- Monday
- February 24th, 2025

யாழ்ப்பாணம் கடலால் மூல்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஐங்கரநேசன், 2004 ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு...

தற்போதுள்ள அரசாங்கத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாகவே உள்ளோம். நாங்கள் அரசாங்கத்தின் அங்கம் இல்லையென வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நேற்று வியாழக்கிழமைவடமாகாண சபையில் நடைபெற்ற போதே, அவர்...

வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் நிபுணர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையானது தெளிவாக வெளியிடப்படவேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் கைதடியில்...

தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடக்கு மாகாண சபையினால், திரட்டப்படும் நிவாரண நிதி உதவியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத் துயருக்கான உதவிகளை இந்திய அரசாங்கம் வெளிநாடுகளிடம் கோரவில்லை என்றும், இதனால் இந்த உதவிகளைத் தமது பணியகத்தினால் பெற முடியாதிருப்பதாகவும், இந்தியத் துணைத்...

விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் 17.12.2015 அன்று தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை. கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே, மதிப்புக்குரிய செயலாளர்களே, திணைக்கள அதிகாரிகளே உங்கள் அனைவருக்கும்,எங்கள் எல்லோரையும் இயக்குவித்துக் கொண்டிருக்கும்...

இராணுவத்தினர் இங்கு சும்மா தானே இருக்கின்றனர் எனவே அவர்களைக் கொண்டு, அவர்கள் அடைத்த வெள்ளவாய்க்கால்களையும்- கான்களையும் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பில் அவர்களுடன் பேச வேண்டும் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன். வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அமைச்சு மீதான விவாதம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இறுதியில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே...

தனியார் ஊழியர்கள் 8 மணித்தியாலங்கள் பணியாற்றுவதைப் போல, வட மாகாண சபையின் கீழுள்ள அரசாங்க ஊழியர்களும் 8 மணித்தியாலங்கள் பணியாற்றுவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்த வேண்டும். சில உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரிகள் தமது பணியின் இடைநடுவில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அளவுக்கு நிலைமையுள்ளதாக வட மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்....

வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு– செலவுத்திட்டத்துக்கென நிதி ஆணைக்குழுவிடம் கோரிய நிதி ஒதுக்கீட்டில் 40சதவீதம் மாத்திரமே கிடைத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான நிதிச் சட்டமூலத்தை சபையில் செவ்வாய்க்கிழமை(15) சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மீண்டெழும் செலவினத்துக்காக 20,479 மில்லியன்...

வட மாகாணத்தின் எல்லைப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக தமிழ் மக்களை மாகாணத்தின் எல்லைகளை நோக்கி நகர்த்த வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் எல்லைகளால் வட மாகாணத்தின் எல்லைகள் சுருங்கும் அபாயம் ஏற்படும் என வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்தார். வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்...

வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக டிசம்பர் 26ஆம் திகதியை வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தி உள்ளது. வடக்கு மாகாணசபையின் 41ஆவது அமர்வின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (16.12.2015) வடக்கு சுற்றாடல் அமைச்சர் இது தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில், இயற்கையின் சீற்றங்கள் புதியன அல்ல. பூமியில் வாழ்கின்ற உயிரினங்கள் பூமியில்...

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் மேம்போக்கான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தினாலும் மாகாண சபைகள் மீது கட்டுப்பாடுகளை விதித்து அதன் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார். வடமாகாண சபையின் 41ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது. இதில் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சபையில்...

இந்திய - இலங்கை மீனவர்கள் குறித்து இரு நாட்டு அரசியல் தலைவர்களும் கலந்து பேசுவதால் சரியான தீர்வு கிடைக்காது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இரு நாட்டு மீனவ சங்கப் பிரதிநிதிகளும் இது குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினை குறித்து இரு நாட்டு அரசியல்...

நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் புதிய அரசாங்கமும் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து ஒத்துழைத்து செயற்படாமல், முன்னைய அரசாங்கம் போன்று தனித்து முடிவெடுத்து வடமாகாணத்தில் செயற்றிட்டங்களை செய்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடிகயில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண...

"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி உடனே விடுவிப்பது அரசின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கம் உண்டென்று உணரக் கூடியதாக இருக்கும்." - இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமர்வு, சர்வதேச மனித...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சின் செயலாளர் மற்றும் 7 மாகாணங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமித் தசநாயக்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை....

தமிழ் மக்களின் மனித உரிமையை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும், வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்திய வடமாகாண சபை உறுப்பினர்கள், இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10)...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த காலத்தில் கொண்டிருந்த கொள்கையிலிருந்து தற்போது விலகியுள்ளமையினால் பொதுமக்கள் தமது பிரச்சினைகள் மீது அதீத அக்கறை கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தலைமையேற்குமாறு கோருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை வமமாகாண முதலமைச்சரிடம் வழங்குமாறு...

தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இதுவரை அயல் நாடுகளிடம் இந்தியா உதவி கோரவில்லையென யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபை உதவ முன்வந்தபோது, அதனை இந்தியா நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய துணைத்...

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவராணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னேடுக்க வடமாகாண சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாணத்தில் இருந்து எவ்விதமான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பான கலந்துறையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் அவைத்...

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "இந்தப் பாரிய இயற்கையின் சீற்றத்தால் தங்களது சொந்தங்களை மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்ப...

All posts loaded
No more posts