- Monday
- February 24th, 2025

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை தயாரிக்க வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவசர பிரேரணையாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார். இதுவரை காலமும் இயற்றப்பட்ட அரசியல்...

குடாநாட்டில் அண்மைய காலங்களாக பனைமரங்கள் உரிய அனுமதி பெறப்படாமல் தறிக்கப்படுவதால் பனைவளம் அழிவடையும் நிலை எதிர்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதுவிடயத்தில் வடக்கு மாகாணசபை அக்கறையற்று இருக்கின்றமை மிகுந்த வேதனையளிப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எனது அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபையினூடாகவே பனை...

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கவிஞரும், பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்து, வடமாகாண சபையின் பேரவைச் செயலகத்துக்கு இன்று சனிக்கிழமை (23) விஜயம் மேற்கொண்டார். அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், வடமாகாண சபையையும் சுற்றிப் பார்வையிட்டார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முரணாக நடந்துகொள்ளப் பார்க்கிறேன் என எனக்கு எதிராக குற்ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. தமிழ் மக்கள் பேரவை ஒரு போதும் அரசியல் கட்சியாக மாறாது - எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் செயற்படாது - இதன் ஒரே இலக்குத் தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களுக்காகக் குரல் கொடுப்பதும் அவற்றுக்காகப்...

புதிய அரசியல் அமைப்பின் சீர்த்திருத்தங்கள் தொடர்பாக வட மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று நேற்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது புதிய அரசின் அரசியல் அமைப்பிற்க்கும் மக்களுக்கும் இடையில் காணப்படும் அதிகரித்துள்ள தொடர்பாடல்கள், சமூக இனங்களின் ஒற்றுமைக்கான வழிகள், மற்றும் பிரதேச...

தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், சர்வமதங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கதே. 1960 களில் சர்வமத சம்மேளனத்தின் உப செயலாளராக நான் இருந்தேன். பிரதமர் டட்லி சேனாநாயக பிரதமராக இருந்த காலத்தில் எங்கள் சம்மேளனம் இதையே செய்தது....

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர் பிரிவின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமை அகற்றி, அந்தக் காணிகளை மக்களுக்கு வழங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரேரணையொன்று, வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது....

நல்லூர் கல்வி கோட்டத்துக்குட்பட்ட இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டமைக்கு வடமாகாண சபையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது, நல்லூர் ஆனந்தா வித்தியாசாலை மற்றும் நல்லூர் ஞானோதயா வித்தியாலயம் ஆகியவை மூடப்பட்டமை தொடர்பில் விவாதம் இடம்பெற்றது. இதன்போது, கருத்துத் தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர் க.சர்வேஸ்வரன்,...

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறுகின்ற குழுக்கூட்டத்தில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் 4 அமைச்சர்களும் கலந்துகொள்வதில்லை. இனிவரும் கூட்டங்களில் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். வடமாகாண சபை அமர்வுக்கு முன்னதாக நடைபெறும் குழுக்கூட்டம் வடமாகாண சபையில் திங்கட்கிழமை (11) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அவைத்தலைவர்...

நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள சுன்னாகம் பகுதி மக்களுக்கு மாற்றீடாக வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களின் நிலையை அவதானத்தில் கொண்டு தனது ஆளுகைக்குட்பட்டுள்ள பிரதேச சபைகளின் ஊடாக குடிநீரை மீள வழங்க வடக்கு மாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

வடமாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று காலை யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர். வடமாகாணத்தில் 05 ஆண்டுகளுக்கு முற்பட்ட...

அரச அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள், சக அலுவலர்களுடன் சதா பேசிக் கொண்டிருப்பதையும் வேலையில் இருக்கும் போது அரசியல் பேசுவதையும் ஒரு பழக்கமாக்காதீர்கள். கட்டுப்பாடற்று கடமைகளை மறந்து பணிகளில் ஈடுபடுவதைப் பழகிக் கொள்ளாதீர்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 700 பேருக்கான நியமனங்கள்...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அடுத்துவரும் ஒரு சில வாரங்களில் அது வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வெளியான செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான...

கடந்த 2015ம் ஆண்டு எனது அமைச்சுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) மூலமாக 310.82 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றன. அதனடிப்படையில் கடந்த வருடம் ஏறத்தாழ 115 திட்டங்கள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டு; 31.12.2015 வரை அமைச்சு மற்றும் திணைக்களங்கள் ஊடாக செலவு செய்யப்பட்ட மொத்த நிதி 310.61 மில்லியன்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியொன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையொன்றை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறிந்து கொண்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உப குழுவில் சிவா பசுபதியை பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பு தொடர்பாகவும், அதனை அவர் நிராகரித்தது தொடர்பாகவும், வெளியான செய்திகள் விஷமத்தனமானவை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பை சிவா பசுபதி நிராகரித்துவிட்டார் என்று இந்திய...

வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களில், உள்ளூராட்சி அபிவிருத்தி உதவியாளர்களாக கடமையாற்றிய 22 பேரின் பதவி உயர்வுகளை வட மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு உரிய முறையில் வழங்குமா என பாதிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். கடந்த 2010 ம் ஆண்டு வடக்கு கிழக்கில் கடமையாற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி உதவியாளர்களுக்கான தடை தாண்டல் பரீட்சை மத்திய அரசினால்...

யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் வடிகான்களை மூடிய இராணுவத்தினர், யுத்தத்தின் பின்னர் இந்த வடிகான்களை மீண்டும் மறுசீரமைக்குமாறு தருமாறு கூறினேனே தவிர, இராணுவத்தினரை யாழ்பாணத்தில் குப்பை கான்களை தூர்வாருமாறு கூறவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபையைக் கட்டியெழுப்புவது தொடர்பான யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். யுத்தத்தின்...

வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டின் பாதீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் 99.66 வீதம் செலவழிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்; இன்று ஞாயிற்றுக்கிழமை (03.01.2016) வெளியிட்டிருக்கும் அந்த ஊடக அறிக்கையில், வடக்கு மாகாணசபையின் 2015ஆம்...

தேசியத் தலைவர் ஒருவரே, அவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. இவருக்கு முன்பும் ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. இவருக்குப் பின்னர் இனியொரு தேசிய தலைவர் உருவாகப் போவதில்லை.இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை மாலை நடைபெற்ற கட்சிக்...

All posts loaded
No more posts