- Monday
- February 24th, 2025

தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரானது என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக அவரிடம் வினவிய போதே வடமாகாண சபையில் வைத்து இவ்வாறு நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பேரவையானது, தமிழரசு கட்சிக்கோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ...

தமிழ் மக்கள் அவை தொடர்பில் இரா.சம்மந்தனுக்கு நான் தெளிவுபடுத்தினேன். எனது தெளிவுபடுத்தலுக்குப் பின்னர் மக்கள் அவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என சம்மந்தன் என்னிடம் கூறியுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு இது எரிச்சலூட்டினால் அதற்று நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் அவை...

தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (30.12.2015) பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார்....

வட மாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 700 பேர் நியமிக்கப்படவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று புதன்கிழமை, வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...

அண்மையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என, மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பேரவை என்ற சொல்லை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்துடன் தொடர்புபடுத்தி பொது மக்கள் நோக்குகின்ற நிலை காணப்படுகின்றது. இது தொடர்பாக...

வட மாகாணசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் என அனைத்து துறைகளிலும் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் அமைந்துள்ள 110 வைத்தியசாலைகளில் 102 வைத்தியசாலைகளே செயற்படுவதாகவும், அவற்றில் 29 வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட கடமையில் இல்லாத நிலைமையே காணப்படுவதாகவும் அவ்...

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில் நடைபெற உள்ளது. கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (26.12.2015) பி.பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே...

புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புங்குடுதீவு கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (24.12.2015) விவசாயிகளைச் சந்தித்து முட்கம்பிச் சுருள்களை வழங்கி வைத்துள்ளார். புங்குடுதீவில் கட்டாக்காலி மாடுகளால் நெற்செய்கை பாதிக்கப்படுவது விவசாய சம்மேளனங்களால் வடக்கு விவசாய அமைச்சரின் கவனத்துக்குக்...

யாழ் மக்களுக்கு நன்னீர் வழங்கும் முகமாக மத்திய அரசினால் முன்மொழியப்பட்டு மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் கடல்நீரினை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிராக ஒரு தொகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றினை வடமராட்சி கிழக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று(23) இடம்பெற்றது.குறித்த பிரதேசத்திலிருந்து கடல்நீரை...

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன என கூறப்படுகிறது, யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை மூடிய அறையினுள் வைத்து இரகசியமாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக வடக்கு மாகாண சபையினால் சேர்க்கப்பட்டுவரும் நிதி உரிய காலத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் கையளிக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். நேற்றைய தினம் வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்திய...

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம். மாகாணசபை பேரவை செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வலி,வடக்கு உயர்பாதுகாப்பு...

வடமாகாண சபை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் 258 பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளோம். ஐ.நா தீர்மானங்கள் உள்ளிட்ட சில பிரேரணைகள் நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தெரிந்தும் நிறைவேற்றியுள்ளோம் என வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் திங்கட்கிழமை (21) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், வட மாகாண சபையின் அதிகாரங்களுக்குட்பட்ட...

ஒரு நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தால் அது வட மாகாண சபைக்கான அழைப்பு என்று யாரும் கருதக்கூடாது. முதலமைச்சர் மாத்திரம் வட மாகாண சபை அல்ல. உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் திங்கட்கிழமை (21) தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

வட மாகாணத்தில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான தேவைகளைக் கண்டறிவதற்காக மாவட்ட மட்டத்திலான கூட்டம் 5 மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளது. அத்துடன், மீள்குடியேற்றம் தொடர்பிலான மாகாண கொள்கை உருவாக்கப்படுவதாகவும் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியிடம் அதனைக் கையளிக்கவுள்ளதாகவும் வட மாகாண புனர்வாழ்வு அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலேயே அவர்...

வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் மோதல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது, இதன் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ரெலோ ஆகிய கட்சித் தலைமைகளின் கடந்தகால வண்டவாளங்கள் உறுப்பினர்களால் பரஸ்பராமாக உறுப்பினர்களால் சபையில் பலர் முன்நிலையில் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதம்...

'வைத்தியர்கள் மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வியைப் பயின்று வைத்தியர்களாக வருகின்றனர். அவ்வாறு வரும் வைத்தியர்கள் அந்தந்தப் பிரதேசங்களில் சிறிது காலம் பணியாற்றுவதை வடமாகாண சுகாதார அமைச்சு கட்டாயப்படுத்த வேண்டும்' என வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி...

யாழ்ப்பாணம் மாநகரக்குப்பட்ட பகுதிகளில் மோசமான சுகாதார சீர்கேடுகள் காணப்படுகின்றன. இதனை மாநகர சபை கவனத்தில் எடுத்து சீர்செய்யாவிட்டால் மாநகர சபை மீது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்' என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சுகாதார...

நேற்று வியாழக்வடமாகாண சபையைப் பற்றி கொழும்பிலிருந்து ஓநாயொன்று ஊளையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது...

All posts loaded
No more posts