- Monday
- February 24th, 2025

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதுடன், உயிராபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் எம்மிடத்தில் உள்ளது. இது தொடர்பாக திங்கள் வரை காத்திருக்காது, விரைந்து செயற்படுமாறு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று மாலை அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- நீண்ட ஆண்டுகளாக எவ்வித...

வடமாகாணத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குமாறு வடமாகாண அமைச்சர்களுக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார். 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட...

பல அரசியல் காரணங்களுக்காக, அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகையில், அரசியல் கைதிகளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பினார். சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன் வால்கர் நிடெர்கூர்ன் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை (13) விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரை அவரது...

நயினாதீவு என்ற தீவின் பெயர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைக் கவனத்தில் எடுக்குமாறு வடமாகாண அவைத் தலைவர் சிவீகே. சிவஞானம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு, "அத தெரண’’ என்ற இணையத் தளத்தில் நாகதீப என்ற தீவின் பெயரை நயினாதீவு என்று மாற்றம்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தாலுக்கு மக்களை ஒத்துழைக்குமாறு கோரியுள்ளார் வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதியின்...

தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் இதுவே வடக்கு மாகாண சபையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ள வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அரசாங்கம இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டபோதும், தமிழ் அரசியல்...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்க கோரும் அதிகாரம் எம். ஏ சுமந்திரனுக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு விடயங்களிலும் நான் தலையீட்டை மேற்கொள்ளாமல் நடுநிலையாகச் செயற்படுவேன் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குமாறு கட்சியிடம் கோரியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் வைத்துக்...

மலரும் தீபாவளி திருநாளில் வடகிழக்கு மக்களின் வாழ்வில் இருக்கும் துன்ப துயரங்கள் மறைந்து நல்வாழ்வு மலரட்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது தீபாவளி நல்வாழத்துக்களை தெரிவித்துள்ளார். இருள் நீங்கி ஒளி சேரும் ஒரு நாள். பழையன கழிதலும், புதியன வருதலும் பழைய இருளடைந்த வாழ்க்கை நீக்கப்பட்டு, புதியதொரு ஒளி மிகுந்த வாழ்க்கையை வரவேற்பதே தீபாவளியின்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியிடம் கேட்டிருக்கின்றார். ஆஸ்திரேலியா சென்றிருக்கும் அவர் அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்தப் பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கியமான ஒருவன். அவருக்கு வடமாகாண சபையை நிர்வகின்ற பொறுப்பை கட்சி...

வடமாகாண அமைச்சர்கள் நால்வரை மாற்றுவது குறித்து தன்னிடம் எந்தவித கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வடமாகாண அமைச்சர்கள் சிலரை மாற்றுமாறு சிலர் கோரிக்கைகள் விடுத்திருப்பது உண்மை. ஆனால், நேரடியாக தன்னிடம் எந்தவிதமான...

நயினாதீவு என்ற தமிழப் பெயரைச் சத்தம் சந்தடியின்றி நாகதீபம் என்று மாற்றி வட்டாரப் பிரிப்பின் போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மீண்டும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில் உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நேற்று முன்தினம் நிறைவேற்றியிருக்கின்றது. வட மாகாணசபையின்...

வடமாகாணசபையின் 37வது அமர்வு நேற்று பெரும் அமளி துமளிகளுடன் நடைபெற்று முடிந்தது. இந்தஅமர்வில் 10 பிரேரணைகளும், 2 வாய்மொழி மூல கேள்விகளும் கேட்கப்பட்டு 10 பிரேரணைகளில் 9 பிரேரணைகள் சபையில் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் ஒரு பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாகாணசபையின் 37வது அமர்வு நேற்றுக்காலை 9.30 மணிக்கு பேரவை செயலகத்தின் சபா...

தமிழ் ஊடகங்கள் மீதான வன்முறைகள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், அ.பரஞ்சோதி ஆகியோரால் இது தொடர்பான பிரேரணை கொண்டு வரப்பட்டு அனைவரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த அரசு பதவியிலிருந்தபோது நடைபெற்ற அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார, புனர்வாழ்வு அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களினால் நேற்று மாகான சபையில் சமர்பிக்கப்பட்ட விசேட கவனயீர்ப்பு மசோதா கீழே தரப்பட்டுள்ளது. வைத்தியகலாநிதி.பத்மநாதன் சத்தியலிங்கம், சுகாதார அமைச்சர், வடக்கு மாகாணம். 05.11.2015 கௌரவ அவைத்தலைவர் அவர்களுக்கு, வடக்கு மாகாண சபை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான...

இலங்கை அரசுக்கு வியட்நாம் அரசுடன் இணைந்து அபிவிருத்தியில் முன்னோக்கி வருவதற்கான மனோநிலை இல்லை என, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் பஹன் கியு து (phan kieu thu ) குற்றஞ்சாட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட வியட்நாம் தூதுவர் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு...

வடமாகாணத்தில் உள்ள 102 வைத்தியசாலைகளில் 32 வைத்தியசாலைகள் நிரந்தர வைத்தியர்கள் இன்றி இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்திறப்பு விழாவில்கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாணத்தில்...

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை எனவும் கடந்தகால தவறுகளை சீர் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கார்த்திகை மாதம் மரம் நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு இன்று மரம் நடும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

இந்திய வீட்டு திட்டத்தில் உறுதி அளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் 40 ஆயிரம் வீடுகள் மாத்திரமே நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய வீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் தட்சனா மருதமரு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் நடமாடும்...

All posts loaded
No more posts