- Thursday
- December 26th, 2024
வடமாகாண சபையில் இதுவரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின், இவ்வருடத்தின் இறுதி அமர்வாக இன்றைய அமர்வு இடம்பெற்றது. “வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு முதலாவது அமர்வு 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி இடம்பெற்றதிலிருந்து இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற அமர்வுகள் வரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என...
வடக்கின் பாடசாலைகளை 7.30ற்கு ஆரம்பிக்கும் நேரத்தினை வடக்கின் கல்வி அமைச்சர் அவசரமாக மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் என பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண சபையின் 2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் கல்வி அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தின்போதே மேற்கண்ட கோரிக்கையினை விடுத்து உரையாற்றினார். இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு, கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் தெரிவுசெய்யப்பட்ட உரிய பயனாளிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், 10.11.2016 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தினைச்...
12 வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களினதும் கருத்துக்களைப் புறந்தள்ளி வடக்கு மாகாணசபை தவறான முடிவுகளை எடுப்பது மிகவும் வேதனைதரும் விடயமாக உள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் 1,064 மாகாணப் பாடசாலைகளும் 22 தேசிய பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளுமாக...
வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. செம்மலை மகா வித்தியாலயத்தில் நாளை திங்கட்கிழமை (26.12.2016) பி.பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...
வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கடந்த ஐந்து நாட்களாக இடம்பெற்ற விவாதத்தினை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் ஏகனமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்தனை வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்....
தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் விவசாய உற்பத்திகளுக்கும், கடலுணவுகளுக்கும் நிர்ணய விலையை புலிகள் பேணி வந்தார்கள் ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளமையினால் கடற்றொழிலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள் என மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு செலவு திட்டத்தில் மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மீதான குழுநிலை...
“ஒரு பலமான சமூகத்தினால் மாத்திரமே ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்” என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது 2017ம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் பட்ஜட் உரையில் உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது எமதுமக்களை ஒரு பலமான சமூகமாக வாழச் செய்ய வேண்டுமாக இருந்தால்அபிவிருத்தி...
பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என்பதே வட மாகாண சபையின் உறுதியான தீர்மானம் என வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வட மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...
சிறப்பு அதிகாரங்கள் கொண்ட அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி விசேட ஒழுங்குகள் சட்ட மூலத்திற்கு வடமாகாணசபையும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. அத்துடன் மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை பறிக்கும் வகையிலும், அதிகாரப்பகிர்வுக்கு மாறாகவும் இந்த புதிய சட்டத்தை தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் அரசாங்கம் உருவாக்கு முயல்வதாகவும் வட மாகாண சபை குற்றம்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால...
வடமாகாணத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீதான குழு நிலை விவாதம் நேற்று (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தார்....
உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பில் கலந்துகொள்ளப்போவதில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்புத் தொடர்பாக தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் எவ்வாறு கலந்துகொள்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு ஒன்று இன்று...
22.12.2016 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற முதலாவது வடக்கு மாகாணசபையின் 72ஆவது அமர்வில்விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை. கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ...
வடக்கு மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சரினை விமர்சித்து பேசியதால் சபையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே பெரும் அமளி துமளி ஏற்பட்டது. நான், நீ, போ, பேயா எனவும் கருத்து மோதல்கள் இடம்பெற்றமையால் அவையே நேற்று கலவரமாகியது.இந்த மோதல்களின் தொடர்ச்சியாக உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்க முயன்றமையால் பெரும் குழப்பம் ஏற்பட்டு ஒருமணித்தியாலம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. வடக்கு மாகாண சபையின்...
வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு ஒன்றிணைந்த பொலிஸ் - சிவில் பாதுகாப்புகுழுவினை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை...
மகளிர் விவகாரத் துறைக்கு, 2016ஆம் ஆண்டு, 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும், 2017ஆம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றாகக்...
வடமாகாண சபையின் அமர்வுகள் கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது. வடமாகாண சபையின் வரவு -செலவுத் திட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் செவ்வாய்க்கிழமை (20) முன்வைக்கப்பட்டு, அது தொடர்பிலான தற்போது விவாதம் இன்று புதன்கிழமை இடம்பெறுகின்றது. வடமாகாண உறுப்பினர் கே.சயந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகளை விமர்சித்து உரையாற்றினார். இதற்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள்...
வடக்கு மாகாணத்தில் முக்கிய அமைச்சாக விளங்கும் புனர்வாழ்வு அமைச்சிற்கு 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சிறிய தொகையொன்றை ஒதுக்கி இத்துறையில் முக்கியமாக முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளில் ஒன்றான முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 538 பேருக்கு இருக்கை மலசல கூடம் அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
2017ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி உயிரிழக்கலாம் என, எழுந்த அனுமானத்தின் பின்னணியில் கொலைச் சதித் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவே, தெரிகிறது என, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தான் ஏற்றுக் கொள்வதாகவும், இது பற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...
வடமாகாண சபையில் பேசப்படுகிற சிக்கலான விடயங்கள் குறித்து மாகாண ஆளுநருடன் பேச உள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞான
ம் சபைக்கு கூறியிருக்கும் நிலையி
ல் அந்த உரிமை அவை தலைவருக்கு உண்டா? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எவ்வாறாயினும் அவை தலைவருக்கு அந்த அதிகாரம் உண்டு என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் 70ம் அமர்வு தற்போது...
Loading posts...
All posts loaded
No more posts