- Wednesday
- January 22nd, 2025
முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (10) மாலை அவர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். இதன்போது ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது....
முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபை இரங்கல் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலியினை செலுத்துமாறு அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார். இதனையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தமை தொடர்பான வழக்கு தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த...
கூரை மேல் ஏறி குறை கூறிப் பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார். நாம் எதுவும் செய்ய முடியாது. அவரது கட்சி அவரை எதிர்க் கட்சிப் பதவியில் இருந்து நீக்கும் அவர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருக்கின்றாரே அதைப் போன்றுதான் முடியாதது என்று எதுவும் இல்லை. இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்குப் பதிலடி...
ஐந்து வருடங்களாக அதிகாரங்களை சரிவரச் செயற்படுத்த முடியாத முதலமைச்சர், இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்பதை நம்ப முடியாது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கில்...
கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தில் வட.மாகாண சபையினால் சுமார் ஆறு மில்லியன் ரூபா செலவில் நிமாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் தற்போது பயனற்றுக் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்று அமைக்கப்பட்டு அது கடந்த ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. வட.மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ்...
விஜயகலாவின் உரை தொடர்பில், தன்னிடமும் கேள்விகளைக் கேட்டனரென்று தெரித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது என்று கூறினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாரக் கேள்வி, பதிலின் போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் விசேட பொலிஸ் குழுவினரின் விசாரணை தொடர்பில் எழுப்பியிருந்த கேள்விக்கு அளித்துள்ள பதிலிலேயே,...
“மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கிய விடயத்தை அரச வர்த்தமானியில் வெளியிடாதது மாகாண ஆளுநரின் தவறாகும். வடக்கு மாகாண சபை சார்பாக ஆளுநர் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்டு அதை முன்வைத்து வடக்கு மாகாண சபையை கலைக்க சட்டம் இடம் கொடுக்காது” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “ஆளுநர் செய்த...
வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். டெனிஸ்வரனின் அமைச்சுப் பதவி தொடர்பாக விவாதிப்பதற்காக, வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நீதிமன்ற கட்டளை நிறைவேற்றப்படாவிடின், அந்த...
வட.மாகாண சபை கேலிக்குரியதாக மாறியமைக்கு ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே காரணமென வட மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆயுத போராட்டங்கள் ஊடாக பெறப்பட்ட குறைந்தபட்ச அதிகாரங்கள் கொண்ட மாகாணசபை, ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு...
வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து விவாதிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வடமாகாண சபையின் விசேட அமர்வின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கியை வைத்திருப்பதாக...
வட.மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனுக்கு எதிராக இன்று (திங்கட்கிழமை) வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வட.மாகாணசபை உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தார். இதன்போது பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் விதமாக குறித்த மாகாணசபை...
முல்லைத்தீவில் அனுமதி பத்திரமின்றி இயங்கிவரும் மருந்தகத்தில் பெற்றுக் கொண்ட மருந்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அவற்றை மூடுவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாக அமைச்சர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 126 வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை)...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு பத்திரமொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக, பா.டெனீஸ்வரனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். வடக்கு அமைச்சராக டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிப்பார் என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயற்பட வடக்கு முதல்வர் மறுத்து வருகின்றமை தொடர்பாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து வடக்கு முதல்வர் நீதிமன்ற...
வடக்கு மாகாணத்தில் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகிறது. வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் குறித்த பிரேரணையை சபையில் முன்மொழியவுள்ளார் என்று தெரிய வருகிறது. அவர் தனது பிரேரணையில், வடக்கு...
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தனது பதவியைத் துறக்கவேண்டும் என வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியது சட்டரீதியற்றதென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தவராசா...
“வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்” இவ்வாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான...
வடக்கில் பாரம்பரியமாக உள்ள சாதி அமைப்புக்குப் புறம்பாக புதியதொரு உயர்சாதி அமைப்பொன்று உருவாகியுள்ளது போல உள்ளது. அரசியல்வாதிகள் என்னதான் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும் ஒருவர் தவறு செய்தால் மற்றவர் அதனை நியாயப்படுத்தும் அல்லது பூசிமெழுகும் போக்கு வெளிப்படுகிறது என்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய்...
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 124...
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர் அனுப்புவதற்கு வட.மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வட.மாகாணசபையின் 124வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு சமர்பித்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் கருத்துத் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு...
Loading posts...
All posts loaded
No more posts