- Monday
- February 24th, 2025

வடமாகாணத்தின் அரசியல் நிர்வாக கட்டமைப்புக் கொண்ட தளமாக மாங்குளம் மாற்றப்படவேண்டும் எனக் கூறப்பட்ட போதும், அது தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தின் கலாசார தளமாக யாழ்ப்பாணத்தையும்...

வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் வியாழனன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உக்குளாங்குளத்தில் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியின் மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு சக மாகாண சபை உறுப்பினராகிய எம்.பி.நடராஜாவுடன் மோட்டார்...

இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும்...

தாய்லாந்தில் இடம்பெறவுள்ள 100 கிலோ மீற்றர் அஞ்சல் மரதன் ஓட்டத்தில் பங்கேற்க செல்லும் வீரருக்கு வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு எவ்வித உதவிகளையும் செய்யாத நிலையில் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ள சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த குமார் நவநீதன் என்ற வீரர் எதிர்வரும் 20ம் திகதி தாய்லாந்தில் இடம்பெறவுள்ள தாய்லாந்து பாங்கொக்...

வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் கீழ் வரும் வைத்தியசாலைகள், அலுவலகங்கள் என்பவற்றிற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் கோரப்பட்ட கேள்விப் பத்திரம் சம்பந்தமான ஆணை வழக்கை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளார். இந்தக் கேள்விப்பத்திர கோரலுக்காக விண்ணப்பம் செய்திருந்த பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்று, தனக்கு வரவேண்டிய...

மாதம் ஒருமுறை சிந்தித்து, வட மாகாண விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தீர்மானித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை, அலரி மாளிகையில் இவ்விருவரும் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. வட மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் 3 லட்சம் கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் வகையிலான மதிப்பீட்டு...

"வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கியுள்ள வாக்குறுதிக்கேற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவார் என்று நாம் நம்புகின்றோம்.''- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் தான் அயராது பாடுபடுவார் என்று...

வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஷ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடையிலான சந்திப்பொன்று இன்று (15) மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் முதலமைச்சருடன் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளமை...

வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்கள் என்பன கைதடியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சம்பிராதாயபூர்வமாக மாற்றப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண அமைச்சர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வட மாகாண முதலமைச்சர்...

முதலமைச்சர் சபையை முற்றாக புறக்கணித்துவிட்டார் என்பதை அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என வட மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் குற்றம் சாட்டினார். வவுனியா, கோவில்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர். கடந்த மாகாணசபை அமர்வின்போது விவசாய...

வடமாகாண தொண்டர் ஆசியர்களை, ஆசிரியர்கள் நியமனத்துக்குள் உள்வாங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தின் மூலம் மத்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் பிரமாணக் குறிப்பை மீறி எம்மால் எதுவும் செய்ய முடியாது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்தார். வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என கல்வி...

வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா, மடு ஆகிய கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவை பத்திரம்...

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்டு மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் 45ஆவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றய தினம் வடமாகாண சபையின் 45ஆவது அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி பிரேரணையினை சபையில் முன்மொழிந்திருந்தார். குறித்த பிரேரணை...

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக விசாரணை கோரி மாகாண சபையில் கூட்டமைப்பின் புளட் உறுப்பினர் லிங்கநாதனால் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று (9) நடைபெற்றது. அதன்போது, இரணைமடு நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பார்த்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் , பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான...

வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவிக்கப்படும் சில கருத்துக்கள் கன்சாட்டில் இருந்து நீக்கப்படுகின்றது என கூறப்பட்டால், அவற்றை ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டார். மேலும், உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்தானது, மாகாண சபையின் பதிவுப் புத்தகமான கன்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஊடகங்களில் அவை செய்தியாக வருகின்றன. இதனால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன....

மத்திய அரசாங்கத்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்போது வடமாகாண சபையும் கலைக்கப்படுமா என்பது தொடர்பில் தெரியவில்லையென வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வட மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே...

தற்போதைய காலத்தில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது, சர்வதேச அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தால் அவ்வளவு சரியென ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், சிரியாவிலும் அவ்வாறான பொதுமன்னிப்பு கொடுப்பது தவறு என தான் எடுத்துக் கூறியதாவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்ததாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, இவ்வாறான...

புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்கும் வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவிடம், போருக்கான காரணங்கள் மற்றும் அதன் பின்புலங்கள் தொடர்பான புராதன ஆவணங்களை கையளிக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, வடமாகாண சபை உறுப்பினர்கள்...

புத்தூர் பிரதேசத்தில் பெண் தலைமையிலான குடும்பம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் நிதியத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. முதலமைச்சர் நிதியத்தினால் செய்துகொடுக்கப்படும் இரண்டாவது இல்லம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் 6 இலடசம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புத்தூர் பிரதேசத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் விஜயம்...

All posts loaded
No more posts