- Tuesday
- February 25th, 2025

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை சமரசம் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளில் ஒன்றான வடக்கு மாகாண சபையின் செயற்பாடு விமர்சனங்களுக்கு உள்ளாவதற்கு சபை உறுப்பினர்களின் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான அனுபவம் இன்மையே பிரதான காரணம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அவைத்...

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் 8 பேர் தமது விடுமுறைக்கு சபை அனுமதியினை கோரியுள்ளனர். வடமாகாணசபையின் 66ஆவது அமர்வு, நேற்று வியாழக்கிழமை (24) நடைபெற்றபோது,வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, உறுப்பினர்கள் ஞா.குணசீலன், இ.ஆனோல்ட், ஆயுப் அஸ்மின், எஸ்.சுகிர்தன், எஸ்.சிராய்வா, செ.மயூரன், கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், ஆகியோர், வெளிநாடு செல்வதற்காகச் சபையில் விடுமுறை கோரியிருந்தனர். இதற்கு சபை அனுமதியளித்தது.
வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்று அறிக்கையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றயதினம் சமர்ப்பித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அறுபத்தேழாவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது முதலமைச்சர் நிதிகூற்று அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். இதன்போது, 2017 ஆம் ஆண்டின் வட மாகாண சபை...

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானோரில் பட்டதாரிகளாக வெளியேறியுள்ள 35 பேருக்கு, முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரிய பிரேரணை, வட மாகாண சபையில் ஏகமனதாக, நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 66வது அமர்வு வியாழக்கிழமை, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இப் பிரேரணையை முன்மொழிந்தார். இறுதி...

வடக்கு. கிழக்கு மாகாணங்களில் அத்துமீறி பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இன துவேசமாக நடந்து கொண்டமை தொடர்பாக இன்றைய தினம் வட மாகாண சபையில் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு வட மாகாண சபை அமர்வில் பிரசன்னமாகியிருந்த சிங்கள மாகாண சபை உறுப்பினர்களால்...

'எனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, எனக்கு அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன்' என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாணசபையின் 66ஆவது அமர்வு நேற்றுச் வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவைத்தலைவரின் கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உரையாற்றும் போது, 'வடமாகாணத்தில்...

வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களே வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையில்லை என பொதுமக்கள் தெரிவிப்பதற்கான முக்கிய காரணம் என வடக்கு மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ம. தியாகராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையால் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக...

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தும் வகையில் சிங்கள மொழியில் பாடலொன்று வெளியாகியுள்ளது. குறித்த பாடலில் சமஷ்டியை கோரும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் முட்டாள் மற்றும் பைத்தியம் என அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், புலி உருவ பொம்மை ஒன்றை காட்சிப்படுத்தி, அதனை தனது செல்ல பிராணியாக வடக்கு முதல்வர் வளர்ப்பதைப் போன்றும்...

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் முன்னணின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக ஈபிடிபியைச் சேர்ந்த தவநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இருப்பினும், மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரை நீக்கும் உரிமை கட்சியின் தலைமைக்கு இல்லையெனவும், அதனை வடக்கு மாகாணசபை அவைத்தலைவரே முடிவு...

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட வரைபில் வடக்கு மாகாணத்துக்கான நிதியில் 1500 மில்லியன் ரூபாவை வெட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டதும், ஏனைய வருமானங்கள் அற்றதுமான வடக்கு மாகாணம் இதனால் திண்டாடி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் முதலமைச்சர்கள் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாகவும்,...

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை கட்சியிலிருந்தும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தும் நீக்கி, அப்பதவியை வேறொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி நீக்கம் குறித்த கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதில்...

நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை நிதிக்குற்ற பிரிவிடம் ஒப்படைப்பதற்கு வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை நடாத்திய மாகாண சபை குழு சபையில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. வடமாகாணத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல்...

இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள் வாங்கப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி என்பது கிடைக்கப் போவதில்லை என பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாய விவகாரங்களுக்கான அமைச்சர் பரோனஸ்அனெலியிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்த பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சரும்,...

சிறப்புரிமை தொடர்பாக வட மாகாண சபையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கிச் செல்ல முற்பட்டுள்ளார். எனினும் சக உறுப்பினர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. வட மாகாண சபையின் 65ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரை குறித்து...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக ஐ.நா. மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனெஸ் அனெலி தெரிவித்துள்ளார் . வடக்கு கிழக்கில் மனித உரிமைகள் மற்றும் உதவி தேவைப்படும் சிறுவர்கள் பெண்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். யாழ்...

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் 5 மணி வரை யாழ் மாநாகரசபை திடலில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக Rathee Event Management நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது. தனது விளம்பரத்தில் முதன்முறையாக ஹோலிப்பண்டிகை அறிமுகம் என தெரிவித்திருந்தது. இது முன்னர் 20 ம் திகதி என்றும் பின்னர் 27ம் திகதி என்றும் மாற்றப்பட்டு இறுதியாக...

வடக்கு மாகாணத்தின் சுகாதார அபிவிருத்திக்கென 600 மில்லியன் யூரோக்களை வழங்க ஒஸ்ரியா மற்றும் நியூஸ்லாந்து நாடுகள் முன்வந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் குறித்த தொகையானது வடக்கு மாகாணசபையிடமோ அல்லது மத்திய அரசாங்கத்திடமோ கையளிக்கப்படாது குறித்த நாடுகளின் நேரடி தலையீட்டுடனேயே அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண விவசாய அமைச்சால் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் மரநடுகை மாதம் கொண்டாடப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவது தடவையாக மரநடுகை மாதம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இது தொடர்பாகப் பொதுமக்கள் சிலரின் அபிப்பிராயங்கள் 30.10.2016 அன்று தினக்குரலில் வெளியாகியுள்ளது. அது இங்கே வலையேற்றப்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒரு வீரரை...

வடமாகாண சபை அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரனினால் உருவாக்கப்பட்ட குழு செயற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 3ஆம் திகதி தொடக்கம் இந்த குழு இயங்கும் என மாகாண சபையினால் அறிவிக்கப்பட்டது.எனினும் அவ்வாறான குழு செயற்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜீ பி லிங்கநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். முறைப்பாடொன்றை முன்வைக்க நேற்றைய...

வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்களால் 2.11.2016 அன்று அவரது முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட அழைப்பிதழ் சம்பந்தமாக சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .புத்தளம் பாரளுமன்ற உறுப்பினருக்கு வடக்கு மாகாணசபையுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் கௌரவிப்பு விழா நவம்பர் 6ம் திகதி எடுப்பதாக இந்த அழைப்பிதழ் கூறுகின்றது. அத்துடன் ஏற்பாட்டாளர்களாக கல்வி அமைச்சின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது அத்துடன் அரச...

All posts loaded
No more posts