- Tuesday
- February 25th, 2025

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான முடிவானது தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் அம்முடிவு, கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட முடிவாகும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண சபையின் எதிர்க்கட்சி...

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் நேற்று வட மாகாண சபை உறுப்பினராக பதவியேற்றார். வட மாகாண பேரவைச் செயலக்கத்தில் பேரவையின் தலைவர் CVK.சிவஞானம் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக அவர் பதவியேற்றுள்ளார். இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், சயந்தன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்....

புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகளில் முதலமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் அரச பிரதிநிதியொருவரை ஜனாதிபதி நியமிக்க முடியும் என பரிந்துரை செய்துள்ளதாக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என வட மாகாண சபை பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு...

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர்கள் மாகாணசபையில் உள்ளனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கு மாகாணசபையின் தீர்மானங்களைக் குப்பைத்தொட்டிக்குள் வீசுமாறு அண்மையில் நீதியரசர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். வெகு விரைவில் அவரே குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவார் எனவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் 2017ஆம்...

வடக்கு மாகாணத்தின் தேசிய அடையாளங்களான விலங்கு, பூ, பறவை என்பவற்றை மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு மீள் பரிசீலனைக் குழுவொன்றை அமைக்க வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நேற்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. குறித்த அமர்வில் ஏற்கனவே வடக்கு மாகாணத்திற்காக...

வட மாகாண சபைக்கான 2017 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் இன்று முதலமைச்சர் சீ.வி. வினேஸ்வரனினால் வாசிக்கப்பட்டது. வட மாகாண சபையில் ஒருங்கிணைந்த கட்டமைப்புக்கூடாக ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி ஆணைக்குழுவினால் 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத்திட்டத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வட...

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் எல்லையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் படையினர் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளின் உண்மையான விபரங்கள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படாமையால், தான் அறிக்கையொன்றைத்...

வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை எனவும், அடாத்தாக விகாரைகள் அமைக்கப்படுவதையே எதிர்ப்பதாகவும் என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போடுவதாக தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பாக வடமாகாண சபை பேரவை...

வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டவிரோதமான முறையில் பலாத்காரமாக புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே வடமாகாண சபை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர்...

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான குழுவுக்கு இதுவரையில் 5 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
மாகாண சபையின் 68ம் அமர்வு நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், அமைச்சர்கள் தொடர்பான விசாரணை குழுவுக்கு முறைப்பாடுகளை வழங்க மக்கள் சிலர் விரும்பும் நிலையில் விசாரணை குழுவி
ன் கால...

மாகாணசபை உறுப்பினர்களின் ஒதுக்கீட்டில் மக்களுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வட மாகாணசபையின் மாதாந்த அமர்விலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக தாம் முன்மொழிந்த மூன்று வேலைத்திட்டங்களை செயற்படுத்த முடியாதென்றும், இறுதி நேரத்தில் வந்து மாற்று வேலைத்திட்டத்தை மூன்று...

வடமாகாண அமைச்சர்களின் ஊழல் குற்ற சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது முதலமைச்சரினால் , அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான குற்ற சாட்டை விசாரணை செய்ய...

மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கறுப்பு சால்வை அணிந்து, வடமாகாண சபையின் அமர்வில் இன்று சபை அமர்வில் கலந்து கொண்டார்.

தமிழ் நாட்டில் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு பெரும் இழப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இரங்கல் வெளியிட்டுள்ளார். வால்வெள்ளி ஒன்று அரசியல் வாழ்வில் வானில் பளிச்சென்று பிரகாசமாக தோன்றி, திடீரென மறைந்துவிட்டதாகவும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்று அவைத்...

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசாவே இருப்பார் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசவையின் 67ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள வடக்கு மாகாணசபைக் கட்டத்தில் நடைபெற்றபோது அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இதனை அறிவித்தார். வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தவராசாவை நீக்கவேண்டுமென ஈழ மக்கள்...

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அஞ்சலி உரையை நிகழ்த்தினார். வட மாகாண சபையின் 67வது அமர்வு இன்றைய தினம் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இன்றைய சபையமர்வின் ஆரம்பத்திலேயே முதலமைச்சர் செல்வி...

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட நிர்வாகங்களில் ஊழல் அற்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வெற்றியடைய முடியவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையின்...

வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற விடயம் எதிர்வரும் 06.12.2016 அன்று மாகாண சபையின் அமர்வின் போது, தெரியவரும் என, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, நேற்றைதினம் யாழ் மாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் தற்போதை எதிர்கட்சித் தலைவர் சி.தவராஜா மற்றும் அதே கட்சியினை...

வடமாகாண சபைக்கான கட்டு நிதியில் மேலும் ஒரு தொகுதி நிதியாக 500 மில்லியன் ரூபா மத்திய திறைசேரி விடுவித்துள்ளதாக வட மாகாணத் திறைசேரியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவது , வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரைக்கும் 34 வீதமான நிதிகளே மாகாணத் திறைசேரிக்கு கிடைத்த நிலையில் நேற்றைய தினம் மேலும்...

வட, கிழக்கில் பௌத்த உரிமையை இல்லாது செய்யும் நடவடிக்கையில் வடமாகாண சபை, முன்னெடுத்துள்ளதாக இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். வடக்கில் அமைக்கபடும் விகாரைகள் தொடர்பில் வட மகாணசபையுடன் எந்த நேரத்திலும் விவாதம் செய்ய தயார் என அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

All posts loaded
No more posts