர்களே துஷ்பிரயோகத்திற்கு...

இலங்கையின் வடக்கு மாகாண சபையின் 2018ஆம் நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம், ஏகமனதாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 114வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கடந்த 111வது அமர்வின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சுக்கள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை உறுப்பினர்களின்...

நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியத்தை இழந்து நிற்கின்ற நிலையில், அந்த நிலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என வடக்கு மக்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் வடக்கு முதலமைச்சர் இனி எமது மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அடுத்த...

வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாணத்தை நோக்கிவரும் வெளிநாட்டு முதலீடுகளை தடுப்பதிலேயே வல்லுநர்களாக செயற்பட்டு வருகின்றனர் என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாண சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பாதீட்டு ஒதுக்கீட்டிற்கான இரண்டாவது வாசிப்பு மீதான உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...

2018 ஆம் ஆண்டுக்குரிய மூலதனச் செலவீடாக 3,843 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (12) நடைபெற்றது. இதன்போது, 2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாற தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத்...

வடக்கு மக்கள் யாவற்றிற்கும் தெற்கையே நம்பியிருக்க வேண்டும் என்றும், பெரும்பான்மையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்றும் இலங்கை மத்திய அரசு விரும்புகின்றதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முதலாவது வடக்கு மாகாண சபையின் ஐந்தாவதும் இறுதியுமான வரவு செலவுத் திட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பித்த முதல்வர், தமது ஆரம்ப உரையில் இதனைத்...

வடமாகாணசபையின் 2018ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு நேற்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனால் முன்மொழியப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 111 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று காலை சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது 2018ஆம் நிதி ஆண்டுக்கு 26 ஆயிரத்து 754 மில்லியன் 61 ஆயிரம் என மதிப்பீடு...

வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதியிலிருந்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்பதை கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோள்வியெழுப்பியுள்ளார். வட.மாகாணசபையின் 111வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. மேற்படி விடயம் தொடர்பாக சபைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவைத் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது...

வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்தமைக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். மாகாண அமைச்சர்கள் அரசியல் அமைப்பை ஏற்பதாக சத்தியபிரமாணம் செய்துள்ள நிலையில், வடமாகாண கல்வி அமைச்சரின் இந்த செயல் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர்...

வடக்கில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டுப்பாடு இல்லாமல் கட்டணங்களை அறவிடுவதை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா விசேட கவனயீர்ப்பு பிரேரணையை முன் மொழிந்தார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்....

வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என தனக்கு தெரியாது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , அரசியல்...

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மரநடுகை மாதம், நேற்று (புதன்கிழமை) வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசனால் மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண மர நடுகை கார்த்திகை மாதம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக குறித்த நிகழ்வு மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள...

பேருந்துகளில் இருக்கைகளுக்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றும் நிலையை உருவாக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளும் கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் இன்று வலியறுத்தினார். வடமாகாண சபையின் 108ஆவது அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். "வடக்கு மாகணத்தில் சேவையில் ஈடுபடும் பெரும்பாலான பேருந்துகளில் இருக்கைகளுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றார்கள். அதனால் பயணிகள் பேருந்தில் மிதிபலகைகளில் பயணம்...

வடமாகான சபை உறுப்பினர்களும் அமைச்சர்களும், மாகாணச் சட்டங்களை கற்க வேண்டுமென, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில், நேற்று (26) நடைபெற்றது. இதன் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னமும்...

“வடமாகாண சபையின் அமைச்சரவை மாற்றப்பட்ட பின்னரும் மாற்றங்கள் எதனையும் காணவில்லை. குறைந்தபட்சம் மாற்றங்கள் நிகழ்வதற்கான சமிக்ஞைகள் கூடத் தெரியவில்லை” எனத் தெரிவித்த, அச்சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, “அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சுருக்கமாகக் கூறினால், முன்னர் கொழுக்கட்டை சாப்பிட்டோம், இப்போது மோதகம் சாப்பிடுகிறோம். அதுவே வித்தியாசம்” என்றும் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக யாழ்.ஊடக...

விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தததால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வைப் பெறுவது கடினம் எனவும், யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கொண்டு செயற்படுமாறும் டெல்லிக்குப் பயணம்மேற்கொண்ட வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்தியா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இக்கருத்தரங்கு தொடர்பாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த வாரம் புதுடெல்லியில் கருத்தரங்கொன்று...

All posts loaded
No more posts