- Monday
- February 24th, 2025

நிதிப் பிரமாணக் கோவைகளிற்கு முரணாக வடக்கு மாகாண சபையினால் நிதி கையாளப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்திற்கு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரினால் கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அம் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Joule Power மற்றும் Beta Power ஆகிய நிறுவனங்களுடன் வடக்கு மாகாண சபை பளை பிரதேசத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி...

எனது சட்டக் கல்லூரி நண்பர் ஆனந்தசங்கரி எனது அரசியல் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களுக்கும் அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நன்றிகள். இதை மட்டுமே என்னால் தற்போது கூறமுடியும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் விரும்பினால் இந்த நிமிடமே தனது கட்சியை ஒப்படைக்க தயார் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின்...

வடபகுதியின் மூலதனமாக விளங்கும் கல்வியைக் குழப்பி எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கு திட்டமிட்டே பல சதிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பீடக் கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் அவர் தெரிவித்தார். மன்னார்...

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு, சனிக்கிழமை (28) முதல் மீளப்பெறப்பட்டுள்ளதாக சபையின் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விரும்பினால் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், விந்தன் கனகரத்தினம் மற்றும் சபையின் எதிர்க்கட்சி...

வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், நேற்று சபை அமர்வின்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது. மத்திய அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் அடிப்படையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்னோட்டம் முதலமைச்சரினால் முன்மொழியப்பட்டது. வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்று அறிக்கை இன்றைய தினம் மாகாண சபையின்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் உணர்வுகளையும், எதிர்ப்பார்ப்பினையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் நம்பிக்கை இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு முதல்வரைச் சந்தித்த ஊடகவியலாளர்கள் மாணவனின் தற்கொலை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர்...

முன்னைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது எமக்கு தெரியவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக, சில அரசியல் கைதிகளை 10 லட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என வடக்கு...

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதனை யாரும் தடுக்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். இறந்தவர்களை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது. அவர்களை விற்பனைப் பொருளாக கையாள்வதையும் கைவிடவேண்டும் எனவும் அவர் கூறினார். அத்துடன், இறந்தவர்களுக்காக அவரது உறவுகள் அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது....

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியில் அமைந்துள்ள நயினாதீவின் பெயர் தொடர்ந்தும் நயினாதீவு என்று இருப்பதையே நாங்கள் வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றியிருந்தோமே தவிர பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அல்ல என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் கடந்த அமர்வின் போது, நயினாதீவு என்பதன் பெயரானது, நாகதீபம் என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் அது, நயினாதீவு...

பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படுமாயின் உடன் தனக்கு அறிவிக்கும்படி வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கடந்த 18.11.2015 புதன்கிழமை மானிப்பாய் நவாலி முருகமூர்த்தி கோவில் பகுதியில் நண்பகல் 12 மணியளவில இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் எதிர்க்கட்சித்...

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்து பெற்றுத் தருவோம் என, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் பின்னர்...

'நாகதீப' என்ற பெயரை 'நயினாதீவு' என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது. நாகதீப என்பதை நயினாதீவு என மாற்றக்கூடாது. இதற்கு நானும் எதிர்ப்பே. - இப்படித் 'திவயின' சிங்கள வார இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். நயினாதீவின் சில பகுதிகள்...

தாடியுடன் வீதியில் நடந்து சென்ற இரு இளைஞர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு இளைஞர்களுமே கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்- நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில்...

தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக நேர்மையாகவும் நீதியாகவும் பற்றுறுதியோடு செயற்படும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அனைத்து நடவடிக்கைகளிற்கும் தமிழர் விடுதலை கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு ஒரு தீர்க்கமான...

தமக்கிடையில் ஏற்பட்டுள்ள சில முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, வடமாகாண சபை விடயங்கள் உட்பட்ட பல்வேறு அம்சங்கள்...

வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. வடமாகாண சபை அமர்வு வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்க என ஒரு பிரதான கேள்வியும் ஐந்து துணைக்கேள்விகளும், கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் கேட்க என 4 பிரதான கேள்விகளும் 14...

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- நேற்றைய தினம் வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்த அறிக்கையில் பொதுத்தேர்தல் நேரத்தின் போது கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு தன்னுடைய நீண்ட...

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, வற்புறுத்தியதின் அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக அவர் கூறினார். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதையடுத்து, அவரது...

மத்திய அரசினால் வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதியில் இருந்து 38 சதவீத நிதிகளையே வடமாகாண சபை பயன்படுத்தியுள்ளதாகவும், ஏனைய நிதிகள் கிடப்பில் இருப்பதாகவும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரமும் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும் எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன்...

All posts loaded
No more posts