- Sunday
- February 23rd, 2025

வடமாகாண விவசாய அமைச்சால் 23 விவசாயப் போதனாசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (14.09.2015) விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நியமனக்கடிதங்களை வழங்கி வைத்துள்ளார். வடமாகாண விவசாயத் திணைக்களத்தில் விவசாயப் போதனாசிரியர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 161. எனினும் 85 பேரே...

கூட்டமைப்புக்குள் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஜனநாயகக்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுப்பது, என்ற பேச்சுக்கே இடமில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டால் மாத்திரமே கூட்டமைப்பால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அவ்வாறான எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார். 'வடமாகாண...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் செல்லும் போது, கூட்டத்தொடரிலும் அங்கத்துவ நாடுகளிடமும் கையளிப்பதற்காக, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளை வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிடம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட, 'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது' மற்றும் 'இலங்கையில்...

ஜெனிவாவுக்கு செல்வதற்காக அனுமதியை கோரி வடமாகாண ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்து இரண்டு வார காலமாகின்ற போதிலும் இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். வடமாகாண சபை தலைவரிடம் உரிய அனுமதி பெற்று...

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். வவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், விக்னேஷ்வரன் மீது பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார். இந்தநிலையில் சேனாதிராஜா நேற்று இந்திய ஊடகமான ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தலின்போது, விக்னேஷ்வரனின் நடத்தை...

வடமாகாணசபையின் அனுமதியின்றி மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் ஜெனீவா அமர்வுகளில் மாகாணசபையின் சார்பாக கலந்து கொள்ள முடியாது என தெரிவித்திருக்கும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தேவை இருப்பின் தனிப்பட்ட முறையில் ஜெனீவா அமர்வுகளில் பங்கெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 14 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் மாகாணசபை சார்பில் உறுப்பினர்கள்...

நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் பின்னர்,...

குத்தகை நிறுவனங்கள் மற்றும் தவணைக கட்டண அடிப்படையில் பொருட்களை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கட்டணங்களை வசூலிப்பதற்காக மாலை 5 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணத்திலுள்ள நிதி நிறுவனங்கள், மாலை 5 மணிக்கு பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று நிதி சேகரிப்பதை தடை செய்யவேண்டும்...

சர்வதேச விசாரணை கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ,நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சிவிகே.சிவஞானம் தெரிவித்தார். தமிழர்கள் மீதாக இன அழிப்பு தொடர்பில் ஐ.நா சபை விசாரணை வலியுறுத்தி வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை உறுப்பினர்கள், அமைச்சர்கள் உறுதிப்படுத்திய பின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் கையோப்பத்துடன் ஐ.நா.சபை அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக...

இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அவசியம் இல்லையெனவும், அதற்காக நேரம் ஒதுக்குவது வீணானது எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற மாதாந்த அமர்பில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடர்பில் முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா கருத்துத் தெரிவித்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பில்...

வடமாகாண சபையில் உறுப்பினர்களுக்கான ஒழுங்கு விதிகளை நிர்ணயித்து விட்டு, அந்த விதிகளை மீறுவது எவ்வகையில் நியாயமாகும் என ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் கேள்வி எழுப்பினார். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற மாதாந்த அமர்வின் போதே அஸ்மின் இந்தக் கேள்வியை எழுப்பினார். 'ஒரு அமர்வில் 15 கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது எனவும்,...

இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய நிலையில் சபையின் வாயிற் பகுதியில் சிவாஜிலிங்கம் தனது கவனயீர்ப்புப் போராட்டத்தினை...

காரைநகரின் பிரசித்திபெற்ற வேணன் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திங்கட்கிழமை (31.08.2015) சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி வைத்துள்ளார். காரைநகர் குடிநீர்ப்பற்றாக்குறைவு நிலவுகின்ற ஒரு பிரதேசம். இதனால், மழைநீரை வீணாகக் கடலினுள் கலக்கவிடாது தேக்கி நிலத்தடிநீரை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் வேணன் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு விவசாயிகள்...

வடக்கு விவசாய அமைச்சின்'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் தொனிப்பொருளிலான மாபெரும் விவசாயக் கண்காட்சி எதிர்வரும் புதன்கிழமை (02.09.2015) ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி நல்லூர் கோவில்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியை புதன்கிழமை மாலை 5 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திறந்துவைக்க உள்ளார். அளவுக்கு...

உள்நாட்டு விசாரணையினை நிராகரிப்பதுடன், சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுக்க ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவின் உதவி இராஜாங்க...

வடமாகாண கால்நடை அமைச்சின் 'தகர்' திட்டத்தின் மூலம் நல்லூரைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் நேற்று வியாழக்கிழமை (27.08.2015) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 'தகர்' என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர் ஆகும். இதனைப் பெயராகக் கொண்டு 'தகர் வளர் துயர் தகர்' என்ற தொனிப்பொருளில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்...

வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யப்பானிய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் மறிக்கோ யமமோடோ சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போர்...

வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வடமாகாண சபை உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாகாண சபையின் 33ஆவது அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் சி்.தவராசா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பின்னர் மாகாண,...

இலங்கை தீவில் உள்ள தமிழ்,சிங்கள மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சபை அமர்வில் முன்மொழியப்பட்ட பிரேரணை அவைத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண...

All posts loaded
No more posts