- Monday
- February 24th, 2025

தனக்கு சுகயீனம் ஏற்பட்டமையால் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற 32ஆவது முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அரசியல் காரணங்களுக்காக நான் கலந்துகொள்ளவில்லை என்பது முற்றுமுழுதாக பொய்யெனவும், சுகயீனம் மாத்திரமே காரணம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 32ஆவது முதலமைச்சர் மாநாடு கடந்த 21ஆம் திகதி காலி ஹிக்கா ட்ரான்ஸ் ஹோட்டலில் ஜனாதிபதி...

'வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், வடக்குக்கு பொருத்தமில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்து அதனை நிறுத்த முடியும் தானே, பின்னர் ஏன் வீணாக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றுகின்றீர்கள்?' என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கேள்வியெழுப்பினார். வடமாகாண சபையின்...

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத் திட்டத்தை வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதுவரையில் அந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கோருகின்ற அவசர பிரேரணையொன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில்...

வவுனியாவில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ள இராணுவக் குடியிருப்புக்கு வடமாகாண சபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 48 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போது, ஜனாதிபதியால் எதிர்வரும் 3ஆம் திகதி வவுனியாவில் திறந்து வைக்கப்படவுள்ள இரணுவ குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் சபையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த...

சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனம் பெற்றுத்தர வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். ஆனால், அதில் பல தடைகள் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். அண்மைக்காலமாக நிரந்தர நியமனம் வழங்க கோரி சுகாதார தொண்டர்கள் வடமாகாண சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று வியாழக்கிழமை வடமாகாண சபையின்...

வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வுத் திட்டம், நாளை வியாழக்கிழமை நடைபெறும் மாகாண சபை அமர்வில் சமர்பிக்கப்படாது என்று தெரியவருகின்றது. அரசியல் தீர்வுத் திட்டம் இன்னமும் முழுமைப்படுத்தப்படாமையால் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறும் விசேட அமர்விலேயே சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அரசினால் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் வடக்கு...

அரசாங்கம் பல நன்மைகளை செய்து வந்தாலும், இராணுவம் இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ்ஸி ஜோன் ஹட்சசனுக்கு (Bryce Hatcesson) இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 1 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர்...

கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்திலுள்ள நன்னீர் பகுதி உட்பட வைத்தியசாலை வளாகம் இராணுவத்தால் தொடர்ந்தும் கையகப்படுத்தப்பட்டுள்ளது' என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் இடம்பெற்ற போரின் போது மக்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறியதையடுத்து, அப்பகுதியை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. தற்போது போர் முடிவடைந்து...

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை இலங்கைக் கடற்பரப்பில் கட்டுப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றில் தான் முன்வைத்துள்ள பிரேரணைக்கு வடக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அதன் உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். குறித்த விடயத்தை தனிநபர் சட்டமூலமாகக் கொண்டுவந்த அவரின் பிரேரணைக்கு மாகாண சபைகளின் கருத்துக்களை நாடாளுமன்றம் கோரியது. வடக்கு மாகாண...

1,000 லீற்றர் குடிநீர் பெறுவதற்கு 7.95 ரூபாய் செலவாகும் இரணைமடுக் குடிநீர்த் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அதேயளவு குடிநீர் பெற 140 ரூபாய் செலவாகும் மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்துக்கு வடமாகாண சபை ஆதரவு தெரிவித்து, அத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார். மருதங்கேணி குடிநீர்த்...

மறைந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும் தமிழரசுக் கட்சியின் மகளிர் அமைப்பின் செயலாளரும் தமிழ் அரசியலில் மங்கையரின் பங்கை மாண்புறச் செய்த திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன் என வடமாகாண் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன்...

தகவல் அறியும் சட்டமூலம் பிரிவு பிரிவாக விவாதித்து பரிந்துரைகள் வழங்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டபோதும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் சிலரின் பரிந்துரைகளுடன் தகவல் அறியும் சட்டமூலத்தை வடமாகாண சபை ஏற்றுக்கொண்டது. தேநீர் இடைவேளை வரை, தகவல் அறியும் சட்டமூலத்தைப் பற்றி தனித்தனியாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும். இதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அமர்வுகள் தேவைப்படும்...

மைதானங்களில் வைத்து பலர் பிடிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமற்போனமை தொடர்பில் தகவல் இல்லை. கேட்டால் தேசிய பாதுகாப்பு என்கின்றனர். இராணுவத்தினரின் குற்றங்களை மறைப்பது தேசிய பாதுகாப்பா?' என ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினர். இங்கு...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும் அவரது சடலத்துக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எந்தத் தகவலையும் இதுவரையும் வெளியிடவில்லை' என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது....

வடக்கு மாகாண சபையை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு மாதாந்தம் உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுடன் கடந்த சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சுமார் 6 மணித்தியாலயங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக...

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரம் பெறுவதற்காக, மின்சார சபையின் கடன் திட்டத்துக்குள் மாட்டிக்கொள்ள வேண்டாம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் இணைத்தலைவர்களில் ஒருவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பூநகரி பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பூநகரிப் பிரதேச செயலர்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் உணவு வழங்கலும் விநியோகமும் சுற்றாடலும் கூட்டுறவும் அமைச்சர் பி. ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக, முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. வடமாகாண சபை உறுப்பினர்களே, நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. வடமாகாண...

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு கோரி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொண்டு வந்த பிரேரணையால் வடமாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (25) தாமதமாக ஆரம்பமாகியது. இதன்போது, 8 உறுப்பினர்களின்...

கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களுக்கு தமது முயற்சிகளுக்கு ஆதரவு வேண்டி வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் எழுதிய மின்னஞ்சல் ஒன்று வெளியாகியுள்ளது அது இங்கே பிரசுரமாகிறது கேசவன் சஜந்தன் மீசாலை வடக்கு, மீசாலை. 2016-02-23 அன்பான வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே! மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் குறித்து இதனால் நாம் எமக்குள் பகிர்ந்துகொள்கின்றோம்;....

கடந்த 16.02.2016 அன்று வவுனியாவில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஷ்ணவி என்ற மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் 24.02.2016 வட மாகாணத்தில் நடைபெற இருக்கும் ஹர்த்தாலை பூரணமாக அனுஸ்ரிக்குமாறு பொது மக்களை கேட்டு நிற்கின்றார் வட மாகாண போக்குவரத்துக்கு அமைச்சர் பா. டெனிஸ்வரன். மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், கடந்த...

All posts loaded
No more posts