- Sunday
- February 23rd, 2025

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். குற்றம் செய்த இராணுவத்தினர், எங்கே சிறையில் இருக்கின்றனர்? முதலில் அவர்களைப் பிடித்து சிறையில் அடையுங்கள்.5 அல்லது 6 வருடங்கள் கழித்து அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இலங்கைக்கான அமெரிக்க...

இலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின் ரஸ்ஸல் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் குழுவினர் யாழிற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள். சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில்...

இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார். யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில்...

உணர்வும் அறிவும் ஆளுமையுங் கொண்ட ஒரு ஜீவன் எம்மை விட்டு ஏகிவிட்டது. புற்றுநோய்த் தாக்கத்தினால் உயிர்துறந்த சகோதரி தமிழினி அவர்களின் அகால மரணம் தமிழ் மண்ணின் ஒரு பேரிழப்பாகும். என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சகோதரி தமிழினி அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராகச்...

விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே போராடினார்கள். அவர்களுக்கு உதவி செய்தவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களும் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள்ளேயே உள்ளடங்குவார்கள் என்று, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இலங்கையிலுள்ள சிறைகளில், அரசியல் கைதிகள் எவரும் இல்லையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறிய கருத்துக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே,...

கஸ்டப் பிரதேசத்தில் கடமையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களாக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண கல்வி அமைச்சின் முன்பாக திங்கட்கிழமை (12) போராட்டம் மேற்கொண்டனர். 2009ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமனம் பெற்று கடமையாற்றிய இவர்கள், 5 வருடங்கள் என்ற கட்டாயக்...

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகி, அவர்களுடைய பிரச்சினைக்குக் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தை, வழங்கி அந்த உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம்...

வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் அவரது உதவியாளர்களது சொந்த நிதி மூலம் மாதம் தோறும் வாழ்வாதார உதவிகள் வழக்கும் திட்டம் கடந்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டம் கடந்த சனிக்கிழமை மாலை வடக்கு மாகாண அவைத் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது துவிச்சக்கரவண்டிகள், தையல் இயந்திரங்கள்,...

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 தொண்டர் ஆசிரியர் வடமாகாண சபையின் முன்பாக வியாழக்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பல...

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதனை முதலமைச்சர் பொறுப்பற்ற விதமாக கையாண்டதாகவும் வெளியாகிக் கொண்டிருந்த பொய்களுக்கு முதலமைச்சர் இன்றைய தினம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த சில தினங்களாக ஊடகங்களில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதி தொடர்பில் முதலமைச்சர் மீது குற்றஞ்சாட்டும் செய்திகள் வெளியானதும், கடந்த 35வது...

நிரந்தர நியமனம் கோரி வடமாகாண சபை முன்பு தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 09.00 மணி முதல், வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு, வவுனியா வடக்கு மற்றும் துணுக்காய் ஆகிய ஐந்து கல்வி வலயங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக நியமனம் கிடைக்கும் என...

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப் பதில் உள்ள பல தடைகளையும் தாண்டி வெகுவிரைவில் மக்களின் பிரச்சினை களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்ப டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு...

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை வட மாகாண போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் திட்டத்திற்கு அமைவாக, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர்...

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு நேரடியாக நிதியுதவி பெற்றுக் கொள்வதற்கான மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள நாளிதழான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தின் அதிகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய பின்னர், மாகாணத்தின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் முதலமைச்சர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற பின்னர் வடக்கிற்கு முதல் தடவையாக கடந்த வாரம் வந்திருந்தார். அவர் இங்கு மூன்று நாள் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்துகொண்டார். முதல் நாள் தந்தை செல்வா நினைவுத்தூபிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின் நல்லூருக்குச் சென்று வழிபட்டார். இலங்கை தமிழரசுக்...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எமது மக்களின் சகஜ வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் காரணிகள் பல திடமாக ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கையில் ஆராயப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக் கருவின் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இரணைமடுவிலிருந்து தொடக்கப்படுகின்றது....

இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளார். “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற தொனிப் பொருளில் ஆரம்பான தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் அவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார். கிளிநொச்சி இரணைமடு வட்டக்கச்சியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் செயலணிக்குழுவினருக்கும் வடமாகாண சபைச் செயலணிக் குழுவினருக்குமிடையே நேற்றயதினம் காலை 11.00 மணிக்கு வடமாகாண சபையில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இது தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது சார்பில் 15 உறுப்பினர்களும் வடமாகாண செயலணிக்குழுவில் வடமாகாண அவைத்தலைவர், வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர், மாகாணசபை...

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக சிவக்கொழுந்து அகிலதாசை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்திருப்பது இயற்கைநீதிக்கு முரணான செயல் எனவும், மக்கள் வழங்கியஆணைக்கு மதிப்பளிக்காது செயற்படுவதாகவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபை உறுப்பினராக இருந்த அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்...

All posts loaded
No more posts