- Sunday
- December 22nd, 2024
வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் திருப்பித்தருமாறு கோரிய 7 ஆயிரம் ரூபாவை அவரிடம் ஒப்படைப்பதற்காக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் வடமாகாண சபைக்கு வருகைத் தந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய,...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தன்னால் வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா நிதியினை மீள வழங்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஈபிடிபி உறுப்பினர் தவராசா கோரிக்கை விடுத்திருந்தார். அது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் ஒரு விவாதமே நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில் தவராசாவின் பணத்தினை மீள வழங்கும் செயலில் தமிழ் இன உணர்வுள்ள...
நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்கு செல்வது போன்றது. இங்கு மாலை மரியாதை அளித்து மேள தாளத்துடன் அழைத்து செல்வார்களென எதிர்ப்பார்க்க கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபையின் 123 ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. இதன் போது எதிர்க்கட்சி...
வாரத்துக்கொரு கேள்வி – 28.05.2018 என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார். கேள்வி – ஐயா! உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ...
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு, இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் முகவரி மற்றும் யார் அனுப்பியவர்கள் என்ன விடயத்திற்கான விசாரணைகள் என குறிப்பிடாது விசாரணைக்கு வருமாறு சிறு துண்டில் எழுதிக்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை நாங்கள் எதற்காக கேட்கபோகிறோம்? கேட்டாலும் கொடுப்பார்களா என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கை ஊடகங்கள் எங்களோடு தொடர்பு கொள்ளாமல், சிங்கள மக்கள் மத்தியில் எம்மை...
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் அதுதொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், ஊடக அறிக்கை 11.05.2018 வடமாகாண கல்வியமைச்சரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பானது தொடர்ச்சியாக...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசியத்தின் துக்க நாளாகவும் வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 122வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்படி பிரகடனத்திற்கான பிரேரணையை முன்வைத்தார். குறித்த பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம்...
வடக்கு கல்வி அமைச்சின் செயலாளராக எஸ்.சத்தியசீலனும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரனும் நியமிக்கப்பட்டனர்.வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயால் இன்று (5) இந்த மாற்றங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனத்திலிருந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமை வகித்த எஸ்.சத்தியசீலன், தற்போது மாகாண கல்வி...
அரசாங்கமும், படைத்தரப்பும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவற்றுக்கு எடுத்துக் கூறுவது தங்களது கடமை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் படைத்தரப்பினர் நிலைகொண்டுள்ளமை குறித்து, வாரத்துக்கு ஒரு கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ன நினைக்கும் படைத்தரப்பு என்ன நினைக்கும் என்பது தவறான...
வடக்கு மாகாண சபையின் 121ஆவது அமர்வு, பிரதி அவைத்தலைவர் வல்லிபுரம் கமலேஷ்வரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. வடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமாகியதால், பிரதி அவைத்தலைவரின் தலைமையில் சபை கூடியது. எனினும், இன்றைய தினம் முக்கிய விடயங்கள் குறித்து பேசப்படவில்லை. இந்நிலையில், ஆளுநரின் அறிவிப்புகள், சபை அறிவிப்புகள், அறிக்கைகள் என்பன மாத்திரம் இடம்பெற்று சபை...
வடக்கு மாகாண அமைச்சரவை மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டை உள்ளூர் பத்திரிகை ஒன்று அண்மையில் வெளியிட்டது. அத்துடன் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர மற்றும் வெலிஓயா, கிதுள் ஓயா பகுதிகளில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வடமாகாண சபையினர் முன்னெடுக்க வடமாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. வடமாகாண சபையின் 120 வது விசேட அமர்வு...
சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண சபையில் நடைபெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர்...
வட.மாகாண தொண்டர் ஆசிரியர்களது முற்றுகைக்குள் இருந்து வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நிரந்த நியமனத்தை வழங்குமாறும், நிரந்தரமாக்கலுக்கான நேர்முகத் தேர்வுத் திகதியை உறுதிப்படுத்தி தெரிவிக்குமாறும் கோரி நேற்று போராட்டத்தை மேற்கொண்டனர். இதன்போது தொண்டராசிரியர்கள் திடீரென வட.மாகாணசபையை...
வட.மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் எடுக்கவில்லை என வட.மாகாணசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வட.மாகாணசபையின் 119ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் வாய்மொழி வினா ஒன்றை எழுப்பியிருந்தார். அதில்...
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள உறுதிமொழிகளை உடனடியாக நிறைவேற்ற, வலியுறுத்தி வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றயதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சகல கட்சிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்...
எமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் காவல்துறையினரிடம் முறையிட செல்வோம் இங்கே பொலிசாரே பிரச்சனை என்றால் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளது என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு நேற்ற்ய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு...
இராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையினை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் முன்வைப்பதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 118வது அமர்வு நேற்று (13) வடமாகாண சபையின் பேரவை செயலக சாப மண்டபத்தில் நடைபெற்ற போது வடமாகாண சபையின் அவை தலைவர்...
வவுனியாவில் மகாவலி திட்டத்துடன் தொடர்புடைய படிமுறை நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதலில் இது தொடர்பாக வட.மாகாண சபையுடன் ஒப்பந்தம் அல்லது பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள வேண்டுமென வட. மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். வட. மாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை)...
Loading posts...
All posts loaded
No more posts