- Sunday
- December 22nd, 2024
வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று முற்பகல் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முல்லைத்தீவு, வட்டுவாகலில் கோத்தாபய கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் அழைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்ற பொலிஸார், அவரைக் கைது செய்துள்ளனர். அவர்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 117வது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செலயகத்தில், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது. இதன்போது, ஐ.நா மனித உரிமைப்...
வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் வட. மாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “வவுனியா வடக்கு பிரதேசம் திட்டமிட்ட சிங்கள குடியற்றத்தினால் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையில் அப்பிரதேசத்தின் இருப்பினை...
வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள் சிலர், கொழும்பிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 182 தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளபோதும், வடக்கு மாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தில் இந்த நியமனங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்தே,...
முதலமைச்சர் அவர்கள் கேள்வி பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார் அதில்... கேள்வி–நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது. அதே வேளை தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மீண்டும் இனவாதம்...
இடைக்கால அறிக்கைக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் நாட்டின் ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது முன்மொழிவுகளை முன்மொழிந்திருந்த நிலையில் ஆக்க பூர்வமான எந்த முன்மொழிவும் எமது கூட்டமைப்பால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை. வட மாகாணசபை, தமிழ் மக்கள் பேரவை ஆகியன முன்வைத்தன. ஆனால் வடமாகாணசபை முன்மொழிந்திருந்த தீர்வுத்திட்ட முன்மொழிவைக் கூட வலியுறுத்த எமது தலைவர்களுக்குத் திராணி இருக்கவில்லை போன்றே தோன்றுகின்றது அல்லது...
வைத்தியர் இல்லாமையினால் நடந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும்!!!
அண்மையில் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமையினால் நடந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டுமென்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா கருத்துவெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் கூறுகையில், “வடமாகாணத்தில் வைத்தியர்களையும் வைத்திய...
மக்கள் பசியோடு இருக்கையில் கட்டடங்களைக் கட்டியெழுப்புவதாலும் உரிமைகள் பற்றிப் பேசுவதாலும் எந்தவொரு பிரயோசனமும் இல்லை என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு...
வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்க திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் : வடக்கு முதல்வர் குற்றச்சாட்டு
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். முதலமைச்சர் வாரந்தோறும் வழங்கிவரும் கேள்வி பதில் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கை வருமாறு, வாரத்திற்கொரு கேள்வி இவ்வாரம் கொழும்பில் இருந்து கிடைத்திருக்கும் கேள்விக்குப் பதில் தரப்படுகின்றது. கேள்வி – தமிழ்க்...
இலங்கை அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாண சபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை 12,000 மில்லியன் ரூபாவைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம் 2,500 மில்லியன்...
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு தொடர்பையும் கொண்டிராதவர்கள் இன்று அந்த அமைப்பின் வாரிசுகள் என்று சொந்தம் கொண்டாட முனைக்கின்றனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தமிழீழ எழுச்சிப பாடல்களை ஒலிக்கவிட்டு தமது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தமையை வண்மையாக்க் கண்டிக்கின்றேன்" இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா...
நாட்டில் சத்திர சிகிச்சைக் கூடமே இல்லாத வைத்திய சாலைகளில் சத்திர சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் போன்றோர் மேலதிகமாக கடமையில் உள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது...
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், வடபகுதி கல்விநிலையில் பழைய நிலைக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றோம் என்பதை வெளிப்படுத்துவதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துவிட்ட நிலையில்...
தனக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் குற்றஞ்சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில், இன்று (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, “வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு, கடந்த 4 வருடங்களாக எனக்கும் வழங்கப்பட்டிருந்தது....
யாழ். குடாநாட்டில் பொலிசாரின் அசமந்த போக்கினால் போதைபொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போதே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது,...
முகங்களை பார்க்காது மக்களுக்கு சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிய வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சர்களை சிறப்பாக தேர்வு செய்யத் தவறிவிட்டார் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ம. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக்...
பலம் இன்றேல் அதிகாரங்களைப் பெற முடியாது. எம்மை நாம் பலப்படுத்திக்கொள்ள எமக்கென அதிகாரங்களைப் பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கு ஒரு கேள்வி என்ற அடிப்படையில், இந்த வாரம் ’70 வருட அரசியல் போராட்டத்தில் தமிழ் மக்கள் கண்ட பலன் என்ன?’ என்ற கேள்விக்கு, முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் பதிலில் இவ்வாறு...
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரெலோ அமைப்பின் எஸ்.குகதாஸ் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் தனது பதவியைக் கடந்த மாதம் இராஜினாமா செய்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். குறித்த உறுப்பினரின் வெற்றிடத்திற்கே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக்...
இ.போ.ச ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தின் பின்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உந்துதலாக உள்ளார்களா எனும் கேள்விக்கு பணிப் பகிஷ்கரிப்பை நடத்திவரும் தொழிற்சங்கங்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கவேண்டும் என வ டமாகாண...
எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை உடையவர்களை மதிப்பதாகவும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”வடக்கு கிழக்கில் இத்தேர்தல் காலத்தில் என் பெயரை...
Loading posts...
All posts loaded
No more posts