- Sunday
- February 23rd, 2025

வடமாகாண சபையின் எதிர்கட்சி வரிசை வெற்றிடத்திற்கு அகிலதாஸ் சிவக்கொழுந்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வடமாகாணசபை வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதன் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அகிலதாஸ் சிவக்கொழுந்து நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி...

அரசியல் கைதிகளின் வழக்குகளை நடத்துவதற்கு தேவையான நிதி சேகரிப்பதற்காக ஓர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் நிதியை திரட்டி வழக்கை நடத்துவோம் என எண்ணியிருந்தோம். எனினும், அந்த அமைப்பை ஓர் ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவர முடியாமல் போய்விட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 'சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், அரசியலாக்கப்பட்டமையால் அவர்களுக்கு விடுதலை...

வடக்கு மாகாண சபையின் சில அமைச்சுக்களின் கீழ் சுமார் ஒன்பது கோடி ரூபா பெறுமதியான பாதுகாப்பு மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவதில் ஒழுங்கீனம் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்து தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்று நீதிமன்றுக்குச் சென்றிருக்கின்றது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் சுமார் 3 கோடி 35 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்தமும் -...

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் 2015 ஆம் ஆண்டுக்குரிய பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து ரூபா 3 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி விவசாய அமைச்சின் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (23.09.2015) நடைபெற்றபோது அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உரிய பயனாளிகளுக்குப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். பிரமாண...

பயணிகள் போக்குவரத்து அதிகார சபையை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அந்த அதிகார சபையில் 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியுமெனவும், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் – “போக்குவரத்து நியதிச்...

அரசியல் கைதிகளின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பிள்ளைகளை இழந்த பெற்றோர் என 860 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, குறித்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் பொருட்டு,...

வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தமக்கிடையே மோதிக் கொண்டதால் சபை நடவடிக்கைகள் நேற்று பாதிப்படைந்தன. நீண்ட நாட்கள் நிலவி வந்த பனிப்போர் நேற்றைய தினம் கடுமையாகியதாலேயே சபை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. முதலமைச்சர் தலைமையில் அவைத் தலைவர் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்த இரு அணிகளும் நேற்று மோதிக் கொண்டன. இதனை எதிக்கட்சியினர் அமைதியாக இருந்து...

இலங்கையில் கடந்த கால யுத்தத்தின் போது, தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனவழிப்பில்லை என்று, எமது தரப்பினர்கள் ஜெனிவாவில் தெரிவித்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது. வடமாகாண சபையால் எந்த விடயத்தையும்...

அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள் இலங்கையில் அமுலில் இருப்பது போன்று, இணையத்தளங்களையும் ஒழுங்குபடுத்த சட்டங்களை பின்பற்றுவது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சைக் கோருவதற்கான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார்....

சட்டவிரோத கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் ஏ - 32 வீதியின் (யாழ்ப்பாணம் - மன்னார்) சங்குப்பிட்டி பாலம் மற்றும் ஏ - 9 (யாழ்ப்பாணம் - கண்டி) வீதியின் ஏதாவது ஒரு இடத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியை அமைத்து, பயணிகள் வாகனங்கள் தவிர்ந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என...

இலங்கை இறுதிப் போர் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கையானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் சாதகமானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார். இறுதிப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை இலங்கையின் வட மாகாண சபையில் நேற்று தாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கான மக்களின்...

வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் பேசுவதற்கு 7 பட்டதாரிகள் மற்றும் 7 மாகாணசபை உறுப்பினர்கள் கொண்ட செயலணி உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாணசபை ஆளுகைக்குட்பட்ட வெற்றிடங்களை நிரப்புமாறு பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இன்று...

வட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை முன்பாக இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. இன்று காலை 9.30 மணிக்கு வடமாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாக இருந்த நிலையில், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்...

வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் தற்துணிவு நடவடிக்கைகளினை கேள்விக்குட்படுத்துவது குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மேலும் வடக்கு மாகாண சபை, மாகாண சபை போல் இயங்க வேண்டுமெனவும் மாநகரசபை போல் இயங்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இறுதியாக நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம்...

மது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

வட மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்பட்ட இருவெற்றிடத்திற்கு தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு இரு புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இடம்பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வட மாகாண சபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இடத்திற்கு கணபதிப்பிள்ளை தர்மலிங்கமும் வன்னி மாவட்டத்தில்...

தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தருணத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் ஊடங்கங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு...

வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியை வடமாகாணத்தின் மத்தியாகக் கொள்ளப்படும் மாங்குளத்தில் அமைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாங்குளம் பகுதியில் வடமாகாண சபை கட்டடத் தொகுதியை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணியை, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் திங்கட்கிழமை (14) பார்வையிட்டுள்ளனர். மாங்குளம் சந்தியிலிருந்து 500 மீற்றர்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு உள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனாலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமையால், கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் எனக்கு முரன்பாடு...

ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க மாட்டோம், சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக அரசியற் தீர்வு வேண்டும், மனித உரிமைப் பேரவை மூலம் சர்வதேச நீதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நான்கு நாற்களாக இடம்பெற்று வந்த நடை பணயப் போராட்டம் நேற்று ஐந்தாவது நாளில் நிறைவடைந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

All posts loaded
No more posts